தீர்க்கதரிசியாகிய எலிசா
ELISHA THE PROPHET
லேன் டெக் உயர்நிலைப்பள்ளி, சிகாகோ,
இல்லினாய்ஸ், அமெரிக்கா.
56-10-02E

1. சகோதரன் ஜோசப் அவர்களே, உமக்கு நன்றி. நாம் ஜெபிப்போம்.
எங்கள் பரலோகப் பிதாவே, இந்தப் பூமியின் மேல் சகலத்திற்கும் முடிவாக, இயேசுவின் வருகைக்கு இப்புறத்தில் இன்னும் ஒருவிசை, உம்முடைய இரத்தத்தினாலே சம்பாதித்துக் கொண்ட (purchase), உமது பிள்ளைகளிடம் பேசும்படி கிடைத்த நல்ல வாய்ப்புக்காக நாங்கள் இன்றிரவு உமக்கு நன்றி கூறுகிறோம். எனவே இவர்கள் வெளியே வந்திருக்கிறார்கள் என்பதற்காக நாங்கள் உமக்கு நன்றி செலுத்துகிறோம், இரண்டு மூன்று பேர் எங்கே ஒன்று கூடியிருந்தாலும், நீர் எங்களைச் சந்திக்கும்படி வாக்குப் பண்ணியிருக்கிறீர் என்று அறிந்து கொள்ளும் போது, நான் மிகவும் சந்தோஷப்படுகிறேன்.
2. இப்பொழுதும், ஓ கர்த்தாவே, எங்கள் மேல் பரிசுத்த ஆவியானவரைக் கொண்டு இன்னும் ஒரு விசை அசைவாடும். அவருடைய வல்லமையிலும் அவருடைய அழகிலும் எங்கள் ஆத்துமாக்களை ஸ்நானம் செய்யும், கிறிஸ்துவைத் தவிர வேறு எதையும் காணாது இருக்கட்டும். இன்றிரவு வியாதியஸ்தர்களும் அல்லற்படுகிறவர்களும் அவைகளை இந்த இரவிலேயே ஒருபுறமாக ஒதுக்கி வைத்து விட்டு, அவர்கள் வருவதை இயேசு விரும்புகிறார் என்றும், அதற்காக அவர் காத்துக் கொண்டிருக்கிறார் என்றும் அவர்கள் தாமே காணும் படியான வார்த்தைகளை என்னால் பேச இயலுவதாக. அநேகர் சுகமடைவார்களாக, அநேகர் இரட்சிக்கப்படவும் செய்வார்களாக, நாங்கள் இதை கிறிஸ்துவின் நாமத்தில் வேண்டிக் கொள்கிறோம். ஆமென்.
3. இப்பொழுது, இன்றிரவில் கர்த்தருடைய ஆராதனைக்கு திரும்பிவருவதில் சந்தோஷம் அடைகிறோம். இந்தப் பிற்பகலில் பிலதெல்பியா சபையில் பேசும் போது, ஜனக்கூட்டத்தை ஒருவிதத்தில் சற்று தாமதமாக பிடித்து வைத்துக் கொண்டிருந்தோம்; ஆனால் இந்தப் பிற்பகலில் பிலதெல்பியா சபையில் எங்களுக்கு உண்மையாகவே ஒரு அற்புதமான நேரம் உண்டாயிருந்தது.
4. நான் இதை கூறுவதைக் கேட்கப் போகிற அந்தப் பெண் சற்றே புன்முறுவல் செய்யலாம், ஆனால் அவள் ஒரு மெதோடிஸ்டாக வளர்ந்தாள். அங்கே அறியப்படாத பாஷைகளில் ஒன்று அல்லது இரண்டு செய்திகள் கொடுக்கப்பட்டு, அதற்கு அர்த்தம் சொல்லப்பட்டன. அது அப்படியே ஏளன நகைப்பிற்கு இடமான நிலையில் இருப்பதை நான் கண்டிருக்கிறேன். அது அப்படியே ஒழுங்கில் வைக்கப்படாமல் இருப்பதையே கண்டிருக்கிறேன், ஆனால் இந்தப் பிற்பகலிலோ அது எந்தவிதத்தில் வந்தது என்றால், அதில் முழுவதுமாக ஒன்றாகத் திரண்ட பெரும் கூட்டமாக இருக்கவில்லை, அப்படியே வேதாகமம் கூறுவது போன்று: மூன்றே பேர் தான். அதில் இரண்டு பேர் ஜனங்களிடம் போனார்கள், பொதுமக்கள் (laity); மற்றவர் நேராக ஊழியத்துக்கு நடத்தப்பட்டவர். அந்தப் பெண் வெளியே வந்து, "பதில் சொல்லுங்கள், அது அற்புதமாக இல்லையா-?" என்று கேட்டாள்.
5. அவ்வாறு, நான், "ஆமென். அது அற்புதமாக இருந்தது” என்றேன். கர்த்தர் மறுபடியும் இறங்கி வந்து, அதே விதமாக அசைவாடி, அப்படியே சரியாகச் செய்வதை காணும் போது, அது அற்புதமாக இருந்தது. அது ஜீவனுள்ள.... அது கிறிஸ்து இயேசுவுக்குள் உன்னதங்களில் ஒன்றாக உட்கார்ந்திருப்பதாக இருக்கிறது. நான் அதை என்னுடைய முழு இருதயத்தோடும் விசுவாசிக்கிறேன்.
6. இப்பொழுது, இன்றிரவில், நாம் இந்நேரத்தை வியாதியஸ்தருக்காக ஜெபிக்கும்படி, ஒரு ஜெபவரிசைக்காக ஒதுக்கியிருக்கிறோம். மேலும் இன்றிரவு, தேவனுக்குச் சித்தமானால், சகோதரன் ராபர்ட்ஸ் அவர்களையும், சகோதரன் டாமி ஹிக்ஸ் அவர்களையும், சகோதரன் வால்டெஸ் அவர்களையும், ஜாக் கோ அவர்களையும், சகோதரன் ஆஸ்பார்ன் அவர்களையும், மேலும் (மற்றவர்களையும் போன்று, நான் வியாதியஸ்தர்களுக்காக ஜெபிக்க விரும்புகிறேன்: அப்படியே அவர்களை அழைத்துவந்து, அவர்களுக்காக ஜெபித்தல்.
7. இவ்வாறாக, பெரிய அளவில் இருந்த அருமையான இரவு உணவு எனக்கு உண்டாயிருந்தது, வழக்கமான அளவுக்கும் அப்பால் மாட்டு இறைச்சியால் செய்யப்பட்ட பதார்த்தத்தை நான் கொண்டிருந்தேன், ஒரு மகத்தான பெரிய ஒன்று - மேலும் அதனோடு கூட அதிகப்படியான எல்லா காரியங்களும் இருந்தன. எனவே நான்-நான் வழக்கமாக பகுத்தறிதலின் கீழாகவோ அல்லது ஜெபத்தின் கீழாகவோ வந்து, நான் தொடர்ந்து ஜெபத்தில் ஈடுபடுகிறேன், எனவே அங்கே.... இருக்காது. அப்படியே ஒவ்வொரு நொடிநேரத்தையும் கவனிக்க வேண்டியிருக்கிறது.
8. ஆனால் இன்றிரவோ, சற்று நேரம் பேசும்படி கட்டற்று சுயாதீனமாக இருக்கும் போது, பிறகு ஜனங்களை அதனூடாகக் கொண்டு வந்து, அவர்களிடம் பேசி, அவர்களோடு ஜெபம் செய்வோம்.... என்று பார்ப்போம். இங்கே இன்றிரவில் கர்த்தர் மகத்தான காரியத்தைச் செய்யப் போகிறார் என்று நான் விசுவாசிக்கிறேன்; நான் அப்படியே அதை விசுவாசிக்கிறேன். நான் ஒரு விதத்தில் கர்த்தருக்கு முன்பாக இதை கொஞ்சம் அனுமதியின்றி எடுத்துக் கொள்கிறேன் (fleece). அது அப்படியே சரியாக வேலை செய்வதாக தோன்றினால், நல்லது அப்படியானால், ஒவ்வொரு இரவும் இவ்விதமாக முன்னால் சென்று, ஜனங்களுக்காக ஜெபிக்க, ஒருக்கால் கர்த்தர் என்னை அனுமதித்திருப்பாரானால்: அந்த முழு கூட்டத்தினருக்கும் ஜெபிக்க அனுமதித்தால்.
9. எனவே, சகோதரன் ஜோசப் அவர்கள் சற்று முன்பு கூறினது போன்று.... அவர்-அவர் ஒரு சிறு அருமையான சுவீடன் நாட்டைச் சேர்ந்தவராயிருக்கிறார். அவர் நிச்சயமாக அவ்வாறு இருக்கிறார். ஆம், ஆமாம். நான் அவரை நேசிக்கிறேன், ஆனால், ஓ, என்னே, அவர்-அவர் அவ்வளவு அருமையான காரியங்களைக் கூறுகிறார். அவர் அதைக் கூற நான் விரும்பவில்லை, ஆனால் அவர் எப்படியும் அதைக் கூறிவிடுகிறார், புகழ், புகழை விரும்பாத விஷயத்தைக் குறித்து; புகழை - ஒருபோதும் விரும்பவில்லை. நான் நேர்மையாக இருக்கவே விரும்புகிறேன், பிரபலமாக அல்ல, நேர்மையாக இருக்கவே விரும்புகிறேன். பிரபலமாக இருக்கும்படி நான் எதையும் கூறுவதில்லை. நான் அந்தவிதமாக இருக்க வேண்டுமென்று கருதவில்லை. அது....
10. நான் பிரபலமாக இருக்க விரும்புகிற ஒரே ஒரு சிறிய இடம் யாதெனில் இயேசு வரும் போது தான். அப்போது நான்-நான் மிகவும் புகழ் பெற்றவனாக இருந்து, அவர், "நல்லது, நல்லது, என்னுடைய உத்தமமும் உண்மையுமுள்ள ஊழியக்காரனே. இப்பொழுது வந்திருக்கிற இவர்கள் யாவரும், நீங்கள் யாவரும் கூடி வாருங்கள்" என்று அவர் கூறுவதைக் கேட்கவே விரும்புகிறேன். ஓ, என்னே. என்னால் கூடிய மட்டும், அவரோடு நெருக்கமாக நடக்க விரும்புகிறேன், நீங்களும் அவ்வாறு விரும்பவில்லையா-? எனவே அப்போது தான் நான் பிரபலமாக இருக்க விரும்புகிறேன்.
11. காலஞ் சென்ற திரு. ரூஸ்வெல்ட் அவர்கள் இந்தச் சிறு பட்டணத்திற்கு வந்த போது; என்னுடைய பட்டணமானது அவருக்கு மிகவும் சிறியதாக இருந்தது; ஆனால் அவர், எனக்கு சற்று கீழேயுள்ள நியூ ஆல்பெனிக்கு வந்திருந்த போது.... எங்களுக்கு ஏறக்குறைய 21,000 வாக்குகள்) கிடைத்தன என்று நினைக்கிறேன்; அவர்களுக்கோ ஏறக்குறைய 27,000 (வாக்குகள் கிடைத்தன. ஆனால் அவருடைய தேர்தல்களில் ஒன்றில் அவர் அங்கே நிறுத்தி, தேர்தல் பிரச்சாரம் செய்த போது (electioneering), ஓ, என்னே, திரு. ரூஸ்வெல்ட் அவர்களைக் காண எல்லாருமே அங்கே சுற்றிலுமுள்ள முழு தேசத்தையே நிரப்பிவிட்டார்கள். நல்லது, அப்போது நான் சகேயுவைப் போல இருந்தேன், நான் மிகவும் சிறியவனாக இருந்தேன், எனவே நான்.... அந்தக் கூட்டத்தை நேரடியாகப் பார்க்கும்படிக்கு, அவ்வண்ணமாக நான் மேலே மலையின் உச்சிக்குப் போய் விட்டேன்.
12. பிறகு அந்த ரயில் வண்டியானது நதிக்கு அருகில் நின்றது. அவர்... அதன் பின்னால் நின்றிருந்தார், அல்லது சற்று பேசும்படியாக அந்த ரயில் வண்டியின் பின்பாகத்தில் இருந்தார். எனவே நான்-நான் என்னுடைய பாரவண்டியை மேலே ஒரு கொட்டாரத்திற்குப் பின்பக்கமாக (நிறுத்தி விட்டு), அதைப் பார்க்கும்படிக்கு மேலே அந்தக் கொட்டாரத்தின் உச்சிக்கு ஏறினேன். நான், “நல்லது, உனக்குத் தெரியும், நான் இப்பொழுது இங்கிருக்கிறேன் என்று யாருக்குமே தெரியாது; அநேகமாக திரு. ரூஸ்வெல்ட் அவர்களுக்கும் இது தெரியாது” என்று நினைத்துக் கொண்டேன். அது அதிக வித்தியாசத்தை உண்டாக்குவதில்லை.
13. ஆனால் இயேசு வரும் போது, அவர் சகேயுவைப் பார்த்துக் கூறினது போன்று, "இப்பொழுது, அந்தக் கொட்டாரத்தை (shed) விட்டு கீழே இறங்கி வா" என்று என்னிடம் கூறும் அவ்வண்ணமாக ஜீவிக்கவே விரும்புகிறேன். நாமெல்லாருமே அந்த விதமாகத் தான் உணருகிறோம் என்று நிச்சயமுடையவனாயிருக்கிறேன், நாம் அவ்வாறு உணர மாட்டோமா-?
14. சமீபத்தில், வழக்கமாக என்னோடு இருக்கும் சகோதரனும், கூட்டங்களை (campaigns) நிர்வகிப்பவருமாகிய சகோதரன் பாக்ஸ்டர் அவர்கள், அவர் சரியாக இங்கே சிகாகோவிலேயே அநேக முறைகள் உங்களிடம் பிரசங்கம் பண்ணியிருக்கிறார், அவர் பேசிக் கொண்டிருந்தார், மறைந்த ஜார்ஜ் மன்னரும் ராணியும் வான்கூவர் பக்கமாக வந்து கொண்டிருந்தார்களாம்.... அது அவர் சுகமடைவதற்கு முன்பாக நடந்த காரியமாகும், அவருடைய வயிற்றில் அவருக்கு குடற்புண் இருந்தது, அவருக்கு தண்டுவட மரப்பு நோய் (அல்லது மல்ட்டிபிள் ஸ்களீரோசிஸ் (Multiple sclerosis) என்பது மூளை மற்றும் முதுகுத்தண்டை மூடியுள்ள கொழுப்பான மையிலீன் (myelin) உறையில் ஏற்படும் நோயாகும், இந்நோயால் மையிலீன் உறையழிந்தோ, பாதிப்படைந்தோ அல்லது வடுக்களுடனோ பல்வேறு நோய் அறிகுறிகளுடன் காணப்படும். இந்நோய் பெரும்பாலும் இளம் வயதினரையும் அதிலும் பெண்களையே தாக்குகின்றது. இது தோராயமாக ஒரு இலட்சம் நபர்களில் 2 இலிருந்து 150 பேர் வரை காணப்படுகின்றது. எம்.எஸ் நரம்பு செல்கள் மூளை மற்றும் முதுகுத் தண்டுக்கிடையே கொண்ட தொடர்பை பாதிக்கிறது. - மொழிபெயர்ப்பாளர்.) இருந்தது, அவரால் உட்காருவதற்கும் கஷ்டமாக இருந்தது, இருப்பினும் அவருடைய இராஜரீக இரத்தத்தை உடையவராயிருந்தார், அவர் வீதிகளினூடாக கடந்து போய்க் கொண்டு இடருக்கையில், தமக்கு எந்த தவறும் (வியாதியும்) இல்லாதவர் போன்றே உட்கார்ந்திருந்தார். திரு. பாக்ஸ்டர் அவர்கள், அங்கே தம்முடைய இராஜாவும் ராணியும் அருகிலேயே கடந்து போய்க் கொண்டிருந்த காரணத்தினால், தாம் அங்கே எழுந்து நின்று, அழுததாக கூறினார். நான், "ஓ, ஒரு பூமிக்குரிய இராஜாவையும் இராணியையும் குறித்து, அது ஒரு கனடா நாட்டவரை உள்ளத்தில் உணர்ச்சியடையச் செய்திருக்குமானால், இயேசு வரும் போது, அது என்னவாக இருக்கும்-?" என்று நினைத்தேன். என்னே.
15. நான் அவரைக் கண்டு, நாம் அவரை இராஜாதி இராஜாவாகவும் கர்த்தாதி கர்த்தாவாகவும், கிரீடம் சூட்டும் போது, எல்லா "ஓசன்னாக்களையும்" கேட்பேன், எல்லா காலங்களிலும் மீட்கப்பட்ட யாவரும் இந்த பூமியின் மேல் நின்று, மீட்பின் துதிகளையும் பாடல்களையும் பாடிக் கொண்டிருக்கும் போது, பூமியைச் சுற்றிலும் தூதர்கள் வட்டமாகத் தங்களுடைய தலைகளைத் தாழ்த்தியிருக்க, நாம் எதைக்குறித்து பேசிக் கொண்டிருக்கிறோம் என்பதையும் கூட அவர்கள் அறியாமல் இருப்பார்கள். அவர்கள் ஒருபோதும் மீட்கப்பட்டிருக்கவில்லை. அவர்கள் மீட்கப்பட அவசியமில்லாதிருந்தது; அவர்கள் ஒரு போதும் விழுந்து போய் இருக்கவில்லை. ஆனால் ஆதாமுடைய விழுந்து போன மனுக்குலமாகிய நமக்கு மீட்பு அவசியமாயிருந்தது. அவ்விதமாகத்தான் மீட்கப்படுதல் என்றால் எதை அர்த்தப்படுத்துகிறது என்பதை நம்மால் பாட முடிகிறது. அவர் தமது இரத்தத்தினாலே நம்மைத் திரும்பவும் தேவனிடம் மீட்டுக்கொண்டார்.
16. இப்பொழுது, நான் முன்னோக்கி அந்த நாளுக்காக எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன், தேவனுடைய இராஜ்யத்திற்கு நன்மையாக இருக்கும் என்று என்னால் கூடுமான, எனக்குத் தெரிந்த ஒவ்வொரு பிரயாசத்தையும் பண்ணிக் கொண்டிருக்கிறேன். தவறாகப் புரிந்து கொண்டு விட்டீர்களா-? நிச்சயமாக. அது சரியே. ஆனால் நான் அதற்காகத் தான் காத்திருக்கிறேன். நான் அதைத் தவறாக புரிந்து கொண்டிருக்கவில்லை என்றால், ஏன், நான் சோதித்துப் பார்த்து, என்ன தவறாக இருக்கிறது என்று கண்டிருப்பேன் என்று நினைக்கிறேன்.
17. இப்பொழுது, நாளை இரவில், கர்த்தருக்குச் சித்தமானால், தேவனுக்குச் சித்தமானால், இரட்சிப்பு சம்பந்தமான ஒரு-ஒரு-ஒரு செய்தியைப் பிரசங்கிக்க விரும்புகிறேன், நாம் எதிர்பார்த்துக் கொண்டிருப்போம்... நாளை இரவில், பீட அழைப்புக்காக பாவியாக இருக்கும் உங்கள் நண்பர்களை அழைத்து வாருங்கள், எத்தனை பேர் சேவிப்பார்கள் என்றும், நாளை இரவில் கர்த்தரை சேவிக்கும்படியாக, எத்தனை பேர் வருவார்கள் என்பதையும் நாம் காண்போம். நிச்சயமாக (Course) இன்றிரவிலும் கூட, அல்லது எந்த நேரத்திலுமே நீங்கள் கரத்தரை சேவிக்க விரும்புகிறீர்கள்... உங்களை கர்த்தராகிய இயேசுவிடம் அறிமுகம் செய்து வைக்கும்படி, எவ்வாறு என்று எங்களுக்குத் தெரிந்த மிகச் சிறந்த வழியை நாங்கள் உங்களுக்குக் காண்பிக்க ஆயத்தமாயிருக்கிறோம்.
18. அதன்பிறகு, நிச்சயமாக (course), நாளை இரவிலும் இதைப் போன்றே வியாதியஸ்தருக்காக நாம் ஜெபம் பண்ணுவோம். பிறகு அடுத்த இரவு என்னுடைய கடைசி இரவாக இருக்கும், ஆனால் கூட்டமானது இங்கேயிருக்கப் போகிற கர்த்தருடைய மகத்தான ஊழியக் காரர்களைக் கொண்டு தொடர்ந்து நடைபெறும், அவர்கள் மகத்தான மனிதர்களாகவும் மகத்தான வல்லமையுள்ள பேச்சாளர்களாகவும் இருக்கிறார்கள். நீங்கள் அவைகளை மிக, மிக அதிகமாக கேட்டு மகிழ்வீர்கள் என்ற நிச்சயமுடையவனாயிருக்கிறேன்.
19. இப்பொழுது இன்றிரவில், கர்த்தருக்குச் சித்தமானால், சற்று முன்கூட்டியே இங்கிருந்து வெளியே போகும்படியாகவும், ஜெப வரிசைக்காக சற்று கூடுதல் நேரத்தைக் கொடுக்கும் படியாகவும் அப்படியே இந்த பிரசங்கத்தினூடாகப் போகலாம்); நாம் பழைய ஏற்பாட்டிலிருந்து ஒரு வேதபாகத்தை வாசிக்க விரும்புகிறேன், 2 இராஜாக்கள் 4-ம் அதிகாரம், 21-வது வசனம்.
அப்பொழுது அவள் ஏறிப்போய், அவனை தேவனுடைய மனுஷன் கட்டிலின்மேல் வைத்து, அவன் வைக்கப்பட்ட அறையின் கதவைப் பூட்டிக்கொண்டுபோய்,
இப்பொழுது, கர்த்தர் தாமே தம்முடைய வார்த்தையோடு தமது ஆசீர்வாதங்களைக் கூட்டுவாராக.
நாம் பேசுவதற்கு முன்பாக, அவரிடம் இன்னொரு சிறு ஜெபத்தை பண்ணுவோம். நாம் ஜெபிப்போமா-?
20. பரலோகப் பிதாவே, இப்பொழுது, இது உம்முடைய வார்த்தையாக இருக்கிறது. நாங்கள் பெரிதும் நேசிக்கும் எங்களுடைய இத்தேசத்தில் இன்னுமாக பேச்சு சுதந்திரத்தை நாங்கள் கொண்டிருப்பதற்காக, இன்றிரவு நாங்கள் மிகவும் சந்தோஷமாயிருக்கிறோம்.... மேலும், ஓ, அது அப்படியே படிப்படியாக ஒரு வீட்டின் கீழிருக்கும் கரையான்களைப் போன்று, அதை முழுவதுமாக தின்று கொண்டிருக்கிறது என்பதைக் காணும்போது, அது எப்படியாக எங்கள் இருதயங்களை விசனப்படுத்துகிறது.
21. மேலும், ஓ, நாங்கள் எப்படியாக உம்மைக் குறித்துப் பேசவும், ஜனங்களிடம் உம்மைக் குறித்துப் பேசுவதற்கும், இயேசு ஏதோவொரு நாளில் வந்து, அவருடைய பிதாவின் சிங்காசனத்தில், தாவீதின் சிங்காசனத்தின் மேல் வீற்றிருக்கும் போது, நாங்கள் ஒரு இராஜ்யத்தைப் பெற்றுக் கொள்வோம் என்ற இதை அறிந்தவர்களாக, அவர்களுடைய முகங்கள் பிரகாசமாகவும், அவர்களுடைய கன்னங்களில் ஆனந்தக் கண்ணீர் வடியவும், உம்மை நேசிப்பவர்களைக் காண்பதற்கும் விரும்புகிறோம். அங்கே ஒவ்வொரு இருதயத்திலும் சமாதானம் ஆளுகை செய்யும் ஆயிரம் வருடங்கள் இருக்குமே. ஓ, இயற்கையும்கூட புலம்பி, அந்நாளின் அந்த மகிமையான நேரத்திற்காக காத்துக் கொண்டு இருக்கிறது. நாங்கள் இராஜாவின் வருகைக்காக எதிர்நோக்கிக் கொண்டிருக்கிறோம்.
22. நாங்கள், இன்றிரவில், அவருக்காக இங்கே வாக்குகளை சேகரித்துக் கொண்டிருக்கையில் (electioneering), ஓ தேவனே, நீர் இன்றிரவு, ஏதோவொரு விதத்தில், உம்முடைய சொந்த வழியில், ஒவ்வொரு இருதயத்திலும் பேச வேண்டுமென்று நான் ஜெபிக்கிறேன், கீழே தொங்கிக் கொண்டிருக்கும் அந்தக் கரங்கள் மேலே உயர்த்தப்படுவதாக. நீர் பலவீனர்களையும், வியாதியாகவும் சோர்ந்து போயிருக்கிறவர்களையும் ஆசீர்வதிக்க வேண்டுமென்று ஜெபிக்கிறேன். இன்றிரவு அவர்கள் தாமே பெலனடைவார்களாக, இந்தக் கூட்டத்திற்குப் பிறகு, அவர்கள் தாமே, தங்கள் கரங்களை உயர்த்தினவர்களாக, களிகூர்ந்து கொண்டும், தேவனைத் துதித்துப் பாடிக்கொண்டும் இந்த பாடசாலை வளாகத்தைக் கடந்து வெளியே போவார்களாக; சக்கர நாற்காலிகளில் இருக்கிறவர்கள் நடந்து, சத்தமிட்டு, துள்ளிக் குதித்துக் கொண்டு வெளியே போவார்களாக. இதை அருளும், பிதாவே, நாங்கள் இதை சுவிசேஷத்தின் நிமித்தமாகவும், வார்த்தையின் நிறைவேறுதலுக்காகவும், இயேசுவின் நாமத்தில் வேண்டிக் கொள்கிறோம். ஆமென்.
23. இன்றிரவு நம்முடைய பொருளானது பழைய ஏற்பாட்டின் ஒரு தீர்க்கதரிசியைப் பற்றியதாகும். நாம்... இந்தப் பிற்பகலில் எத்தனை பேர் பிலதெல்பியா சபையில் இருந்தீர்கள்-? உங்கள் கரங்களைப் பார்ப்போம். அது அருமையானது. மேலும் இப்பொழுது, நாங்கள் இந்தப் பிற்பகலில் பழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசியாகிய மிகாயாவைக் குறித்துப் பேசிக் கொண்டு இருந்தோம். வேதாகமம், அல்லது எபிரெய நிருபமானது அதை நமக்குக் கூறுகிறது. பழைய ஏற்பாட்டின் இவைகள் எல்லாமே, நம்மால் காணக்கூடிய நிழல்களாகவும், முன் அடையாளங்களாகவும், அடையாளமாகவும், தூரத்தைச் சுட்டிக் காட்டும் மைல் கற்களாக (mileposts) இருப்பதாகவும், அவைகள் திருஷ்டாந்தங்களாக இருப்பதாகவும் எபிரெயர் 12-ம் அதிகாரம் கூறுகிறது.
24. மனிதன் தேவனைச் சேவிக்கத் தவறிப்போன போது, என்ன சம்பவித்தது. உண்மையான போர்வீரர்களைப் போன்று தொடர்ந்து எதிர்த்து நின்று, தேவனைச் சேவித்த மனிதர்களை நாம் காண்கிறோம்; அப்போது என்ன சம்பவித்தது என்பதையும் நாம் காண்கிறோம். எனவே நம்மால் அங்கிருந்து ஒரு தேர்ந்தெடுப்பைச் செய்ய முடிகிறது. இன்றிரவு, ஆராதனைகள் முடிவதற்கு முன்பாகவே, கிறிஸ்துவை உங்கள் தெரிந்தெடுப்பாகச் செய்யப் (போகிறவர் களாய்), வழியை விட்டு வெளியே இருக்கிற யாராவது இங்கே இருப்பீர்களா என்று இன்றிரவிலே நம்புகிறேன்.
25. உங்கள் கவனம் உலகத்தின் காரியங்களை விட்டு கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை நோக்கித் திரும்பும்படிக்கு ஏதுவாக இருக்கும் ஏதோவொன்றைக் கூறும்படியான வார்த்தைகளை தேவன் ஏதோவொரு விதத்தில் நமக்குத் தருவாராக. அவரை அறிந்து கொள்வது தான் ஜீவன்; சபையை அறிந்து கொள்வதோ, அல்லது ஞானோபதேச வினாவிடையாகக் கற்பிக்கப்படும் பாடத்தை அறிந்துகொள்வதோ ஜீவன் அல்ல. வேதாகமத்தை அறிந்து கொள்வது அவ்வளவு நன்றாக இருக்கிற போதிலும், அதை அறிந்து கொள்வது அல்ல, வேதாகமத்தை அறிந்து கொள்வதல்ல ஜீவன். சாத்தானுக்கு வேதாகமம் மிக நன்றாகத் தெரியும். ஆனால் அவரை அறிந்து கொள்வது தான் ஜீவனாக இருக்கிறது. கிறிஸ்துவை சொந்த இரட்சகராக அறிந்து கொள்வது தான் எல்லோருக்கும் ஜீவனாக இருக்கிறது.
26. இப்பொழுது, இன்றிரவில், நாம் பேசிக் கொண்டிருக்கும் தீர்க்கதரிசி எலிசாவாகும், அவன் எலியாவுக்கு பின் வந்த தீர்க்கதரிசியாக இருக்கிறான். எலியா ஒரு மகத்தான மனிதனாக இருந்தான். அவன்.... இங்கே அன்றொரு இரவில், தேவனுடைய நியாயத்தீர்ப்பாகவோ, அல்லது தேவனுடைய நீதியாகவோ, அவனைக் குறித்துப் பேசினோம். எலியா ஒரு மகத்தான வல்லமையுள்ள தீர்க்கதரிசியாக இருந்தான்.
27. நாம்.... பிறகு, நான் ஒவ்வொரு சாயங்காலத்திலும், வீட்டில் இருக்கும் போது... எல்லாவற்றையும் சுத்தம் செய்துவிட்டு (cleaned out), நான் என்னுடைய சிறு மகள்களை எடுத்து, அவர்களுக்கு வேதாகமத்தைக் கற்றுக் கொடுக்கிறேன் (Bible study): அவர்களையும், மனைவியையும் குழந்தையையும் காரில் இருத்தி, அவ்வண்ணமாக எவரும் எங்களை இடைஞ்சல் செய்யாத வகையில் அங்குமிங்கும் சுற்றியவாறு ஓட்டிக்கொண்டு போவேன். அப்போது நான் அவர்களிடம், “எலியா என்பவன் யார்-? அவன் என்னவாக இருந்தான்-?" என்பது போன்ற கேள்விகளைக் கேட்பேன்.
அந்தச் சிறிய ஆறு வயது மகளும் எட்டு வயது மகளும் மிக வேகமாக, "திஸ்பியன்" என்று பதிலளிப்பார்கள்.பாருங்கள், மிகத் துரிதமாக பதிலளிப்பார்கள்.
பிறகு நான், “அவன்.... ஆக இருந்தான் என்று உங்களுக்கு எப்படித் தெரியும். இன்றைக்கு நீங்கள் அவனைச் சந்தித்திருந்தால், உங்களால் எப்படி கூற முடிந்திருக்கும்-? அவன் எவ்விதமான ஒரு மனிதனாக இருந்தான்-?" என்று நான் கேட்பேன்.
அவன் மயிர்டர்ந்த (முடி நிறைந்த) ஒரு மனிதனாகவும், தன்னுடைய இடுப்புகளைச் சுற்றிலும் தோலைப் (போர்த்தினவனாகவும்) இருந்தான்.” சிறிய ரெபேக்காளோ அல்லது சாராளோ, ஒருவள் உரக்கச் சத்தமிட்டு பதில் கூறுவாள். பாருங்கள்-?
28. அப்படியே தொடர்ந்து அவர்களுடைய சிந்தைகளுக்குள் (உள்ளங்களுக்குள், மனசுகளுக்குள் - மொழிபெயர்ப்பாளர்) அதை கற்பித்து (போதித்து) கொடுத்துக் கொண்டேயிருங்கள், தொடர்ந்து அதை (drilling). தாயே, போதித்துக் கொண்டேயிருங்கள் நீ உன்னுடைய பிள்ளைகளிடம் பட்டணத்தில் இங்குமங்கும் ஓடிக் கொண்டிருப்பதையும், இன்பத்தைத் தேடி ஊர் சுற்றிக் கொண்டிருப்பதையும் விட்டு விடுங்கள்; வேதாகம் காரியங்களையும் உங்கள் பிள்ளைகளுக்குக் (கற்றுக்) கொடுங்கள். செய்ய வேண்டிய காரியம் அது தான் அதுவே தான். போதனைகளையும் மற்றும் அதைத்தான் செய்கிறாய்.
29. இங்கேயுள்ள சமுதாயங்களும் பதவிகளும் எல்லாமே, அது சபையில் இருந்த போதிலும், பிள்ளைகளை வளர்க்க நேரமேயில்லாத அளவுக்கு, சபையானது மிகவும் மொத்தமாக ஸ்தாபிக்கப்பட்டிருக்கிறது. பெண் பிரசங்கிமார்களைக் குறித்து நான் பேசுவதை நீங்கள் கேட்டிருக்கிறீர்கள் என்று நம்புகிறேன். இப்பொழுது, நான் அதன் பேரிலே திரும்பிப் போக (crawl back) வேண்டியிருக்கலாம். ஆனால் நான் இதை உங்களிடம் கூறட்டும்: ஒவ்வொரு தாயும் ஒரு பிரசங்கியாக இருக்கிறாள். நிச்சயமாக. அவள் பிரசங்கம் செய்யும்படியாக வீட்டிலேயே ஒரு சிறு சபையை தேவன் அவளுக்குக் கொடுத்திருக்கிறார். எனவே, இப்பொழுது, அப்படியே அதைத் தொடர்ந்து செய்து கொண்டிருங்கள். அது நல்லது. நீங்கள் முதலில் அதைப் பெற்றுக் கொள்ளுங்கள். எனவே பிறகு, சரியாக உங்கள் பிள்ளைகளோடு கூட செல்லுங்கள்.
30. இங்கே கொஞ்ச காலத்திற்கு முன்பு, நான் ஒரு கட்டுரையை வாசித்துக் கொண்டிருந்தேன், அங்கே ஒரு வீடு இருந்ததாம், இந்த வீட்டில் ஐந்து பையன்கள் பிறந்தார்கள். மூத்த பையன் கடற்படைக்குப் போக போதுமான வயதை அடைந்த உடனே, அவன் கடற்படைக்குச் சென்றுவவிட்டான். இரண்டாவது பையனும் அவனைப் பின்தொடந்து சென்று விட்டான், அவ்வாறே அடுத்தவனும் கடற்படையிலேயே சேர்ந்துவவிட்டான், மொத்தமாக ஐந்து பையன்களுமே கடற்படையில் சேரும் வரையில், அவ்வாறு எல்லா பையன்களுமே கடற் படைக்குப் (Navy) போய்விட்டார்கள். அங்கே அவர்களுடைய குடும்பத்திலே கடற்படையில் வேலை செய்பவர்களோ, அல்லது கப்பற்படையில் வேலை பார்க்கிறவர்களோ யாரும் கிடையாது. ஏன் இவர்கள், இந்தப் பையன்கள், ஒவ்வொருவரும் கடற்படைக்குப் போக விரும்பினார்கள் என்று தாயாராலும் தகப்பனாராலும் புரிந்து கொள்ள முடியாதிருந்தது.
31. இதைக் குறித்து மிகவும் நன்றாக - அலசி ஆராய்ந்து பார்த்தார்கள். அப்போது படுக்கையறையில், அதைக் கண்டுபிடிக்க நேர்ந்தது, இந்தப் பையன்கள் எல்லாரும் வளர்க்கப்பட்ட இந்தப் படுக்கையறையில், அங்கே அமைதியானதும், சாந்தமானதுமான ஒரு கடலில், ஒரு பெரிய கப்பல் பிரயாணம் செய்து போய்க் கொண்டிருக்கும் ஒரு அழகான பெரிய படம் தொங்க விடப்பட்டிருந்தது. அது அந்தப் பையன்களை மிகவும் கவர்ந்து ஈர்த்து விட்டிருந்தது, அவர்கள் இரவில் படுக்கைக்குப் போகையிலும், இந்தப் படத்தைப் பார்த்துக் கொண்டிருப்பார்கள். அந்த அமைதியான, உணர்ச்சிகளைத் தட்டிக் கொடுத்து ஆறுதல் அளிக்கும் கடலில் கப்பலை ஓட்டிச் செல்ல வேண்டுமென்று அவர்களுடைய சிந்தையில் இருந்தது. காலையில் அவர்கள் எழும்பும் போதும், அவர்களால் காண முடிந்த முதலாவது காரியம் இரைச்சலற்ற அமைதியான கடலினூடாக போய்க் கொண்டிருந்த அந்தக் கப்பலாகத் தான் இருந்தது. அது அந்தப் பையன்கள் ஒவ்வொருவருமே கப்பலோட்டிகளாக ஆகும் அளவுக்கு அவ்வண்ணமாக அவர்களை ஈர்த்து விட்டிருந்தது.
32. இப்பொழுது ஒரு கப்பலின் படமானது, பையன்களை கடற்படையில் வேலை செய்கிறவர்களாக, கடலில் கப்பலோட்டிகளாக ஆகும்படி கவருமானால், கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் படமானது என்ன செய்தாக வேண்டும்-? பாருங்கள்-? உங்கள் பிள்ளைகளுக்கு முன்பாக எப்போதுமே சரியான காரியத்தையே கொண்டிருங்கள். "பிள்ளையானவன் நடக்க வேண்டிய வழியிலே அவனை வளர்த்து." புரிகிறதா-? அதை வளர்த்து, அதற்கு சரியாகப் போதியுங்கள். அது நிச்சயமாகவே, அதைவிட்டு விலகிச்செல்லாது.
33. இப்பொழுது. எலியா ஒரு - எலியா ஒரு கண்டிப்பான மனிதனாகவும், மிகவும் தைரியமானவனாகவும் இருந்தான், அவன் பூமியில் ஒரு திருஷ்டாந்தமாக வைக்கப்பட்டு இருந்தான். இந்த மனிதனின் மூலமாக, தேவன் தம்முடைய தெய்வீக நியாயத்தீர்ப்புகளைக் காண்பிக்கும்படியாகவே, அவர் அவனை இங்கே வைத்திருந்தார். அவனுக்குப் பின் வந்த எலிசா ஒரு வாலிபனாக இருந்தான், அவனுக்கு மிக அதிக வயது இல்லை, தேவன் அவனை அழைத்த போது, அநேகமாக அவனுடைய வயது நாற்பதுகள் அல்லது ஏதோவொன்றாக இருந்தது. அவன் எலியாவின் மேலிருந்த தேவனுடைய ஆவியின் இரட்டிப்பான பங்கைப் பெற்றிருந்தான், அது எலிசாவின் மேல் வந்திருந்தது. ஓ, அதோ சபையைக் குறித்த என்ன ஓரு முன்னடையாளம். பாருங்கள், தீர்க்கதரிசியாகிய எலியா மேலே எடுக்கப்படுகையில், எலியா கேட்டிருந்தான்... எலிசா எலியாவிடம் கேட்டான். அல்லது அதற்கு மாறாக அது இருந்தது, எலியா எலிசாவிடம், "நான் உனக்காக என்ன செய்ய வேண்டுமென்று விரும்புகிறாய்-?” என்று கேட்டான்.
கவனியுங்கள். அவன் ஒரு மகத்தான காரியத்தைக் கேட்டான்: "உம்முடைய ஆவி இரட்டிப்பான பங்காக என் மேல் வரவேண்டும்” (என்று கேட்டான்).
34. இப்பொழுது, நாம் பெரிய காரியங்களுக்காக விண்ணப்பம் பண்ண வேண்டுமென்று வேதாகமம் விரும்புகிறது, "கர்த்தாவே, ஆமாம், நான் இப்பொழுது சபையைச் சேர்ந்திருக்கிறேன். அது போதும்” என்று திருப்தியடைந்து விடாதீர்கள். இல்லை, அது எனக்குப் போதாது. நான் வேறு ஏதோவொன்றைச் செய்ய விரும்புகிறேன்.
35. பெரிய காரியங்கள் தான் எனக்கு வேண்டும். “நல்லது, கர்த்தாவே, அவருடைய கிருபையினாலே, என்னுடைய சொந்த தனிப்பட்ட ஊழியத்தில், கிறிஸ்துவுக்காக பத்து லட்சம் ஆத்துமாக்களை உரிமை கோருகிறேன், பத்து லட்சம் ஆத்துமாக்களோ, அல்லது அதற்கும் அதிக ஆத்துமாக்களையோ நான் உரிமை கோருகிறேன்." நான் அதனோடு திருப்தி அடைந்துவிட மாட்டேன். எனக்கு கிறிஸ்துவுக்காக இருபது லட்சம் அல்லது முப்பது இலட்சம் ஆத்துமாக்கள் வேண்டும். எனக்கு சுவாசம் இருந்து, போகும்படி சக்தி எனக்கிருக்கும் காலம் வரையில், நான் அப்படியே தொடர்ந்து போய்க் கொண்டிருக்க வேண்டும், நான் தொடர்ந்து போய்க் கொண்டிருக்க விரும்புகிறேன். ஏனென்றால் இதைச் செய்ய இயலுவதாக இருக்கப் போகிற ஒரே சந்தர்ப்பம் இது மட்டுமே. சரியாக இப்பொழுது தான் அந்த நேரமாக இருக்கிறது. பாருங்கள்-? சரியாக இப்பொழுதே. இதைச் செய்யும்படி உங்களுக்கு சந்தர்ப்பம் இருக்கும் உங்களுடைய கடைசி முறை இதுவாக இருக்கலாம்.
36. தாய்மார்கள் பிள்ளைகளை வளர்க்கவும், பிள்ளைகளை வளர்த்து ஆளாக்கவும் எப்படி மறுத்து விடுகிறார்களோ என்று நான் சில நேரங்களில் நினைப்பதுண்டு. வாலிப பெண்கள் கருத்தடை பண்ணிக் கொண்டு, சிறிய நாய்களை வாங்கி, அவைகளை சுற்றிலும் நடத்திச் செல்கிறார்கள். பெண்மணியே, தேவன் உனக்காக ஒதுக்கிக்கொடுத்து, உனக்கு இருக்கிறதும், தேவனுக்காக இந்த மகத்தான கடமையை உன்னால் செய்ய இயலுவதாக இருக்கப் போகிறதுமான, ஏறக்குறைய உன்னுடைய 20 ஆண்டுகால ஜீவியத்தை நீ மாத்திரம் உணர்ந்து கொள்வாயா-? உன்னுடைய பிள்ளை ஒரு தற்கால பின்னியாகவோ, அல்லது அல்லது அதைப்போன்ற ஏதோவொன்றாக இருக்கலாம் என்று உனக்குத் தெரியுமா-? உன்னால்-உன்னால் பிள்ளைகளை வளர்க்க முடியும் காலம் வரையில், வெறும் இருப்பது, ஏறக்குறைய உன்னுடைய ஜீவியத்தின் 20 ஆண்டுகாலத்தில்.... (அவ்வாறு உன் பிள்ளையை வளர்க்கலாம் என்று) நீ உணர்ந்துகொள்கிறாயா-?
37. நீ இந்த உலகத்திலே ஒரு பிள்ளையைக் கொண்டு வந்து, அதைச் சரியாக வளர்ப்பாயானால், நித்தியம் முழுவதுமே அந்த ஆசீர்வாதங்களை அனுபவிக்கலாமே. அதோ அங்கே மகிமையில் பிரகாசித்துக் கொண்டிருக்கும் அந்த நட்சத்திரம், நீ அதனோடு சம்பந்தமுள்ளவளாக இருப்பாயே. புரிகிறதா-? அப்படியானால், நீ சுற்றிலும் இங்குமங்குமாக ஓடிக் கொண்டிருந்து, அவ்விதமே தொடர்ந்து செய்து கொண்டிருப்பதையே அதிகம் விரும்புகிற காரணத்தினால், இந்தச் சிறு பிள்ளைகளை வளர்க்க மறுப்பது என்பது, அது அபத்தமாக இருக்கிறது. நீ அதைச் செய்ய கூடாது. இப்பொழுது, அதைச் செய்யாதே. இல்லை, ஐயா, நீ அதைச் செய்யாதே. நீ ஒரு சந்தோஷமான நபராக இருக்கிறாய்.
38. பழங்கால தாய்மார்கள், பிள்ளைகளை வளர்க்க அவர்கள் விரும்பினார்கள். ஆனால், ஓ, நாம் இப்பொழுது ஜீவித்துக் கொண்டிருக்கும் இந்த நவீன அமெரிக்க காலம். நம்முடைய தேசம் சுத்தமாக கறைப்பட்டுவிட்டது. நான் பார்க்கிற பிரகாரமாக, இந்த தேசத்திற்கு ஒரு நம்பிக்கையுமே விடப்படவில்லை. பழைய பாணியிலான ஒரு எழுப்புதல் மாத்திரமே, வேத வாக்கியத்தின்படி அத்தகைய பழம்பாணியிலான எழுப்புதல் ஒருபோதும் நாடு முழுவதுமாக இருக்கவே இருக்காது. எனவே அப்படியானால், நாம் அப்படியே... இப்பொழுது, அவ்வாறு ஆகாது இருக்கட்டும் (lest), தேவனால் தெரிந்து கொள்ளப்பட்ட ஜனங்கள் மத்தியில் ஒரு எழுப்புதல் இருந்திருக்கிறது தான்; முழு தேசத்தையும் உள்ளே கொண்டு செல்கிற ஒரு உண்மையான வீசியடித்துக் செல்லும் ஒரு எழுப்புதல் அங்கே இருக்காது, அது ஒரு போதும் இருக்கவில்லை, அது ஒரு போதும் இருக்கவும் செய்யாது. சீக்கிரத்தில் வெளிப்படும், தேவனுடைய நித்திய இராஜ்யத்திற்கு வழி விட்டுக் கொடுக்கும்படியாக, மற்ற எல்லா இராஜ்யங்களையும் போன்று, இந்த மகத்தான தேசமும் விழ வேண்டியிருக்கிறது. நாம் நமது தேசத்தை நேசிக்கிறோம், நிச்சயமாக நாம் நேசிக்கிறோம். ஆனால் இன்று அதில் தீட்டு (அசுத்தம்) இருப்பதைக் காணும் போது, அது நம்முடைய இருதயங்களை உடைத்துவிடுகிறது. ஓ, அது பயங்கரமாக உள்ளது. மேலும் அந்த நிலையைக் குறித்து, துர்நாற்றம் தேவனுடைய நாசியில் ஏறிவிட்ட து (reached)...
இப்பொழுது, எலியா, "நான் உனக்காக என்ன செய்யலாம்-?” என்று கேட்கிறான், அவன் இங்கிருந்து போய்க் கொண்டிருந்தான்.
அவன், "உம்முடைய ஆவி என் மேல் இரட்டிப்பாக வர வேண்டும்” என்றான்.
39. அதற்கு அவன், "நீ ஒரு கடினமான காரியத்தைக் கேட்டிருக்கிறாய், ஆனால் இருந்த போதிலும், நான் போகும் போது, நீ என்னைக் கண்டால், நீ வாஞ்சிப்பதை நீ கொண்டிருப்பாய்" என்றான். இப்பொழுது, அந்த வாலிபன் தொடர்ந்து தன்னுடைய கண்ணை அந்த வயதான தீர்க்கதரிசியின் மேலேயே வைத்துக் கொண்டிருப்பதை என்னால் கற்பனை செய்து பார்க்க முடிகிறது, அவன் அசைகிற ஒவ்வொரு அசைவின் மேலும் தன்னுடைய கண்களை வைத்திருந்தான். அவன் போன ஒவ்வொரு வழியிலும், அவனோடு கூட இவனும் சென்றான், ஏனென்றால் அந்த ஆவியின் இரட்டிப்பான பங்கை இவன் விரும்பினான்.
உங்களுக்கு இரட்டிப்பான பங்கு தேவை என்றால், உங்கள் கண்களை இயேசுவின் மேலேயே பதித்திருங்கள். ஆமென். அது சரியே. அது என்னவொரு முன்னடையாளமாக இருந்தது.
இயேசு எடுக்கப்பட்ட போது, அது எலியாவுக்கு முன்னடையாளமாக இருந்தது, இப்பொழுது சபையானது வேண்டிக்கொண்டது.... ஒரு தாய் தன்னுடைய இரண்டு குமாரர்களுக்காக, "இவன் வலது பாரிசத்திலும் இவன் இடது பாரிசத்திலும் உட்காரும்படி செய்தருளும்" என்று வேண்டுதல் செய்தாள்.
அதற்கு அவர், "அதைக் கொடுப்பது என் காரியமல்ல. ஆனால் நான் குடிக்கும் பாத்திரத்தில் (cup) உங்களால் குடிக்கக் கூடுமா-?" என்று கேட்டார்.
அவள், "ஆம்" என்றாள்.
"நான் பெறும் ஸ்நானத்தை நீங்கள் பெறக் கூடுமா-?” என்று கேட்டார்.
"ஆமாம்.”
40. அதற்கு அவர், "நீங்கள் அவ்வாறு செய்வீர்கள். அது உண்மை” என்றார். எனவே பிறகு ஒரு இரட்டிப்பான பங்கு . “நான் பிதாவினிடத்திற்குப் போகிறபடியால், நான் செய்கிறவைகளை நீங்களும் செய்வீர்கள், இதைக்காட்டிலும் அதிகமானவைகளையும் செய்வீர்கள்." இயேசுவின் மேலிருந்த ஆவியின் இரட்டிப்பான பங்கு, சபையியிடம் வந்திருக்கிறது. பாருங்கள்-?
41. இப்பொழுது, எலியாவின் ஆவியின் இரட்டிப்பான பங்கு எலிசாவின் மேல் வருகிறது, எலியா புரிந்த அற்புதங்களைப் போல இரு மடங்கு அற்புதங்களை அவன் செய்தான். பரிசுத்த ஆவியின் இரட்டிப்பான பங்கு... இப்பொழுது, நீங்கள் இதைக் கவனிக்க வேண்டுமென்று நான் விரும்புகிறேன், எலியாவுக்கு அடையாளமாக ஒரு மேலங்கி இருந்தது. ஒரு மேலங்கி என்பது அதில் தான் அவன் சுற்றிப் போர்த்தப்பட்டிருந்தான். அது பரிசுத்தாவிக்கு ஒரு அடையாளமாக இருந்தது. அவன் மேலே போகையில், அவன் கவனித்த போது, அந்த அங்கியானது ரதத்தில் இருந்து திரும்ப விழுந்தது. அவன் அந்த அங்கியை தூக்கி, தன்னுடைய தோள்களின் மேல் வைத்துக்கொண்டு, யோர்தானுக்கு இறங்கிச் சென்று, அற்புதங்களைச் செய்ய ஆரம்பித்தான்.
42. இயேசு, அவர் தண்ணீரில் ஞானஸ்நானம் பண்ணப்பட்ட பிறகு, யோர்தான் நதியில் அவர் மேல் வந்து, அவருக்குள் இருந்து, அவர் கொண்டிருந்த, பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானமாகிய அந்த ஞானஸ்நானம். பரிசுத்தாவியானவர் ஒரு புறாவைப் போல அவர்மேல் இறங்கிவருவதை யோவான் காண்பதாக, அவன் சாட்சியாகச் சொன்னான் (bare record). மேலும் கவனியுங்கள், அதன் பிறகு அவர் மேலே போன போது, அவர் போர்த்தப்பட்டிருந்த அதே அங்கியை திரும்ப அனுப்பினார், பரிசுத்த ஆவியானவர் சபையின் மேல்.
43. மேலும் இப்பொழுது, பரிசுத்தாவியின் ஞானஸ்நானத்தில் விசுவாசம் கொண்டிருக்கிற ஜனங்கள், தெய்வீக சுகமளித்தலை ஏற்றுக்கொள்ள பயப்படுகிறார்கள். நாம். அந்த விசுவாசிகள் மத்தியில் உங்களைத் தானே ஒரு அங்கத்தினராக பலர் அறியும்படி கூறுவதற்கோ அல்லது அவர்கள் மத்தியில் ஐக்கியம் கொள்ளவோ பயப்படுகிறீர்களா-? ஏன், நீங்கள் வெட்கப்பட வேண்டும், நீங்கள்... நானோ கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நீதியில் சுற்றப்பட்டிருக்கிறேன் என்பதை அறிந்து கொள்வது எனக்கு மிகப்பெரிய கௌரவமாக இருந்திருக்கிறது. ஆமென். அதைச் செய்ய பொருத்தமானவனாக அவர் கண்டார்.
44. எனவே பிறகு, இந்த வாலிப தீர்க்கதரிசி திரும்பிப் போனபோது, அவன் அற்புதங்களை நடப்பிக்கத் தொடங்கினான். சபையும், அது கர்த்தராகிய இயேசுவின் அங்கியை தூக்கின போது, அது அற்புதங்களைச் செய்யத் தொடங்கினது. ஒரு உண்மையான சபையானது பூமியில் இருக்கும் காலம் வரையில், அவர்கள் எப்போதுமே அற்புதங்களைச் செய்து கொண்டே இருப்பார்கள். அது இன்னுமாக கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நீதியில் சுற்றப்பட்டிருக்கிறது. அவருடைய ஆவியானது சபையில் வாசம் செய்து, அது செய்தது போன்றே அற்புதங்களை நடப்பிக்கிறது.
45. நான் சென்ற இரவு கூறினது போன்று, இயேசு, "பிதா என்னை அனுப்பினது போல, நானும் உங்களை அனுப்புகிறேன்" என்று கூறினார். அவரை அனுப்பின பிதாவானவர் அவரோடு கூட சென்று, அவருக்குள் இருந்தார். உங்களை அனுப்புகிற இயேசுவும் உங்களோடு கூட வந்து, உலகத்தின் முடிவு பரியந்தம் உங்களுக்குள் இருக்கிறார். ஆமென். ஓ, எவ்வளவு அழகாயுள்ளது. இல்லை, அது வெறுமனே நீங்கள் வாங்கும் சிறிய நாட்காட்டியோ, அல்லது இங்கே படுக்கைக்குப் போய், (நீங்கள் வாசித்து செய்தியிலுள்ள ஏதோவொரு கதையோ அல்ல, அது தேவனுடைய நித்திய வார்த்தையாக இருக்கிறது, அது வேதாகமமாக இருக்கிறது. அது உண்மை. தேவன் தாமே தம்முடைய வார்த்தையைக் காட்டிலும் உண்மையுள்ளவராக இருக்க முடியாது.
46. இப்பொழுது, கவனியுங்கள். அதன் பிறகு எலியா, இன்னும் சரியாகச் சொன்னால், எலிசா, தான் திரும்பிச் சென்று, கலசத்திலிருந்த (cruse) கொஞ்சம் உப்பைக் கொண்டு, கசப்பான தண்ணீரை தித்திப்பாக ஆக்கினான். ஓ, அற்புதங்கள் அப்படியே எல்லாவிடங்களிலும் பறந்து கொண்டிருந்தன.
47. அதன் பிறகு அங்கே ஒரு... ஓ, அவனுக்கு ஒரு... இப்பொழுது ஞாபகம் கொள்ளுங்கள், அவனுக்கு கோபமும் கூட இருந்தது. அவனுக்கு வழுக்கைத்தலை இருந்த காரணத்தினால், சில பிள்ளைகள் அவனைப் பார்த்து கேலி செய்தார்கள். உடனே அவன் அந்தப் பிள்ளைகளைச் சபித்தான், அது அதிகமாக பிள்ளைகளின் நிமித்தமாக அல்ல; தேவனுக்கு மரியாதை செலுத்தும் படியாக, தங்களுடைய பிள்ளைகளை வளர்க்காமல் இருந்த அந்தப் பெற்றோர்களின் நிமித்தமாக அது அவ்வாறு நடந்தது. அது தான் அதுவாக இருந்தது. அந்தப் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை இழந்தார்கள், ஏனென்றால் இரண்டு பெண் கரடிகள் அந்தப் பிள்ளைகளில் 42 பேரைக் கொன்று போட்டது; நிச்சயமாக 100 அல்லது அதற்கும் அதிகமான பிள்ளைகள் எலியாவுக்கும் பின்னால் ஓடி வந்திருப்பார்கள். அவன் சமாரியா வழியாகப் போய் கொண்டிருந்தான், அங்கே நீண்ட காலமாக வார்த்தையானது அவர்களுக்குப் பிரசங்கிக்கப்பட்டிருந்தது, மேலும் இந்தத் தீர்க்கதரிசி... ஆனால் அங்கே ஏதோவொன்றை நீங்கள் காண்கிறீர்களா-? அது தேவனுடைய செய்தியாளனைப் பற்றிய ஜனங்களுடைய மனப்பான்மையாக இருக்கிறது.
48. இந்த உலகத்திலே எப்பொழுதாவது தேவனுடைய செய்தியாளன் மத சம்பந்தமான மனிதர்களால் ஒரு போதும் ஏற்றுக் கொள்ளப்பட்டது கிடையவே கிடையாது. அது எப்பொழுதாவது இருந்ததா என்று வார்த்தையில் எனக்குக் காட்டுங்கள் பார்க்கலாம். கிடையவே கிடையாது. பெயரளவிலான சபை, ஆதிகால துவக்கம் முதல் தொடங்கி, தேவனுடைய செய்தி ஒவ்வொரு முறையும் புறக்கணிக்கப்பட்டே வந்திருக்கிறது. இன்றும் அதற்கு எந்த குறைவான காரியத்தையும் அது செய்யும் என்று உங்களால் எதிர்பார்க்க முடியாது.
49. இயேசு வந்த போது, அவர் புறக்கணிக்கப்பட்டார். அவர், "உங்களுடைய... எவன் ஒருவன், உங்களுடைய, அல்லது உங்கள் பிதாக்களில் தீர்க்கதரிசிகளை கல்லால் எறியாமல் இருந்தான்-? எவன் தீர்க்கதரிசிகளைப் புறக்கணிக்காமல் இருந்தான்-?" என்று கேட்டார்.
50. இப்பொழுது, இங்கே இந்தச் சிறு கதையைப் பாருங்கள். வரிகளுக்கு இடையே வாசியுங்கள் (எனக்கு அது பிடிக்கும், உங்களுக்கும் இல்லையா-?), வரிகளுக்கு இடையில். ஏன், வெளியே போய்க் கொண்டிருந்த இந்தச் சிறு பிள்ளைகள், வழுக்கைத் தலையாக இருந்த இந்தப் பிரசங்கியாரைப் பார்த்து, கேலி செய்து கொண்டிருந்தன. அவர்கள் அவனைப் பார்த்து என்ன சொன்னார்கள் என்று பாருங்கள்: "வழுக்கைத் தலையா, எலியாவைப் போன்று நீ மேலே போகவில்லையா-?” என்று அந்தப் பிள்ளைகள் கூறினர். எலியா மேலே போனான் என்று அவர்கள் நம்பவில்லை, அவர்கள் அதை சந்தேகித்தார்கள்.
51. அவர்களுடைய ஆசாரியர்களும் அவர்களும் அவர்களிடம் கூறியிருந்தார்கள், அவர்கள் அநேகமாக, "ஓ, அவன் மேலே போகவில்லை. அது கொஞ்சம் மதவெறித்தனம் தான். அவன் அபிஷேகம் பண்ணப்பட்ட அதே அபிஷேகத்தைக் கொண்டு இந்த ஆசாமி அபிஷேகம் பண்ணப்பட்டான் என்று எதிர்பார்ப்பதா-?. ஓ, அது முட்டாள்தனம். இவனையும் மேலே போகும்படி இவனிடம் சொல்லுங்கள்" என்று கூறியிருந்திருப்பார்கள்.
52. இதோ அந்தச் சிறு குழந்தைகள் போகிறார்கள். "பிள்ளையானவன் நடக்க வேண்டிய வழியிலே அவனை வளர்த்து ஆளாக்கு." பெற்றோர்கள் அதை விசுவாசியாத காரணத்தினால், இதோ அந்தப் பிள்ளைகள் போகின்றன.
53. நீங்கள், நீங்களே கூட போகாமல் இருந்துவிட்டு, உங்களுடைய பிள்ளைகள் ஞாயிறு பள்ளிக்கு போக வேண்டுமென்றும், கர்த்தரைச் சேவிக்க வேண்டுமென்றும் உங்களால் எவ்வாறு எதிர்பார்க்க முடியும்-? நீங்களே ஒன்றுமே இல்லாமல் இருக்கும் போது, உங்களுடைய பிள்ளைகள் ஏதோவொன்றாக இருக்கும்படி உங்களால் எப்படி எதிர்பார்க்க முடியும்-? அது சற்று மூர்க்கத்தனமாகவும் எந்த மரியாதையும் காண்பிக்காமல் இருப்பதாகவும் இருக்கிறது, ஆனால் நான் அதை அந்தவிதமாகக் கூறும்படி கருதவில்லை; ஆனால் நான் அதைக் கூறும்படி, அவர் என்னைக் கொண்டிருந்தார், எனவே நான்.... இது முன்கூட்டியே தியானிக்கப் பட்டதல்ல. சரி. ஆனால் அது. நீங்கள் ஒன்றுமில்லை என்று நான் கூறக்கருதவில்லை, ஆனால் நீங்கள் எந்த வேலையையும் செய்யாதிருக்கிறீர்கள் என்பதை நீங்கள் அறிந்து கொள்ளும் போது, அதைத் தான் நான் சொல்ல வருகிறேன். நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு முன்பாக, அப்படிப்பட்ட ஒரு மாதிரியை வைத்திருக்கும் போது, அவர்கள் நீதிமான்களாக இருக்கும்படி உங்களால் எவ்வாறு எதிர்பார்க்க முடியும்-? உங்களால் எவ்வாறு அதைச் செய்ய முடியும்-? அவர்களுக்கு இருக்கும் மிகச் சிறந்த மாதிரி நீங்கள் தான். அவர்கள்... அதைப் பார்க்கும் போது, அவர்கள் உங்களைத் தான் பார்க்கப் போகிறார்கள். வேறு யாரையும் அவர்கள் பார்க்க மாட்டார்கள், ஏனென்றால் உங்களுடைய சுபாவம் தான் அவர்களுக்குள் இருக்கிறது.
54. சாத்தானைப் போன்று, மனிதர்களைக் குறித்து மிக அதிகமாக அவனுக்குத் தெரியும். அவன் தேவனிடம், யோபிடம் சொன்னான், அவன், "ஒரு மனிதன் தன்னுடைய தோலுக்காக என்னத்தைக் கொடுப்பான்-?" என்று கூறினான். நிச்சயமாக. மனிதனுடைய சுபாவத்தைக் குறித்து அவன் ஏதோ அறிந்தவனாகத் தான் இருக்கிறான். அதை தாறுமாறாக்கி (தவறான வழியில் திருப்புவதற்கு) அவன் துணை செய்தான். அவனுக்குத் தெரியும்... அவன் அதில் ஒரு கையை வைத்திருந்தான். அதைக் குறித்து அதிகமாக அவனுக்குத் தெரியும்.... எவ்வாறு என்று அவன் இன்னும் அறிந்திருக்கிறான். ஜனங்களை விழப்பண்ண என்ன செய்ய வேண்டும் என்று அவனுக்குத் தெரியும். மனிதனுடைய சுபாவத்தை அவன் அறிந்திருக்கிறான்.
55. உங்களை அதினிமித்தமாக விழும்படி செய்ய உங்களுக்கு முன்பாக எதைக் காண்பிக்க வேண்டுமென்று.... அவனுக்குத் தெரியும். விஸ்கி மதுபானத்தின் மணத்தை எவ்வளவு நன்றாக வைக்க வேண்டுமென்றும், ஒரு சிகரெட்டை (புகைக்கும்படி) வைக்க, எவ்வளவு ஆசைகளைத் தூண்டி, அதை அடையும்படி, ....யம்படி, விடாது ஏங்க வைக்க வேண்டுமென்றும், வாலிப பையனோ சிறு பெண்ணோ, தங்கள் டீன்ஏஜ் வயதில், பீர் மதுபானத்தை குடிக்கும்படியாக, அவர்களை இங்கு வெளியே ஒரு-ஒரு இடத்தில் எப்படி நன்றாக வைப்பது என்றும் அவனுக்குத் தெரியும். ஒரு சில வருடங்கள் கழித்து, (அவர்கள்) அந்தப் பழைய பைத்தியம் பிடித்த கண்களை உடைய அருவருக்கத்தக்க தோற்றமுள்ள விகாரமான கிழவிகளாக இருக்கும் அந்தப் படத்தை பார்க்கும்படி (வைக்க) அவன் முயற்சிக்கவே மாட்டான். அது சரியே.
56. முழுமையாக நிர்வாணமாக இருக்கும் ஒரு பெண்ணின் படத்தை வைப்பதில் அவன் சாகசம் செய்ய மாட்டான், ஆனால் அவளைக் கவர்ச்சியானவளாக ஆக்கும்படி எவ்வளவு துணிகளை அவளை விட்டு எடுத்துப்போட வேண்டுமென்று அவனுக்குத் தெரியும். நிச்சயமாக அது அவனுக்குத் தெரியும்.
57. அவனுக்கு மனிதனுடைய சுபாவம் தெரியும். உங்களை அதற்குள்ளாக எவ்வாறு பிடிப்பது என்றும் கூட அவனுக்குத் தெரியும். அவன் இரவும் பகலும் விழித்திருந்து, கெர்ச்சிக்கிற சிங்கம் போல், எவனை விழுங்கலாமோ என்று சுற்றித்திரிகிறான். நிச்சயமாக, அவன் அவ்வாறு தான் இருக்கிறான். எனவே அதை எவ்வாறு செய்வது என்பது அவனுக்குத் தெரிந்திருந்தது.
58. ஆனால் தேவன் திரும்பிப் பார்த்தார், அவர் எலிசாவுக்குள் இருந்தார், அவன் (எலிசா) அந்தப் பிள்ளைகளை சபித்தான், உடனே காட்டிலிருந்து வெளியே ஓடி வந்த கரடிகளால், அவர்களில் 42 பிள்ளைகள் கொல்லப்பட்டார்கள், அந்தப் பிள்ளைகளில் 42 பேரை அவைகள் கொன்று போட்டன, ஏனென்றால் அவைகள் கீழ்ப்படியாதவைகளாக இருந்தன, அந்தப் பிள்ளைகள் தவறான விதமான வீட்டில் வளர்க்கப்பட்டிருந்தன, தேவனுடைய தீர்க்கதரிசிக்கு மரியாதை செலுத்துவதற்குப் பதிலாக, தேவனுடைய தீர்க்கதரிசியை கேலி செய்யும்படி, அவைகளுக்கு தவறாகப் போதிக்கப்பட்டிருந்தது (கற்பிக்கப்பட்டிருந்தது). நான் உங்களுக்குக் கூறுகிறேன், நீங்கள் தேவனுடைய ஊழியக்காரர்களுக்கு மரியாதை செலுத்தும் போது, நீங்கள் தேவனுக்கே மரியாதை செலுத்துகிறீர்கள். நீங்கள் கிறிஸ்துவுக்கு மரியாதை செலுத்தும் போது, நீங்கள் தேவனுக்கே மரியாதை செலுத்துகிறீர்கள்.
59. இப்பொழுது, யார் தேவனுடைய பெரிய ஊழியக்காரர்-? இங்கே பூமியின் மேலுள்ள ஏதோவொரு மனிதன் அல்ல. அது பரிசுத்தாவியானவரே. அவரைத் தான் நீங்கள் பரிகாசம் பண்ணுகிறீர்கள். அவரைப் பார்த்து தான் ஜனங்கள் நகைத்து, "இப்பொழுது, அந்த ஜனங்களைப் பாருங்கள். அவர்கள் வேடிக்கையாக நடந்து கொள்ளவில்லையா-? அவர்கள் கொஞ்சம் பைத்தியமாகத் தான் இருக்கிறார்கள் என்று நம்புகிறேன்" என்று கூறுகிறார்கள். நீங்கள் அவ்வாறு செய்யும் போது, நீங்கள் தேவனைத்தான் பரிகாசம் பண்ணிக் கொண்டு இருக்கிறீர்கள். அது சரியே. அப்போது நீங்கள் மன்னிக்க முடியாத பாவத்தைச் செய்வீர்கள் (unpardonable sin); அது இம்மையிலும் அல்லது மறுமையிலும் ஒரு போதும் மன்னிக்கப்படவே மன்னிக்கப்படாது. அதற்கு விரோதமாக நீங்கள் ஒரு வார்த்தை பேசினாலும், அது ஒருக்காலும் மன்னிக்கப்படாது என்று இயேசு கூறியிருக்கிறார்.
60. இந்நிலையில், எலிசா, சூனேம் என்னப்பட்ட ஒரு சிறு இடம் வழியாகக் கடந்து செல்ல வேண்டியிருந்தது. அந்த இடம் வேதாகமத்தில் மிகச்சரியாகக் குறிப்பிடப்பட்டிருக்கவில்லை. யோசுவாவில், அவர்கள் தேசங்களைப் பங்கிட்ட போது, சூனேம் என்ற இந்தச் சிறிய இடம் எங்கே இருந்தது என்று அவர்கள் குறிப்பிட்டிருக்கிறார்கள் என்று நினைக்கிறேன். ஆனால் ஒவ்வொரு சிறிய இடத்திலும், தேவன் எங்கோ ஒரு சாட்சியைக் கொண்டிருக்கத் தான் போகிறார். அவ்வண்ணமாக, அதற்கு இசைய அங்கே சூனேமில், ஒரு உண்மையான பெண்மணி வசிக்க நேர்ந்தது. அவள் ஒரு விசுவாசமுள்ள பெண்ணாக (loyal woman) இருந்தாள், அவள் ஒரு உண்மையான சீமாட்டி. அவளுடைய புருஷன் வயது முதிர்ந்த ஒருவனாக இருந்தான்.
61. எலிசா, அதனூடாகப் போகும்படி நேரிட்டது, அவன் மேலே கர்மேல் பர்வதத்துக்கு போய்க் கொண்டிருந்தான். அவன் மேலே போகும் பாதையில், கர்மேல் பர்வதத்துக்குப் போக வேண்டுமானால், சூனேம் வழியாகத்தான் போக வேண்டியிருந்தது. இப்பொழுது, எலிசாவுக்கு அங்கு மேலே ஒரு குகை இருந்தது. அவன் ஜெபிக்கப் போகும் இடமாகிய ஒரு பிரத்யேகமான குகை அவனுக்கு இருந்தது. தற்செயலாக, மேலே கர்மேல் பர்வதத்தில் ஒரு குகை இருந்தது, அது தான் அது. அவன் ஓய்வு நாளிலும் ஜெபிக்கும்படியாக அங்கே மேலே போவான்.
62. நல்லது, அவன் பட்டணத்திலே மிக நன்கு விரும்பப்பட்டவன் அல்ல என்று நினைக்கிறேன், அவன் அதனூடாகக் கடந்து போகையில், அவன் புறக்கணிக்கப்படுவதை இந்தப் பெண்மணி நிச்சயமாகக் கண்டிருக்க வேண்டும். சூனேமானது, அவன் தன்னுடைய பிரயாணத்தில் போகக்கூடிய அளவுக்கு ஏறக்குறைய மேலே அவ்வளவு தூரத்தில் இருந்தது, அங்கே இரவு முழுவதும் தங்க வேண்டியிருந்தது. எனவே அவன் அதன் பக்கமாகக் கடந்து போகையில், அவன் ஒருக்கால் தெரு (வீதிகளிலோ), அல்லது காடுகளிலோ, எங்கேயோ இருந்த வயல் வெளிகளிலோ தங்கியிருப்பான், ஒருக்கால், சில நேரங்களில், ஆகாரமும் இல்லாமல் இருந்திருப்பான். இந்த நல்ல பெண்மணியோ, அவள் மேலே பட்டணத்திற்குள் போகையில், இந்த மனிதனை அவள் துரிதமாக அடையாளம் கண்டு கொண்டு, அவன் ஒரு பரிசுத்தவான் என்பதை அறிந்துகொண்டாள்.
63. இப்பொழுது, அவள் ஒரு சூனேமிய ஸ்திரீயாக இருந்தாலும், தன்னுடைய இருதயத்தில், அவள் ஒரு விசுவாசியாக இருந்தாள். விசுவாசியாக இருக்கும் நபர் எங்கே இருந்தாலும், அது ஒரு பொருட்டே அல்ல, தேவன் தாம் தேவனாக இருப்பது எவ்வளவு நிச்சயமோ அவ்வளவு நிச்சயமாக, அவர் ஏதாவது ஒருவிதத்தில் உண்மையான செய்தியை அவர்களிடம் கொண்டு போய் சேர்த்து விடுவார். அது சரியே. ஏதோவொரு இடத்தில் அதைக் கொண்டு போய் சேர்க்கும் படியாக அவர் அதை நிறைவேற்றுவார் எங்கோவிருக்கும் யாரோ ஒருவரின் இருதயத்தில் அவர் தொடர்ச்சியான ஒரு நோவை வைத்துவிட, அவர்கள் இவர்களுக்கு கடிதம் எழுதுவார்கள், வானொலியைத் திருப்பியோ, அல்லது வேறு ஏதோ ஒரு வழியில் இவர்கள் ஒரு சாட்சியைக் கேட்பார்கள்; இவர்கள் உண்மையான செய்தியைக் கேட்பார்கள். தேவன் அவர்களுக்கு அதை அருளி விடுவார்.
64. அநேகமாக, இந்தப் பெண்மணி, ஒருக்கால், நாம் இவ்வாறு கூறுவோம், அவள் ஒருநாள், மேலேயிருந்த வீதிக்குப் போனபோது, யாரோ ஒருவர் தெரு மூலையில் பிரசங்கம் பண்ணிக் கொண்டிருப்பதைக் கேட்டாள். மேலும் அவன் புறக்கணிக்கப்பட்டதைக் கண்டாள், அது தேவனுடைய ஒரு ஊழியக்காரன் என்பதை அவள் அறிந்து கொண்டாள். எனவே, எலிசா பிரசங்கம் பண்ணுவதை முடித்த பிறகு, அவள், "அன்பான, ஐயா, நீர் வந்து, என்னுடைய கணவரை சந்திப்பீரா-? நான் உடனடியாக உங்கள் எல்லாருக்கும் கொஞ்சம் மதிய உணவு ஆயத்தம் செய்கிறேன்" என்று கூறுவதை என்னால் கற்பனை செய்து பார்க்க முடிகிறது.
65. நல்லது, அதற்கு எலிசா, "பெருமாட்டியே, உனக்கு நன்றி. நான் அதைச் செய்ய மகிழ்ச்சியாயிருப்பேன், ஏனென்றால் செய்திக்குப் பிறகு எனக்குச் சற்று பசிக்கிறது" என்றான். எனவே அவர்கள் கீழேயிருந்த அந்த வீட்டிற்குப் போனார்கள். அவள் உள்ளே போய், இந்தத் தீர்க்கதரிசியையும், ஊழியக்காரனாகிய கேயாசியையும் தன்னுடைய புருஷனுக்கு அறிமுகம் செய்து வைத்து விட்டு, மிகத் துரிதமாக கொஞ்சம் சுட்ட அப்பங்களையும், கொஞ்சம் அருஞ்சுவையுண்டிகளையும், கொஞ்சம் தேநீருடன் உண்ணும் இனிப்பு அப்ப வகைகளையும், அதைப் போன்ற மற்றவைகளையும் ஆயத்தம் பண்ணினாள்.
66. சென்ற மாலையில், தற்செயலாக, எடுத்துக் கொள்ளும்படியாக, வீட்டில் செய்யப்படும் இனிப்பு அப்ப வகை மற்றும் சில காரியங்களைக் கொண்ட ஒரு பெட்டியை எனக்கு அனுப்பின டென்மார்க் தேசத்து டேனிஷ் மொழி பேசும் ஒரு சிறிய பெண் அங்கே இருக்கிறாள்... அவள்.... இல்லை என்று எனக்குத் தெரியும். அவள் இங்கேயிருந்தால், எப்படியும் அவளால் ஆங்கிலத்தைப் புரிந்து கொள்ள முடியாது. அநேகமாக, இடது கை செய்வதை வலதுகை அறிந்து கொள்வது என்பது, அதை அறிந்து கொள்ள அவள் விரும்ப மாட்டாள். உங்களுடைய சிறிய அடையாள சின்னங்களுக்காகவும் ஆசீர்வாதங்களுக்காகவும், உங்கள் ஒவ்வொருவருக்கும் நான் நன்றி கூறுகிறேன். நான் அவைகளைப் பாராட்டுகிறேன். வீட்டில் குழந்தைகளுக்காகக் கொண்டு செல்லும்படி, இந்தச்சிறு டென்மார்க் தேசத்துப்பெண் (Danish woman) கொஞ்சம் இனிப்புகளை (cookies) எனக்கு அனுப்பியிருந்தாள். மேலும் அவர்கள் டேனிஷ் மொழி பேசும் டென்மார்க் தேசத்தவர்கள் என்று கூறினார்கள், அவர்களால் ஆங்கில மொழியை எழுத முடியாது, எனவே அதை எழுதுவதற்கு அவர்கள் வேறு யாரோ ஒருவரைக் கொண்டிருந்தார்கள். இப்பொழுது, நான் அவைகளைக் குழந்தைகளுக்குக் கொண்டு செல்வதற்கு முன்பாக, அவைகளைச் சாப்பிடாமல் வைத்திருப்பதற்கு, எனக்குப் பயங்கரமான நேரம் உண்டாயிருக்கிறது. நான் அப்படியே மிக மோசமான நேரம் உடையவனாய் இருக்கிறேன். நான் முன்னும் பின்னும் நடப்பேன், அவைகளை நோக்கிப் பார்ப்பேன், மேலும் மறுபக்கமாகத் திரும்பி, அவைகளைப் பார்ப்பேன். ஆனால் நான் வீட்டிற்குப் போவது மட்டுமாக, அதைத் தொடர்ந்து வெற்றிகரமாக (வைத்திருக்க முயற்சித்துக் கொண்டு இருக்கிறேன்.
67. ஆனால் ஒருக்கால், இந்தப் பெண் அவைகளை ஒரு தட்டு முழுவதுமாக, மேஜையின் மேல் வைத்திருப்பாள், எலியாவுக்கு ஒரு - ஒரு உண்மையான யூபிலி உண்டாயிருந்தது. அதற்காக அவன் அந்தப் பெண்மணிக்கு நன்றி கூறினான். மேலும் அவன் அடிக்கடி அப்பக்கமாகக் கடந்து சென்றான். எனவே இந்த நல்ல பெண்மணி... அபிப்பிராயம் அல்லது வெளிப்பாட்டைப் பெற்றிருந்தாள். வெளிப்பாட்டைப் பின்பற்றுவதை நீங்கள் விசுவாசிக்கிறீர்களா-? நிச்சயமாக. சபையானது தெய்வீக வெளிப்பாடுகளின் மேல் தான் கட்டப்பட்டிருக்கிறது என்று நான் விசுவாசிக்கிறேன்.
68. இந்த மனிதனுக்காக அவள் ஏதோவொன்றைச் செய்ய ஊக்குவிக்கப்பட்டவளாக இருக்கையில், அவள் ஒருநாள் தன்னுடைய புருஷனிடம், "அன்பே, இப்பொழுது பாரும், நாம்-நாம் நன்றாக... இருக்கிறோம். நம்மால் இதைச் செய்ய முடியும். நமக்கு சம்பூரண செழிப்பு இருக்கிறது. நமக்குப் பெரிய பண்ணைகளும் மற்றவைகளும் உள்ளன, நம்மால் இதைச் செய்ய முடியும். இப்பொழுது, நாமிருவரும் யேகோவாவில் விசுவாசம் உள்ளவர்களாக இருக்கிறோம், இவர் அவருடைய ஊழியக்காரர். இப்பொழுது, நாம் அவருக்கு ஏதோ அருமையான ஒன்றைச் செய்வோம், அவருக்காக அதைச் செய்யும் போது, நாம் அதை யேகோவாவுக்காகவே செய்து கொண்டிருக்கிறோம். அவை எல்லாவற்றிற்கும் பிறகு, உமக்கு வயதாகிக் கொண்டிருக்கிறது, நானும் நடுத்தர வயதுள்ளவள்; எனவே இவை எல்லாம் ஏதோவொரு இடத்தில் விழுந்து போவதற்கு நீண்ட காலம் ஆகாது; நாம் போவதற்கு, நமக்கு எந்தப் பிள்ளைகளோ அல்லது எதுவுமில்லை. எனவே யேகோவாவுடைய தீர்க்கதரிசியை உபசரிப்பதன் மூலமாக, நாம் யேகோவாவுக்காக ஏதாகிலும் செய்வோம்; அவர் ஒரு பரிசுத்தவான் என்றும் அவர் இந்த வழியாகக் கடந்து போகிறார் என்று நான் காண்கிறேன்" என்று கூறுவதை என்னால் கேட்க முடிகிறது.
69. தேவன் அவனுக்குள்ளிருந்து கிரியை செய்து கொண்டிருப்பதை அவள் கண்டதின் நிமித்தமாக, அவள் அவனை, "தேவனுடைய மனுஷன்" என்று அழைத்தாள். தேவன் இந்தத் தீர்க்கதரிசிக்குள் இருந்தார் என்பதை அவள் அறிந்திருந்தாள், அவள் தேவனுக்கு மரியாதை செலுத்த விரும்பினாள். தேவனுக்கு மரியாதை செலுத்த முடிந்த ஒரே வழி யாதெனில், தேவனுடைய ஊழியக்காரனுக்கு மரியாதை செலுத்துவது தான். இப்பொழுது, நண்பர்களே, நீங்கள் தேவனுடைய ஒழுங்கை மதித்து நடக்கும்போது, அந்த விதமாகத்தான் நீங்கள் அதைச் செய்கிறீர்கள். அது உண்மை .
70. இங்கே சமீபத்தில்.... இன்றிரவு இங்கேயிருக்கும் என்னுடைய கத்தோலிக்க நண்பர்களிடம் இதை மரியாதையுடன் கூறுகிறேன், நிறைய.... என்னுடைய ஜனங்களில் அநேகர் கத்தோலிக்கர்கள் தான். ஆனால் நான் ஒரு போதும் உங்களைப் புண்படுத்தும்படி இதைக் கூறவில்லை. நான் ஒரு போதும் அதற்காக வரவில்லை. நான் உங்களை ஆசீர்வதிக்கவே வந்திருக்கிறேன். உங்கள் மதத்திற்கு விரோதமாக நான் எதையும் கூறவில்லை, நான் இதைக் கூறுகிறேன்: கத்தோலிக்கன் தன்னுடைய போதனைகளுக்கு எவ்வளவு உண்மையாக ஜீவிக்கிறானோ அவ்வளவு உண்மையாக புரட்டஸ்டன்ட் ஜீவித்திருந்தால், நாம் ஒரு வித்தியாசமான உலகத்தைக் கொண்டிருந்திருப்போம். அது சரியே. ஆனால்... அவர்களுக்குப் போதிக்கப்பட்டதை, அவர்கள் விசுவாசிக்கிறார்கள்.
71. ஆனால் சமீபத்தில், வத்திக்கானில், நான் வத்திக்கானைப் பார்க்க அங்கு போனேன். அங்கே சரியாக ரோமிலேயே இரண்டு இரவுகளுக்கான கூட்டம் எனக்கு இருந்தது. அடுத்த நாள், வத்திக்கானிலிருந்து கொஞ்ச தூரத்தில், அவர்கள் வினோதமான ஏதோவொன்றைக் காண என்னை அழைத்துச் சென்றார்கள். அது ஒரு பெரிய சபையாக இருந்தது, அதற்குக் கீழே அடியில், அவர்களுக்கு ஒரு - ஒரு திராட்சைத் தோட்டத்தைப் போன்ற ஒன்று இருந்தது அல்லது ஒரு நடவுசெய்யும் இடம் என்று சொல்லலாம்.
72. மடத்துத்துறவிகள் மரிக்கும்போது, அவர்கள் இவர்களை கீழே கொண்டு சென்று, விதைகளை நிலத்தில் நடுவது போன்று, இவர்களை நடுகிறார்கள், அந்த மாமிசம் எலும்பிலிருந்து விழும் மட்டுமாக, அவர்களை அங்கேயே இருக்கும்படி விட்டு விடுகிறார்கள். பிறகு அவர்கள் அந்த எலும்பை எடுத்து, அதை வழவழப்பாக மெருகேற்றி மின்சார ஒளிவிளக்குகளைப் (light fixtures) பொருத்தி, இடங்களை ஏற்படுத்தி, அந்த மூலையில் மண்டை ஓடுகளை வைக்கிறார்கள். அது அப்படியே வரிசையாக முறையாக வைக்கப்பட்டிருந்தது (packed up), ஓ, அது இந்த கூரையைப் போன்று அவ்வளவு உயரமாக இருந்தது, துறவிகளுடைய எல்லாவிதமான எலும்புகளும் அங்கேயிருந்தன; அப்போது அங்கேயிருந்த அநேகம், மறுபடி புழுதிக்கு திரும்பிக் கொண்டிருந்தன.
73. ஜனங்களுடைய மூடநம்பிக்கையைக் காணும்போது, அவர்கள் ஏறக்குறைய அவைகளை இரண்டாக தேய்த்துப்போடும் அளவுக்கு அந்த எலும்புகளை அவர்கள் தேய்த்திருந்தார்கள்; சற்றே அவ்விதமான மூடநம்பிக்கைகள். தேவன் எலும்புகளில் வாசம் பண்ண மாட்டார். தேவன் மனிதகுலத்தில் ஆவியில் தான் வாசம் செய்கிறார், மனிதன் மூலமாக இருதயம் துடிக்கும் போது, அந்த இருதயத்தின் துடிப்பில் தான். தேவனுக்கு ஊழியக்காரர்கள் உண்டு.
74. நீங்கள், "நல்லது, அவர்கள் அம்மனிதனை எலிசாவின் எலும்புகளில் போட்ட போது, அவன் ஜீவனைப் பெற்றானே, அதைக் குறித்து என்ன-?" என்று கேட்கலாம். நல்லது, அது அப்படியே ஒரு நேரமாக இருக்க நேரிட்டது, சரியாக ஒரே நேரத்தில் எதிர்பாராது நிகழ்ந்த சம்பவமாக அது இருந்தது, இருப்பினும் கூட அது அவ்வாறு சம்பவித்தது, ஏனென்றால் இந்த ஜனங்களுக்குப் பின்னால் ஒரு அந்நிய அயல்நாட்டு இராணுவப் படை வந்து கொண்டிருந்தது, அவர்களுக்கு அது தெரியாதிருந்தது. அவர்கள் அவனை அங்கே உள்ளே வேண்டும் என்றே போடவில்லை. அந்த இராணுவத்துக்கு தப்பி ஓடும்படியாக, அவர்கள் அவனை அங்கே உள்ளே எறிந்து, அவன் எலிசாவின் எலும்புகளில் மோதின போது, தேவன் மிகத் துரிதமாக அவனை உயிரோடு எழுப்பினார். அந்த எலும்புகளில் எதுவுமில்லை, எலிசாவோ மகிமையில் இருந்தான். ஆமென். எனவே தேவன் மனிதர்களிடத்தில் தான் வாசம் செய்கிறார். ஆமென்.
75. இப்பொழுது, ஜனங்கள், தாங்கள் இயேசுவைக் காண்பதற்கான ஒரே வழி என்னவென்றால், அவர்கள் அவரை உங்களுக்குள் காணும் போது தான் - அவர்கள் உங்களுக்குள் அவரைக் காணும் போது தான். கிறிஸ்துவின் ஆவி உங்களுக்குள் வாசம் செய்து, உங்களுடைய நடத்தையை - உங்களுடைய செய்கைகளை அவருடைய ஆவிக்குள்ளாக கீழ்ப்படுத்தும் நிலைக்குள் கொண்டு வருமானால், அது நீங்கள் அவரைப் போன்று நடந்து கொள்ளவும், அவரைப் போன்று பேசவும், அவரைப்போன்று நடக்கவும், அவரைப்போன்று ஜீவிக்கவும் செய்யும். பாருங்கள்-? அப்போது ஜனங்கள் இயேசுவை உங்களுக்குள் காண்கிறார்கள். அங்கே தான், அந்தப் பழைய பாடல்: மற்றவர்கள் இயேசுவை உங்களுக்குள் காணட்டும்.
76. அவ்வாறாக, இந்தப் பெண் எலிசாவிடத்தில் தேவனைக் கண்டாள். அவள், "இப்பொழுது, நாம் இந்த தேவனுடைய ஊழியக்காரருக்கு ஏதாகிலும் செய்தால், அது அருமையாக இருக்கும் என்று நினைக்கிறேன். அப்போது தேவன் அதைக் கனப்படுத்துவார்" என்று கூறினாள். ஏன், அவள் அப்படியே ஒரு சில நூற்றாண்டுகளுக்கு முன்னால் ஜீவித்தாள். "என்னுடைய சீஷர்களில் ஒருவனுக்கு நீங்கள் ஒரு கலசம் குளிர்ந்த தண்ணீர் கொடுத்தாலும், நியாயத்தீர்ப்பில் அது மறக்கப்படாது" என்று இயேசு கூறியிருக்கிறார்.
77. தேவன் தம்முடைய ஜனங்களுக்குள் வைத்திருக்கிற வல்லமையைக் காண நாம் தவறி விடுகிறோம். தேவன் தம்முடைய ஜனங்களுக்குள் இருக்கிறார். நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா-? தேவன், தாம் பூமியின் மேல் நடந்தபோது, ஒருசமயம் அவர் தம்முடைய ஜனங்களோடு கூட இருந்தார். ஆனால் இப்பொழுதோ, தேவன் தம்முடைய ஜனங்களுக்குள் இருக்கிறார். "கொஞ்சக் காலத்திலே உலகம் என்னைக் காணாது, இருப்பினும் நீங்கள் என்னைக் காண்பீர்கள், நான் (தனிப்பட்ட பிரதிபெயர்) உங்களோடும், உங்களுக்குள்ளும் உலகத்தின் முடிவு பரியந்தம் இருப்பேன்."
78. தேவன் மனித இனத்திற்குள் வாசம் செய்து, அசைவாடி, கிரியை செய்கிறார். அல்லேலூயா-! தேவன் முறைமைகளின் மூலமாக கிரியை செய்வது கிடையாது. அவர் ஸ்தாபனங்களின் மூலமாகவும் கிரியை செய்வதில்லை. அவர் தனிப்பட்ட நபர்களின் மூலமாகவே கிரியை செய்கிறார். தேவன் மனிதனுக்குள் இருந்து கிரியை செய்கிறார். தேவனே இன்று கிரியை செய்வதில்லை (God doesn't do the work today). அவ்வண்ணமாகச் செய்யும் படியாக, அவர் தமது ஆவியை மனிதர்களுக்குள் ஊக்கமூட்டுகிறார் (தீவிரப் படுத்துகிறார்) அல்லது அனுப்புகிறார். அவர், “நானே திராட்சச்செடி (Vine)" என்று கூறியிருக்கிறார். திராட்சைச்செடி (vine) கனி கொடுப்பதில்லை. "நீங்கள் கொடிகள்."
79. இன்று மத்தியானத்தில், டேவிட் டூப்பிளஸிஸ் அவர்கள் என்னிடம் சொன்னது போன்று: "சோம்பேறிகளான இந்த பெந்தெகோஸ்தேயினர் முன்வரிசை இருக்கையை எடுத்து, தேவன் அதைச் செய்வதைப் பார்க்க முயலுவதற்குப் பதிலாக, அவர்கள் எழுந்து, எதையாவது செய்வார்களானால், சபையானது தொடர்ந்து போய்க் கொண்டே இருக்கும்” என்று அவர் கூறினார்.
80. அது சரி தான் என்று நான் நினைக்கிறேன். எழுந்து போங்கள். தேவன் உங்களை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார், நீங்கள் கிளைகளாக இருக்கிறீர்கள். உங்கள் கரங்கள் அவருடைய கரங்களாக இருக்கின்றன. உங்களுடைய உதடுகள் அவருடைய உதடுகளாக இருக்கின்றன. உங்களுடைய நினைவுகள் அவருடைய நினைவுகளாக இருக்கின்றன.
81. நான் சென்ற இரவில் கூறினது போன்று, "நாத்தான் தாவீதினிடத்தில், 'உம்முடைய இருதயத்தில் இருக்கிற எல்லாவற்றையும் செய்யும், தேவன் உம்மோடு இருக்கிறாரே" என்று சொன்னான். தேவன் அவருடைய ஜனங்களோடு இருக்கிறார், அவருடைய ஜனங்களுக்குள் இருக்கிறார்: "தேவன் மகிமையின் நம்பிக்கையாக உங்களுக்குள் இருக்கிறார்." பாருங்கள்-? தேவன் தம்முடைய ஜனங்களுக்குள் இருக்கிறார். அவர் கூடாரமிட்டுள்ளார்.
82. ஒரு முறை இந்த தூய்மையான கலப்படமற்ற கர்த்தராகிய இயேசுவின் சரீரமானது, கன்னிப் பிறப்பின் மூலமாக, அந்த இரத்த உயிரணுவானது உடைக்கப்பட்டு, அவர் ஒரு வழியை உண்டு பண்ணினார். உங்களால் அதைச் செய்ய முடியாதிருந்தது. நீங்கள் தகுதி உள்ளவர்களாக இருக்க முடியாதிருந்தது. ஆனால் உங்களுடைய உரிமைகளுக்காக அவர் தகுதியானவராக இருந்தார். தேவன், கிறிஸ்துவுக்குள் வாசம் செய்து, மனிதனையும் தேவனையும் ஒன்றாகக் கொண்டு வந்து, மறுபடியும் அவர்களை ஒன்றாக இணைக்கும்படி, அவர் ஒப்புரவாதலுக்கான மீட்கும் தொகையாக தம்மைத் தாமே கொடுத்த பிறகு... புறாவும் ஆட்டுக்குட்டியும் ஒன்றாக வந்து, பரலோகமும் பூமியும் முத்தமிட்டன. மனிதனும் தேவனும் ஒப்புரவானார்கள். அங்கே தான் காரியம்.
83. இப்பொழுது, இதைக் கவனியுங்கள், இந்த ஸ்திரீ, அவளுடைய நோக்கங்களும், அவளுடைய தெளிவான தூய்மையான மனமும், அவளுடைய இருதயத்தின் வாஞ்சையும் தேவனுக்காக எதையாவது செய்தாக வேண்டும் என்பதாக இருந்தது. அதை அவள் செய்யக் கூடிய வழி, இந்த தேவ மனுஷனுக்கு உதவி செய்வது தான். அவன் ஒரு தேவ மனுஷனாக இருந்தான் என்பதை அவள் அறிந்திருந்தாள்.
எனவே அவள், "என்னுடைய கணவரே, நாம் இந்த மனிதருக்காக ஏதாகிலும் அருமையானதைச் செய்வோம் என்று உம்மை வேண்டுகிறேன்" என்றாள்.
நல்லது, அவர்கள், "என்ன செய்வது" என்று கூறிக் கொண்டனர்.
84. "நாம் போய் மரவேலை செய்பவரையோ, அல்லது கட்டிட கான்ட்டிராக்டரையோ, அல்லது நிறைய பேரை அழைத்து வந்து, நம்முடைய வீட்டின் பக்கத்தில் ஒரு சிறு அறையை அவருக்குக் கட்டுவோம், சுவருக்கு அருகில் அதைக் கட்டுவோம், அவர் இந்த பக்கமாக வரும் போது, அவர் இதை தமக்கு சொந்தமானதாக அழைக்கலாம். அவர் இதைக் கொண்டு இருக்கட்டும். நாம் ஒரு சிறிய முக்காலியையும், ஒரு படுக்கையையும், ஒரு மேஜையையும் வைப்போம்” என்று கூறிக்கொண்டார்கள்.
85. சிறிய காரியத்தை அவள் செய்தபோது, அவளுடைய சொந்த பிள்ளைக்கு அவள் அந்தக் கல்லறையைக் கட்டிக் கொண்டிருந்தாள் என்பதையும்; அவள் இந்த தேவ மனுஷனுக்கு உதவி செய்து கொண்டிருந்த போது, அந்த நாளுக்காக எப்பொழுதும் சம்பவித்ததிலேயே மிகவும் அற்புதமான காரியத்தை அவள் காணும் ஒரு இடத்தை அவள் கட்டிக் கொண்டிருந்தாள் என்பதையும் அறிந்து கொண்டாள்.
86. அவளுடைய கணவன், "அன்பே, அது தான் சரியாக இருக்கும் என்று நம்புகிறேன்" என்று சொன்னான். எனவே அவர்கள் தச்சு வேலை செய்பவரை அழைத்து வந்து, அவைகளை ஒன்றாகச் சேர்த்து பொருத்தி, அதை எழுப்பி, பக்கத்தில் இந்த அருமையான சிறு அறையைக் கட்டினார்கள்.
87. நல்லது, எலிசா ஒரு நாள் அந்தப் பக்கமாக வந்த போது, அவள் எப்படியாக அதை ஆயத்தப்படுத்தியிருந்தாள் என்று பார்ப்பதை என்னால் கற்பனை செய்து பார்க்க முடிகிறது. உங்களால் கற்பனை செய்து பார்க்க முடிகிறதா-? ஒரு சிறு தொற்காளைப் போன்றோ, அல்லது ஏதோவொன்றைப் போன்ற அந்தச் சிறு ஸ்திரீ, அவள் அங்கே மேலே போகிறாள், அந்த தேவதாரு மரப்பலகைகள் அப்படியே பளபளப்பாகி மிளிரும் அளவுக்கு, அவள் தேய்த்துக் கழுவும் தூரிகையைக் கொண்டு, தரைகளை பளபளப்பாக்கி மெருகேற்றுவதை என்னால் காண முடிகிறது, உங்களுக்குத் தெரியும். அவள் இந்தச் சிறிய முக்காலியை இங்கே பொருத்தி, அதன் மேல் ஒரு சிறிய பஞ்சுத் திணியுறையை வைப்பதை என்னால் காண முடிகிறது.
88. அவள், "இந்த தேவனுடைய ஊழியக்காரர், அவர் இது பக்கமாக வரும் போது, அவர் மிகவும் களைப்பாக இருப்பார். நான் என்ன செய்யப் போகிறேன் என்று நான் உமக்குச் சொல்லுகிறேன். என்னால் கூடுமானவரையில், நான் படுக்கையை இறகுகளைக் கொண்டு மென்மையாக வைக்கப் போகிறேன், அதை அருமையாகச் செய்து, அதற்கு அடியில் ஒரு அருமையான மென்மையான வைக்கோல் மெத்தையை, அல்லது ஏதோவொன்றை வைக்கப் போகிறேன். இந்த தேவ ஊழியக்காரருக்காக, அது எவ்வளவு அருமையாக இருக்க முடியுமோ அவ்வளவு அருமையாக அதைக் கொண்டிருக்கப் போகிறேன். தொடர்ந்து.... நான் ஒவ்வொரு நாளும் மேலே வந்து, மெருகேற்றி, இந்த ஜன்னலை பளபளப்பாக்கப் போகிறேன். நான் என்ன செய்யப் போகிறேன் என்றால், அவர் வருவாரானால், நான் ஒவ்வொரு நாளும் ஒரு சிறு பூச்செண்டை (மலர்கொத்தை) அவருக்குக் கொண்டு வந்து, அங்கே அதன் மேல் வைப்பேன். நான் வாசலில் ஒரு சிறிய வரவேற்பு விரிப்பை வைப்பேன். பிறகு நான் கதவின் பக்கத்தில் இருந்து அவரைக் கூப்பிட்டு (tack), பேசி, "அன்புள்ள எளிய தேவ ஊழியரே, இது தேவனுக்கான என்னுடைய நன்றியாக இருக்கிறது. நான் இதை தேவனுடைய நாமத்தில், உமக்குக் கொடுக்கிறேன்," என்று சொல்லப் போகிறேன்" என்று கூறினாள்.
89. ஓ, ஒரு நாள் எலிசா அப்பக்கமாக வந்தான். அறைக்குள்ளிருந்த அந்த மலரானது மிகவும் அழகாக மலர்ந்திருப்பதை நான் கற்பனை செய்து பார்க்கிறேன். அவள் அதிகாலமே வெளியே சென்று, அவைகளைப் பறித்திருந்தாள், உங்களுக்குத் தெரியும். அதிகாலையில் தான், பனித்துளிகள் விழுகிறது. ஒரு இரவின் அமைதியைக் குறித்து ஏதோவொன்றுண்டு, தனியாக, அந்தப் பனித்துளிகள் விழுந்து, அது புத்துணர்ச்சி அளிக்கிறது.
90. ஓ, நாம் மாத்திரம் அமைதியாகி, தேவனோடு தனியாக இருப்போமானால், அந்தப் பனித்துளிகள் எப்படியாக நம்மை பலப்படுத்தும், அது எப்படியாக அந்த வாடி வதங்கிப் போன நிலையை நம்மை விட்டு எடுத்து விட்டு, நம்மை புத்தம் புதியதாய் (fresh) வைத்திருக்கும். நீங்கள் எப்பொழுதாவது ஒரு ரோஜா மலர் தோட்டத்தில் அதிகாலையில் போயிருக்கிறீர்களா-? நீங்கள் எப்பொழுதாவது அதிகாலையில் மருக்கொழுந்து கொடிகள் நிறைந்த படுகைகளுக்குள் (honeysuckle bed) போயிருக்கிறீர்களா-? அங்கே மொத்த காற்றும் நறுமணத்தினால் மூழ்கியிருக்கும். ஓ, நான் எப்படியாக அதை நேசிக்கிறேன்.
91. கீழே, இந்தியானாவிலுள்ள, நாட்டின் எனது பாகத்தில், நான் முன்கூட்டியே எழுந்து, சுவிட்ச் கீயை (switch key) ஆன் செய்து, இலவங்க மரவகை நெற்று (locust), அல்லது மருக்கொழுந்து கொடிகள் (honeysuckles), அவைகள் மலரும் போது, எங்கோ வெளியே அவைகள் இருக்கும் இடத்தில் போவேன். அப்போது நான் சாலையின் பக்கவாட்டில் இருப்பேன், ஓ, நான் எப்படியாக அதை முகர்ந்து பார்க்க விரும்புகிறேன், அதைப் பார்க்கவும், அந்தச் சிறு மருக்கொழுந்து கொடிகள் (honeysuckles) நின்று கொண்டிருப்பதைக் காணவும் எவ்வளவாய் நேசிக்கிறேன்.
92. நான், "ஓ தேவனே, நாளின் ஓட்டத்தில், இந்த நாட்களின் ஓட்டத்தில், நான் முழுவதுமாக வாடி வதங்கிப் போய், அலட்சியமாக இருந்தால், நான் அமைதியோடு உமது பிரசன்னத்தில் கிடந்து, உம்மோடு கூட தனித்து இருக்கட்டும். அப்பொழுது நான் மீண்டுமாக புத்துணர்ச்சியோடு வெளியே வருவேன்" என்றேன். ஓ, என்னே. அதைத் தான் செய்யும்படி தேவன் விரும்புகிறார். நம்மேல் மூடிக் கொண்டிருக்கும் ஜெபமாகிய நறுமணத்தோடு, கர்த்தராகிய இயேசுவின் இரத்தத்தினாலே மூடப்பட்டவர்களாய் இருக்க வேண்டுமென்று. அப்பொழுது அந்தத் தூதர்களுக்கு முன்பாக நாம் எவ்வளவு புத்துணர்ச்சியோடு இருக்கிறோம். நாம் தேவனுடைய பிரசன்னத்தில் எவ்வளவு புத்துணர்ச்சியோடு இருக்கிறோம்.
93. அவள் இந்தக் காலையில், மருக்கொழுந்து பூக்கள் (honeysuckles) உடைய ஒரு அருமையான மலர்கொத்தைப் (bouquet) பறித்து, அதை அந்த அறையில் ஒட்டிவைப்பதை என்னால் காண முடிகிறது. அவள், "ஓ, ஒருக்கால் இன்று, அந்த தேவ மனுஷன் இப்பக்கமாக வருவார் என்று நம்புகிறேன்" என்று கூறினாள். அவள் தன்னுடைய சிறு இடத்தை சுத்தம் செய்து, கதவை அடைத்து, அதை ஒன்றொடொன்று சாத்தினாள்.
94. சற்று கழிந்து, களைப்புற்று சோர்ந்து போயிருந்த ஒரு தீர்க்கதரிசி மேலே அந்தப் பாதையில் வருகிறான், அவனுடைய கால்கள் இரணமாயிருந்தது. கூடவே ஒரு சிறிய கோலை இழுத்துக் கொண்டும், தன்னுடைய பக்கவாட்டில் ஒரு சிறு கலச எண்ணெயை வைத்துக் கொண்டும் அவன் வந்து கொண்டிருக்கிறான். நல்லது, அவன், "கேயாசி, மகனே, அங்கே நம்முடைய சூனேமிய நண்பர்கள் இருக்கிறார்கள் என்று உனக்குத் தெரியும், அவர்கள் அங்கே வெளியே ஒரு சிறு அறையைக் கட்டியிருக்கிறார்கள். யாராவது அவர்களோடு தங்கியிருக்க வருவதற்கு அவர்களுக்கு உண்டோ என்று வியப்படைகிறேன்-? அந்த அறையை ஏன் கட்டி இருக்கிறார்கள் என்று வியந்து கொண்டிருக்கிறேன்" என்று கூறுவதை என்னால் கேட்க முடிகிறது.
அதற்கு கேயாசி, "எஜமானே, அங்கே கதவில் ஒரு சிறிய குறிப்பு இருக்கிறது. ஓ, ஒருக்கால் ஒருக்கால் வேறு யாருக்காவது அது சொந்தமாக இருக்கும் என்று கருதுகிறேன். நாம் போய்ப் பார்ப்போம்” என்று கூறுகிறான்.
95. எலிசா அங்கு போய் வாசிக்கிறான்: "அன்புள்ள தேவனுடைய ஊழியரே, தேவனுடைய நாமத்தில், உமக்காக இதைச் செய்வது தேவனுடைய பார்வையில் நன்றாக இருக்குமென்று நாங்கள் எண்ணினோம். நீர் ஒவ்வொரு முறையும் தங்கி மகிழுவீர் என்று நாங்கள் நம்புகிறோம். இதற்கு மேலும் கூடுதலாக ஏதாகிலும் உமக்கு சேவை செய்யவோ அல்லது ஆசீர்வாதத்திற்கோ உதவிக்கோ எங்களால் இருக்க முடியுமானால், எங்களுக்குத் தெரியப்படுத்தும். நாங்கள் உமது சேவையில் இருக்கிறோம்” என்று எழுதப்பட்டிருந்தது.
அவன் அதை வாசிக்கிற போது, கேயாசியின் கன்னங்களில் அந்த விதமாக கண்ணீர் வழிவதை என்னால் காண முடிகிறது. அவன், "ஓ, அது அற்புதமாக இல்லையா” என்று கூறுகிறான்.
96. எலிசா அங்கே கீழே நோக்கிப் பார்த்து, "அந்த கால் மிதியில் வரவேற்பு” என்று இருக்கிறதைப் பார். இப்பொழுது, அது அருமையானதாக இல்லையா-? உமக்குத் தெரியும், எலிசா, நான் உணருகிறேன்... கேயாசியே, நான் எனக்காகவே இதை கட்டியிருப்பது போன்று இங்கே உள்ளே போவதற்கு அவ்வளவாக வரவேற்கப்படுவதாக உணருகிறேன்" என்று கூறுகிறான். அது சரியே. அந்த விதமாகத் தான் நீங்கள் உணர விரும்புகிறீர்கள். அந்த விதமாகத் தான் நீங்கள் கொடுக்க விரும்புகிறீர்கள். தாராளமாகப் பழகுகிற ஒரு இருதயத்தோடு கொடுங்கள். கர்த்தருக்குக் கொடுங்கள்.
97. அவ்வண்ணமாக, அவன் உள்ளே சென்று, "இப்பொழுது, இதோ பார்" என்று கூறுகிறான். ஓ, என்னே. எலிசா தானே இந்தப் படுக்கையின் மேல் கைகால்களை விரித்தபடி படுத்துக் கொண்டு, அவன் தன்னுடைய செருப்புக்களைக் கழற்றினான். கேயாசி அவனுடைய கைத்தடியை எடுத்து, அதை மூலையில் வைத்து, கொஞ்சம் தண்ணீரை ஊற்றி, அவனுடைய தூசி நிறைந்த முகத்தை அந்த விதமாகக் கழுவும்படிக்கு ஒரு கந்தைத் துணியை (rag) அவனுக்குக் கொடுத்தான். ஓ, அந்தத் தீர்க்கதரிசி மிகவும் ஆசீர்வதிக்கப்பட்டிருந்தான். அவன் அங்கே படுத்திருந்தான். அப்போது அவன், “கேயாசி, போய், இந்த சூனேமியாளை அழைத்துக் கொண்டு வா” என்று கூறுவதை என்னால் கேட்க முடிகிறது. ஆமென். ஆனால் முதலாவது, நீ போவதற்கு முன்பு, அந்த மருக்கொழுந்து (honeysuckles) பூக்களை நான் முகர்ந்து பார்க்கட்டும்" என்று கூறுகிறான். மேலும் என்னே, அந்த ஆசீர்வதிக்கப்பட்ட அவனுடைய ஆத்துமா. அவன் அதை கீழே வைத்து விட்டு, போய் அழைத்தான்; அவள் தன்னுடைய வாசலண்டையில் நின்றிருந்தாள்.
98. அவன், "நான் அவளுக்காக தலைமை சேனாபதியினிடத்தில் பேசலாமா என்று அவளிடம் கேள், ஏனென்றால் அவர் என்னுடைய ஆத்ம நண்பர். நான் இராஜாவின் இடத்திலோ, பட்டணத்தின் நகரத்தலைவர் இடத்திலோ, அல்லது அது யாராக இருந்தாலும் அவரிடம் பேசலாமா என்று வியப்படைகிறேன். ஒருக்கால் நான் அவளுக்காக அவர்களிடம் பேசலாம். இதற்கு கைம்மாறு செய்ய நான் என்ன செய்யலாம்-?" என்று சொன்னான்.
"ஓ," அவள், "ஒன்றும் வேண்டாம், ஒன்றும் வேண்டாம். அதைப் பற்றிய எந்த எண்ணமும் இல்லை, ஏனென்றால் நான் உமக்குக் கொடுக்கும்படி, தேவனுடைய ஒரு சிறு அன்பின் அடையாளம் தான் இது” என்றாள்.
கேயாசி திரும்பி வந்து, செய்தியைக் கொண்டு வருகிறான்.
அவன், "கேயாசியே, நாம் அவளுக்காக என்ன செய்யலாம்-? இந்த எல்லா இரக்கத்திற்காகவும் (அன்புச் செயலுக்காகவும், நிச்சயமாக அங்கே ஏதாகிலும் செய்ய வேண்டும்” என்று கூறினான்.
ஏறக்குறைய அந்த சமயத்தில், கேயாசி, "நல்லது, எஜமானே, அவளுக்கு.... பிள்ளைகள் கிடையாது. என்னவென்று உமக்குத் தெரியுமா-? அவளுடைய புருஷனும் வயது சென்றவன்" என்று கூறுகிறான்.
99. அப்போது எலிசாவுக்கு முன்பாக, ஒரு தரிசனம் உருவாகிறதை என்னால் காண முடிகிறது, அவன், "ஒரு நிமிடம் இங்கே வரும்படியாக போய், அவளிடம் சொல்லு. நான் அவளிடம் பேச விரும்புகிறேன்" என்றான். ஆமென். "போய், இங்கே வரும்படியாக, அவளிடம் சொல்" என்றான். அவளும் வந்து கதவண்டை நின்றாள். அவன், "ஒரு பிராண உற்பத்தி காலத் திட்டத்திலே, அடுத்த வருடம் இதே நேரத்தில் ஒரு குமாரனை அணைத்துக் கொண்டிருப்பாய்” என்றான்.
"எலிசா அவர்களே, உமக்கு எப்படித் தெரியும்-?"
100. "நான் அவனைக் கண்டேன். அவன் இங்கே இருப்பான்." எப்படியாக அந்த எலியாவின் ஆவி இன்னும் ஜீவிக்கிறது. நிச்சயமாக அது இன்னுமாக ஜீவிக்கிறது. அது இன்னும் தேவனுடைய ஆவியாகவே இருக்கிறது. அது எலிசா அல்ல, அது தேவனாக இருந்தது. "அடுத்த வருடம் ஏறக்குறைய இதே நேரத்தில், ஒரு பிராண உற்பத்தி காலத் திட்டத்திலே, நீ ஒரு குமாரனைக் கொண்டிருப்பாய்” என்றான்.
அவள், "ஓ, தேவ மனுஷனே, என்னிடம் பொய் சொல்ல வேண்டாம்” என்றாள்.
அதற்கு அவன், "நல்லது, நீ போகலாம்" என்றான். வேறு வார்த்தைகளில் கூறினால், "நீ காண்பாய். அப்படியே தொடர்ந்து போ." ஏனென்றால் அவன் ஏற்கனவே தரிசனத்தைக் கண்டிருந்தான். அதெல்லாம் முடிந்துவிட்டது.
101. எனவே பிறகு, ஒரு பிராண உற்பத்தி காலத்திட்டத்தில், அவள் ஒரு பிள்ளையை அணைத்துக் கொண்டிருந்தாள். ஓ, அவள் எவ்வளவு சந்தோஷமாக இருந்தாள். அவளுடைய புருஷன் வயது சென்றவன், அவளோ நடுத்தர வயதுள்ளவள், இதோ அவர்கள் ஒரு அழகான சிறு பிள்ளையைக் கொண்டு இருந்தனர். ஒரு பிள்ளை ஒரு வீட்டிற்கு வருவது என்பது என்னவொரு ஆசீர்வாதமான காரியமாக இருக்கிறது. அது எப்படியாக எல்லாவற்றையும் மகிழ்ச்சியாக ஆக்கிவிடுகிறது.
102. இங்கே நாம் நிறுத்தி, நான் வர வேண்டியிருந்து, "சகோதரன் பிரன்ஹாமே, எனக்காக ஜெபித்துக் கொள்ளுங்கள்" என்று கூறின மலடாக இருந்த அந்த ஸ்திரீகளைக் குறித்துப் பேச எனக்கு நேரம் இருக்க விரும்புகிறேன். மேடையில் நின்று கொண்டு, பிள்ளை பெறும் வயதைத் தாண்டி விட்ட ஸ்திரீகளைக் குறித்து நான் தரிசனங்களைக் கண்டு, அவர்கள் சரியாக இப்பொழுது பிள்ளைகளை அணைத்துக் கொண்டிருக்கிறார்கள், ஏனென்றால் எலியாவின் தேவன் இன்னும் ஜீவிக்கிறார்.
103. இங்கே ஒருசி ல நாட்களுக்கு முன்பாக, ஷிரிவ்போர்ட்டில் நின்று, ஒரு குழந்தையை பிரதிஷ்டை பண்ணினேன். ஒரு சிறு பெண்ணுக்கு திருமணமாகி ஏறக்குறைய 15 வருடங்கள் ஆகியிருந்தது. அவளும் அவளுடைய புருஷனும் மிகவும் ஆரோக்கியமுள்ளவர்கள், unless புருஷன் மலட்டுத் தன்மை உள்ளவனாக இருந்தானா, அல்லது அவள் அவ்வாறு இருந்தாளா, ஒருவரா என்று புரிந்து கொள்ள முடியாதிருந்தது. அவர்களால் ஏன் எந்தப் பிள்ளையையும் கொண்டிருக்க முடியாதிருந்தது என்பதை அவர்களால் அவர்களால் புரிந்து கொள்ள முடியாதிருந்தது. அவள் ஜெபவரிசையில் இருந்தாள். அவள் மேலே வரத்தொடங்கினாள், நான், "சற்று பொறு, பெண்ணே. நீ ஒரு பிள்ளைக்காக விண்ணப்பம் செய்யும்படியாகவே இங்கே வந்து கொண்டிருக்கிறாய். கர்த்தர் உரைக்கிறதாவது, நீ உன்னுடைய கைகளில், பழுப்பு நிற தலைமயிரும், பழுப்பு நிற கண்களும் உடைய ஒரு ஆண்குழந்தையோடு அங்கே அதே படியில் நின்று கொண்டிருப்பதை நான் காண்கிறேன். கர்த்தர் உரைக்கிறதாவது, நீ அதைக் கொண்டிருப்பாய்” என்று கூறினேன். அவள் திரும்பி, அழத் தொடங்கி விட்டாள், பிறகு அவள் போய், தன்னுடைய கணவனை தழுவினாள். ஏறக்குறைய மூன்று மாதங்களுக்கு முன்பு, நான் குறிப்பிட்ட அதே இடத்தில் நின்று கொண்டிருந்தேன்; அப்போது நான் அந்தப் பெண்ணின் பழுப்பு நிற கண்கள் மற்றும் பழுப்பு நிற தலைமயிர் உடைய குழந்தையை கர்த்தருக்கென்று பிரதிஷ்டை பண்ணினேன், அதை கர்த்தருக்கென்று பிரதிஷ்டை பண்ணினேன்.
104. இன்றிரவு இந்தக் கட்டிடத்தில் இங்கு எங்கோ உட்கார்ந்து கொண்டிருக்கும் சகோதரன் சாத்மன் அவர்களோடு இருந்த போது, அவர் கனடாவிலிருந்து வந்திருக்கும் மிக அருமையான கிறிஸ்தவ சகோதரன், ஒரு சில வருடங்களுக்கு முன்பு, ஏறக்குறைய எட்டு வருடங்களுக்கு முன்பு, அங்கே நின்று கொண்டிருந்த போது, ஒரு வருட காலத்தில், அங்கே இத்தகைய ஐம்பது அல்லது 75 காரியங்கள் சம்பவித்தன என்று நினைக்கிறேன், என்னிடம் வந்த ஒரு சீமாட்டி இருந்தாள், மேலும் நான்... மனைவியும் நானும் அங்கே இருந்த போது, அவள் மிகவும் அருமையானவள். அவள் பெரிய ஜாடிகள் நிறைய பழச்சாறுகளையும் மற்றும் காரியங்களையும் என்னிடம் கொண்டு வந்தாள். அவள், "ஓ, சகோதரன் பிரன்ஹாமே, நான் எப்படியாக செய்திகளைக் கேட்டு மகிழ்கிறேன்” என்றாள்.
நான், "சகோதரியே, உனக்கு நன்றி” என்றேன்.
அவள், "நீர் கர்த்தருடைய ஒரு ஊழியக்காரர் என்று நான் நிச்சயமாகவே விசுவாசிக்கிறேன்" என்று கூறினாள்.
நான், "உனக்கு நன்றி, சகோதரியே. அதற்காக தேவன் உனக்குப் பலனளிக்கிறார்" என்றேன்.
105. மேலும் அவள் சொன்னாள்... அவள் அங்கே நின்று கொண்டிருக்கையில், நான் ஒரு தரிசனத்தைக் கண்டேன். இப்பொழுது, அவள் தன்னுடைய நடுத்தர வயதில் இருந்தாள். இது எட்டு வருடங்களுக்கு முன்பு நடந்தது. அவள், "ஓ, சகோதரன் பிரன்ஹாமே" என்றாள், அவள் சொன்னாள்…
நான், "சகோதரியே, கர்த்தர் உரைக்கிறதாவது, நீ உன்னுடைய கரங்களில் ஒரு சிறு கம்பளத்தில் ஒரு குழந்தையை பிடித்தபடி நின்று கொண்டிருப்பதை நான் காண்கிறேன்" என்றேன்.
அவள், “நானா-?" என்றாள்.
நான், "ஆமாம், பெருமாட்டியே, நீ தான். அது கர்த்தர் உரைக்கிறதாவது என்பதாக இருக்கிறது" என்றேன்.
அவள், "நீர் சரியாகத் தான் இருக்கிறீர் என்று நான் நம்புகிறேன்” என்றாள்.
நான், "அது நான் பேசிக் கொண்டிருப்பது அல்ல. அது கர்த்தர் உரைக்கிறதாவது" என்றேன். நல்லது, இரண்டு அல்லது மூன்று, நான்கு வருடங்கள் கழிந்தது, அவள் அதைச் சந்தேகிக்கத் தொடங்கினாள்.
106. சமீபத்தில், திரு.பாக்ஸ்டரும் நானும் மேலே இருந்தோம், நான் வடக்கு பிரிட்டிஸ் கொலம்பியாவிற்குள், இந்தியர்கள் மத்தியில் சென்று, அங்கு மேலே ஒரு சிறிய கூட்டத்தைக் கொண்டிருந்து விட்டு, இங்கே, சரியாக இப்பொழுது இங்கே உட்கார்ந்து கொண்டிருக்கிற சகோதரன் ராஸ்முசன் அவர்களோடு கூட இறங்கி வந்தேன். நாங்கள் இறங்கி கால்கரிக்குத் திரும்பி வந்தோம், மேலும் நாங்கள்... இன்னுஞ் சரியாகச் சொன்னால், அது எட்மண்டனில். நாங்கள் எட்மண்டனில் இரவு ஆராதனையில் இருக்கையில், நாங்கள் கூட்டத்தைக் கொண்டிருந்து விட்டு, பிரயாணத்தை அங்கு நிறுத்தின பிறகு, நான் வேட்டையாடுதலிலிருந்து திரும்பி வந்து கொண்டிருந்தேன். அவளுடைய, புருஷன் அங்கே என்னைச் சந்தித்தார், அவர் மிகவும் நற்குணமுடையவர்.
107. மேலும் அவர் சொன்னார்... நான் ஒரு சிறிய இலேசான மெல்லிய கோட்டை அணிந்திருந்தேன், எனென்றால் அது இலையுதிர் காலத்தின் தொடக்கமாக இருந்தது, இருப்பினும் இங்கே உஷ்ணமாக இருக்கிறது. கனடாவிலோ அது மிகவும் குளிராக இருக்கிறது. அவர் அந்த மேல் கோட்டை எனக்குக் கொடுக்க விரும்பினார். அவர் சென்ற ஏழு வருடங்களாக, மிஷனரி ஊழியங்களை தாங்கும்படிக்கு, தசமபாகத்தை அனுப்ப ஒருக்காலும் தவறினதே கிடையாது, என்னைத் தாங்குவதற்கு ஒரு போதும் தவறினதில்லை. அவர் ஒரு விசுவாசமான மனிதராகவும் (loyal man), ஒரு நல்ல மனிதராகவும் இருந்து வந்திருக்கிறார். மேலும் அவர்... அவர் அந்த இரவில் அங்கே நின்று கொண்டு, தம்முடைய கோட்டை எடுத்து, அதை எனக்குக் கொடுக்க விரும்பினார். நான், "வேண்டாம், சகோதரன் டாபிள். உம்முடைய இருதயம் ஆசீர்வதிக்கப்படுவதாக, நிச்சயமாக வேண்டாம்” என்று கூறினேன். அதன் பிறகு, கிறிஸ்துமஸ் நேரத்தில், அவர் எப்போதுமே குழந்தைகளுக்கு ஒரு அருமையான சிறு கேக்கோ, அல்லது ஏதோவொன்றோ, அல்லது சிறிய பொம்மையையோ, அல்லது ஏதோவொன்றையோ அனுப்பி அருமையாக இருந்து வந்தார். வேறு எந்தவித காரணத்திற்காகவும் அல்ல, ஆனால் அவர் அப்படியே அந்த விதமான ஒரு மனிதராக இருந்தார்.
108. இவ்வாறாக அவர் அங்கே வெளியில் நின்று கொண்டிருந்து, அவர், "சகோதரன் பிரன்ஹாமே, நான் ஒரு கட்டுமான பணி செய்பவன், நான் அரசாங்கத்துக்காக கட்டிக் கொடுக்கிறேன். ஆனால் உமக்குத் தெரியும், நான் மேலே டாசன் கிரீக்கைச் சுற்றிலும், அல்லது அங்கே அதற்கும் சற்று மேலே, ஒரு அஞ்சல் அலுவலகத்தைக் கட்டிக் கொடுக்க நான் போகக் கூடாது என்று எங்களிடம் கூறுகிற ஒரு தீர்க்கதரிசி இங்கேயிருக்கிறார். ரஷ்யர்கள் கனடா வழியாக ஐக்கிய நாடுகளை நோக்கி அணிவகுத்து வரும்படி ஆயத்தமாக இருப்பதாகவும், அவர்கள் இறங்கி வருகையில், பிரிட்டிஷ் கொலம்பியா முழுவதையும் துடைத்துத் துப்புரவாக்கி விடுவார்கள் என்றும் அவர் எங்களிடம் கூறுகிறார்” என்று கூறினார்.
109. நல்லது, நான் ஒரு மனிதனுடைய வார்த்தையை ஒருபோதும் சந்தேகிக்க விரும்பவில்லை. இப்பொழுது, நீங்கள் நிச்சயமாக ஒரு போதும் அதைச் செய்ய வேண்டாம். எனவே நான், “நல்லது, ஒருக்கால் அது அவ்வாறு இருக்கலாம், சகோதரன்-சகோதரன் டாபிள் அவர்களே" என்றேன். நான், "என்னே, ஒரு தீர்க்கதரிசி அதையா கூறினார்-?" என்றேன்.
"ஆமாம்." எனவே இல்லை... நேசிக்கும் சகோதரன். அவர், "ஓ, நான் இப்பொழுது என்ன செய்வது என்றே எனக்குத் தெரியவில்லை. நான் வேலை செய்யாமல் வெளியில் இருக்கிறேன், ஆனாலும், அது அவ்வளவு அற்புதமான ஒரு வேலையாக இருந்தது” என்று கூறினார்.
110. நான் இரகசியமாக நழுவி வெளியே சென்று, முழங்கால் படியிட்டு, ஜெபிக்கத் தொடங்கினேன். நான் அவ்வாறு ஜெபித்த போது, கர்த்தருடைய தூதனானவர் வந்து, "கர்த்தர் உரைக்கிறதாவது, அங்கே மேலே போ, ஏனென்றால் அந்த மனிதன் தவறாக இருக்கிறான் என்று போய் அவனிடம் சொல்லு" என்றார். தொடர்ந்து அவர், "அதோடு கூட, அந்தக் குழந்தையைக் குறித்து, அவனுடைய மனைவி சந்தேகித்துக் கொண்டிருக்கும் அந்த சந்தேகத்தைக் குறித்து எச்சரிக்கையாக இருக்க அவளிடம் கூறும்படி அவனிடம் பேசு" என்று கூறினார்.
111. எனவே நான் திரும்பிச் சென்று, "சகோதரன் டாபிள் அவர்களே, உம்முடைய சகோதரனையோ, உம்முடைய நண்பரையோ, அது யாராக இருந்தாலும் இழிவுபடுத்த வேண்டும் என்பதற்காக அல்ல, அந்த மனிதன் அதைக் கூறும்படியாக அழுத்தம் கொடுக்கப்பட்டிருக்கலாம். இப்பொழுது, நீர்... அந்த சகோதரனைக் குறித்து லேசான எதையும் கொண்டிருக்க நான் விரும்பவில்லை. இல்லை, ஐயா" என்றேன். ஆனால் நான், "கர்த்தருடைய ஊழியக்காரனாக, நான் கர்த்தர் உரைக்கிறதாவது என்பதை உடையவனாயிருக்கிறேன்; நீர் பாதுகாப்பாகவும் ஆசீர்வாதமாகவும் இருப்பீர். போய் அந்த வேலையைச் செய்யுங்கள்" என்று கூறினேன்.
அவர், "சகோதரன் பிரன்ஹாமே, நீர் அதைக் கூறினால், நான் அதை விசுவாசிக்கிறேன்" என்றார்.
112. நான், "அந்தக் குழந்தையைக் குறித்து சந்தேகிப்பதை விட்டுவிடும்படி உம்முடைய மனைவியிடம் சொல்லும்” என்றேன். அது ஏறக்குறைய மூன்று வருடங்களுக்கு முன்பு. நல்லது, சென்ற வாரத்தில், அந்தக் குழந்தை பிறந்தது. எட்டு வருடங்கள் மற்றும் ஏதோவொன்றிற்குப் பிறகு, தேவனுடைய வார்த்தை நித்தியமாக உண்மையாக இருக்கிறது. பழைய ஏற்பாட்டில் ஜீவித்த அதே தேவன் இன்றும் ஜீவிக்கிறார். அத்தகைய நூற்றுக்கணக்கான காரியங்கள்.....
113. ஏன், அது... நான் என்ன கூற முயற்சித்துக் கொண்டிருக்கிறேன்-? அங்கே முற்காலத்தில் எலிசாவோடு இருந்தவர் இயேசு கிறிஸ்து தான். இன்று உங்களோடு கூட இருப்பவரும் இயேசு கிறிஸ்து தான், அவர் உங்களோடும், உங்களுக்குள்ளும், உங்களினூடாகவும், உங்களுக்கு மேலாகவும் இருக்கிறார்: கிறிஸ்து, அவர் அதேவிதமாகவே இருக்கிறார்.
114. அதன் பிறகு இந்தக் குழந்தையானது ஒரு வயதுக்கு வளர்ந்த போது, அதற்கு ஏறக்குறைய பத்து அல்லது பன்னிரண்டு வயதானது, ஓ, அந்தக் குடும்பமானது இந்தச் சிறு மகனோடு கூட எவ்வளவு சந்தோஷமாயிருந்தது.
இப்பொழுது, நாம் ஜெப வரிசையை ஆரம்பிப்பதற்கு முன்பாக, கூர்ந்து கவனியுங்கள். தேவனுக்கு சித்தமானால், நாம் இங்கே உச்சக்கட்டமான காரியத்தைக் கூற விரும்புகிறோம்.
115. இப்பொழுது, இந்தச் சிறிய பையனைக் கவனியுங்கள். ஓ, இந்த சிறிய சூனேமியப் பையன், அந்த நாற்காலிகளுக்கு மேலாக குதிப்பதையும், அந்தக் காரியங்கள் எல்லாவற்றையும் வெளியே இழுப்பதையும் மற்றும் எல்லாவற்றையும் செய்து கொண்டிருப்பதையும் என்னால் கற்பனை செய்துபார்க்க முடிகிறது. ஆனால், ஓ, அதெல்லாம் சரியாகத்தான் இருந்தது; அது ஒரு மகனாகவும், அவர்களுடைய ஒரே பிள்ளையாகவும் இருந்தது. அது என்னவென்று எனக்குத் தெரியும், எனக்கும் ஒரு சிறுவன் இருக்கிறான். எனவே, ஓ, அவன் எப்படியாக தொடர்ந்து அவ்வாறு செய்து கொண்டிருந்தான், மற்றும் அப்பா, அவன் இரவில் வயலில் (இருந்து) வரும் போது, அவன் அந்தச் சிறு பிள்ளையை பற்றிப் பிடித்து, அவனை மேலும் கீழும் போட்டுக் கொள்வான் (bounce). மேலும் ஓ, அதைப்போன்ற ஒரு சிறு பிள்ளையை உங்களால் எப்படித் தான் நேசிக்காமல் இருக்க முடியும்-? அவைகள் எவ்வளவு தான் குறும்பு பண்ணினாலும், அது ஒரு பொருட்டல்ல, அதெல்லாம் சரியாகவே இருக்கும். நான் உங்களுக்குக் கூறுகிறேன், அவைகள் ஒரு காலத்தில் அந்தவிதமாக மாத்திரமே இருக்கின்றன, மேலும் அந்த.... நீங்கள் உங்கள் கரத்தில் ஒரு தீர்க்கதரிசியை பற்றிக் கொண்டிருக்கவில்லை என்பது உங்களுக்கு எப்படித் தெரியும்-? ... என்று உங்களுக்கு எப்படித் தெரியும்-?
116. கென்டக்கியில், மரக்கட்டையால் பிரிக்கப்பட்ட ஒரு தடுப்பில் இருந்த ஒரு சிறுகுடிலில், உமியினால் செய்யப்பட்ட ஒரு பழைய படுக்கையில், ஆபிரகாம் லிங்கன் அவர்களுடைய தாயார் அந்தச் சிறு குழந்தையை தூக்கின போது.... அவருடைய தாயாருடைய முகத்தைத் தட்டின அந்தச் சிறு கரங்கள்; அவளுடைய கன்னத்தில் அன்பாக தட்டிக் கொடுத்த அது, ஐக்கிய நாடுகளில் எப்பொழுதாகிலும் இருந்ததிலேயே மிகப்பெரிய ஜனாதிபதியாக இருக்கும் என்று அவர்களுக்கு எப்படித் தெரிந்திருக்கும்-? பத்து இலட்சம் ஆத்துமாக்களை கிறிஸ்துவிடம் அனுப்பின சார்ல்ஸ்.ஜி.பின்னி, அவர் அப்படி செய்வார் என்று அவருடைய தாயார் எப்படி நினைத்திருப்பார்கள்.... அவர் எப்படியாக ஒரு சிறு குழந்தையாக இருந்து, அவளுடைய கன்னத்தில் அவரை அன்பாக தட்டிக் கொடுத்திருப்பார்... அவள்... அவளுடைய முகத்தின் மேல் அந்த விதமாக ஒரு சிறிய கரமானது ஓசையுடன் முத்தமிட்டுக் கொண்டிருக்க, அது பத்து இலட்சம் ஜனங்களை மகிமைக்குப் போகும் பாதைக்கு சுட்டிக்காட்டும் என்று அவருடைய தாயார் எப்படி நினைத்திருப்பார்கள்-? எப்படி மோசேயின் அப்பாவும் அம்மாவும், அல்லது எலியா, அவர்களில் மற்ற எவரும்...-? நிச்சயமாக அந்தச் சிறு பிள்ளைகளை நேசியுங்கள்.
117. இங்கே இந்தச் சிறு பையன் துள்ளிக் குதித்துக் கொண்டும், கும்மாளம் அடித்துக் கொண்டும், விளையாடிக் கொண்டும் இருக்கிறான்; எனவே அவன் தன்னுடைய அப்பாவோடு வெளியே வயலுக்குப் போவதென்பது அவனுக்குச் சரியாகத் தான் இருந்தது. எனவே அவன் ஒரு நாள் வெளியே வயலில் சென்று, அங்கே சுற்றிலும் விளையாடிக் கொண்டிருந்தான். இப்பொழுது, அவனுக்கு கடும் வெயிலால் ஏற்படும் மயக்கம் (sunstroke) ஏற்பட்டிருக்கும் என்று நான் நம்புகிறேன். அது அவ்விதமாக செய்தது. அவன், "ஓ, என் தலை" என்று கூறுத் தொடங்கினான், அது பகலில் ஏறக்குறைய 11 மணி நேரமாக இருந்தது, "ஓ, என் தலை, என் தலை" என்றது பிள்ளை. இந்நிலையில் அவர்களுக்கு அந்நாளில், இப்பொழுது நமக்கு இருப்பது போன்று, காற்றுப் பதனாக்கம் (ஏர் கண்டிஷனிங்) இல்லாதிருந்தது. எனவே அவர்கள்... அந்தச் சிறு பையனை ஒரு கழுதையின் மேல் வைத்து, அவனை அவன் அம்மாவிடம் கொண்டு செல்ல அவனுக்கு ஒரு வேலைக்காரன் இருந்தான். அவள் அவனைத் தன்னுடைய மடியில் வைத்து, அவனை ஆட்டவும் மற்றும் அவனுக்காக தன்னால் செய்ய முடிந்த எல்லாவற்றையும் செய்ய தொடங்கினாள். ஏறக்குறைய மத்தியானத்தில், அவன் மரித்துப்போனான்.
118. இப்பொழுது இருளான ஒரு வேளையைக் குறித்துப் பேசுகிறீர்கள். அந்நேரத்தில், அந்த ஸ்திரீக்கு... எப்படி முடிந்திருக்கும். நீங்கள் என்ன செய்திருப்பீர்கள்-? எப்பொழுதாவது தாக்கினதிலேயே மிகவும் இருண்ட வேளையானது அவளுடைய ஜீவியத்தைத் தாக்கினது. என்ன சம்பவித்தது-? அந்த நள்ளிரவானது... தாக்கியது. நம்மில் நிறைய பேர் என்ன செய்திருப்போம் என்று தெரியுமா-? ஓலமிட்டுக்கொண்டும், அலறிக்கொண்டும், அழுது கொண்டும், அவ்வாறு செய்து கொண்டும் இருந்திருப்போம். அதைத் தான் நாம் செய்திருப்போம். ஆனால் அவள் அவ்வாறு இருக்கவில்லை, அவள் விசுவாசமுள்ள ஒரு ஸ்திரீயாக இருந்தாள். அவள் என்ன செய்தாள் என்று உங்களுக்குத் தெரியுமா-? அவள் நேசித்த அந்த தேவனைத் தான் அவள் கூப்பிட்டாள். அல்லேலூயா-! அந்தத் தீர்க்கதரிசிக்கு அனுகூலமான (ஆதரவான) ஒரு காரியத்தைச் செய்யும்படி, அவளை வழிநடத்தின ஒரு உள்ளூக்கம் தான், அந்தக் குழந்தையை எடுத்து, தீர்க்கதரிசி உறங்கின அவருடைய படுக்கையில் கிடத்து" என்றது. அவனைக் கொண்டு செல்வதற்கு என்னவொரு இடம். அது முற்றிலும் சரியே ஆமென்.
119. இவ்வாறாக அவள், சிறு பிள்ளையை தன்னுடைய கைகளில் தூக்கியெடுத்து, அவனுக்கு முத்தமிட்டு, அவனுடைய கொஞ்ச சுருள் முடியை அந்தவிதமாக கோதிவிட்டு, வெளியே நடந்து செல்வதை என்னால் காண முடிகிறது. தகப்பனார் அவளுக்கு பின்னால் தன்னுடைய உச்சக்குரலில் கூச்சலிட்டவாறு பின்தொடர்ந்து போனான், அண்டை வீட்டார் யாவரும் ஓலமிட்டுக் கொண்டிருக்க, அவளோ அமைதியாக நடந்து சென்றாள், எப்போதாவது கண்ணீர் வடிந்தது. ஆனாலும் அதெல்லாம் முடிந்து போயிருக்கவில்லை.
120. அவளுக்கு எந்த நம்பிக்கையும் இல்லாதிருக்குமோ என்பதாகத் தான் அது இருந்திருக்கும். ஆனால் அங்கே அவளுக்குள்ளே ஏதோவொன்று இருந்தது. அல்லேலூயா-! அவனை எவ்வாறு பெற்றுக் கொள்வது என்பதை அவள் அறிந்திருந்தாள். இங்கே அவனிடம் பேசின அந்த உதடுகளை அவள் அறிந்திருந்தாள். தானியேல், "பரலோகத்தின் தேவன் ஒருவர் இருக்கிறார்" என்று கூறினது போன்று, அங்கே பரலோகத்தின் தேவன் ஒருவர் இருந்தார் என்பதை அவள் அறிந்திருந்தாள். நிச்சயமாக. அவள் அந்தச் சிறு பிள்ளையைப் பாதுகாப்பாக வைத்திருந்தாள். இப்பொழுது, அவள் எல்லாம் முடிந்து விட்டதாக அவள் உணர்ந்திருப்பாளானால், அது முடிந்து போனதாகத் தான் இருந்திருக்கும். ஆனால் அவளுடைய இருதயத்தில் கீழே ஏதோவொன்று அசைந்து கொண்டிருந்தது. எல்லா நம்பிக்கையும் போய் விட்டிருந்த போதும், ஏதோவொன்று அசையத் தொடங்கியது. எல்லா அறிவுப்பூர்வமான விவேகமும் போய் விட்டிருந்த போது... நாம் அறிவுப் பூர்வமான விவேகத்தை கீழே எறிந்துவிட வேண்டும். அது நீங்கள் உங்கள் சிந்தையில் என்ன சிந்திக்க முடிகிறது என்பதோ, உங்கள் அறிவாற்றலோ அல்ல; அது உங்கள் ஆத்துமா உங்களிடம் என்ன கூறுகிறது என்பதும், உங்கள் இருதயம் உங்களிடம் என்ன கூறுகிறது என்பதுமாக இருக்கிறது.
121. அவள் வெளியே அந்தச் சிறு ரோஜாமலர் தோட்டம் வழியாக நடந்து வெளியே சென்று, கீழே அந்தச் சிறு பாதைக்கு வந்து, அந்தச் சிறு மூலைக்குச் சென்று, கதவைத் திறக்கிறாள். அந்த வரவேற்பு விரிப்பில், அவள் அதன் மேல் நடந்து செல்கிறாள், அங்கே அதன் மேல் தான் இந்த தேவ மனுஷனும் நடந்து போயிருந்தான், பின்பு அவள் அந்தச் சிறுவனை கிடத்தினாள், எலிசாவுடைய தலையணையையும் வைத்தாள், அங்கு தான் தேவனுடைய அந்தப் பரிசுத்தவான் படுத்திருந்து, தன்னுடைய சிறு தலையின் கீழ் அதை வைத்து, ஒரு சிறிய போர்வையை தன்னுடைய முகத்தின் மேலே போர்த்தினான். பிறகு அவள் வெளியே திரும்பி நடந்து சென்றாள், எல்லாருமே கூச்சலிட்டுக் கொண்டும், அவ்வாறு செய்து கொண்டும் இருந்தார்கள், அவள், "எனக்கு ஒரு கழுதையில் சேணம் வைத்து, ஓட்டிக் கொண்டு போ, நம்மால் எவ்வளவு வேகமாகப் போக முடியுமோ அவ்வளவு வேகமாக கர்மேல் பர்வதத்திற்குப் போவோம். நிறுத்தும்படி நான் உனக்குச் சொன்னாலொழிய நிறுத்தாதே” என்றாள்.
122. "ஓ," அவளுடைய புருஷன், "இன்று அமாவாசையும் அல்ல, ஓய்வு நாளும் அல்ல. அந்தக் குறிப்பிட்ட நாட்களில் மட்டும் தானே தீர்க்கதரிசி இதனூடாக கடந்து வந்து, உபவாசம் பண்ணி ஜெபிக்கும்படியாக, அவர் அங்கு மேலே அந்தச் சிறிய குகைக்குள் போவார். நல்லது, இப்பொழுது, அங்கே அங்கே, அங்கே போவதற்கு எந்த அவசியமும் இல்லையே” என்றான்.
அதற்கு அவள், "சமாதானம்” என்று கூறினாள். ஆமென். நான் அதைக் குறித்து சிந்தித்துப் பார்க்கும் போது, அது ஒவ்வொரு முறையும் என்னை அப்படியே சிலிர்ப்பூட்டுகிறது.
123. அது என்னவாக இருந்தது-? அவளுடைய இருதயத்திலுள்ள ஏதோவொன்று எலிசா அங்கே இருக்கிறான் என்று அவளிடம் கூறினது. நீங்கள் அப்படியே.... அது உங்களை ஏமாற்றாது; அவ்வளவு தான். அது தெய்வீக வெளிப்பாடாக இருக்கிறது. நிச்சயமாக அது தெய்வீக வெளிப்பாடு தான். "இந்தப் பரிசுத்தவானுக்காக இதைக் கட்டு; இந்தப் பரிசுத்தவானுக்கு இந்த அருமையான சிறு இடத்தை கொடுத்து, இதை ஒழுங்கு செய்” என்று கூறின அதே காரியம் தான் அது, அந்த அதே வெளிப்பாடானது அவளினூடாக பொழிந்து கொண்டிருந்தது, அதே வல்லமை தான், "அங்கே மேலே எலிசா இருக்கிறான்; போய் அவனை அழைத்துவா" என்று கூறிக் கொண்டிருந்தது.
124. ஓ, தேவனுக்குத் துதி உண்டாவதாக. இயேசு மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்து, இப்பொழுது சரியாக இங்கேயே இருக்கிறார் என்ற அந்த வெளிப்பாடானது இன்றிரவு இந்த ஜனக்கூட்டத்தினர் மேல் பலமாக அடிக்குமானால், நீங்கள் இங்கிருந்து ஒரு தேவையோடாவது வெளியே போகவே மாட்டீர்கள். இங்கே உள்ளே பலவீனமான ஒரு நபரும் இருக்கவே மாட்டீர்கள். நிச்சயமாக.
அவள், "இப்பொழுது, அதெல்லாம் சரிதான்" என்றாள்.
125. இப்பொழுது அவளுடைய புருஷன் அந்தச் சிறிய ஒரே பக்க சேணத்தைப் போடுவதை என்னால் காண முடிகிறது. அவள் தன்னுடைய சின்னஞ்சிறிய காலை அங்கே மேலே போடும்படியாக, அவளை மேலே தூக்குகையில் அவன் அவளுக்கு உதவி செய்கிறான். அவள் அந்தச் சிறிய கழுதையின் மேல் அமர்ந்து, தன்னுடைய முகத்தின் குறுக்காக ஒரு சிறிய தோளணிக்கவணியை (shawl) இழுத்துவைத்து, அவனை முத்தமிட்டு, போய் வருகிறேன் என்று சொல்லி, தன்னுடைய கண்ணீரைத் துடைத்துவிட்டு, “இப்பொழுது, கணவரே, அழாதீர்கள், நீங்கள் அழாதீர்கள்” என்றாள்.
"மனைவியே, என்ன விஷயம்-?" 
"அழாதீர்கள். அழாதீர்கள்."
“நல்லது, என்ன...-? நல்லது, நீ எப்படி இதை மிக லேசாக எடுத்துக்கொள்கிறாய்-?"
126. "அன்பே , என்னுடைய இருதயமும் உமது இருதயம் உணருவது போன்றே அதேவிதமாக உணருகிறது, ஆனால் அங்கே ஏதோவொன்று சம்பவித்து விட்டது. எனக்கு உள்ளிருக்கும் ஏதோவொன்று, நான் கட்டாயம் தேவனுடைய மனுஷனை உடனடியாக பார்த்தாக வேண்டும் என்று என்னிடம் கூறுகிறது." அவள் அந்த வேலைக்காரனிடம் சொன்னாள், (அவர்கள் நிச்சயமாகவே, கழுதைகளால் தான் நடத்திச் செல்லப்பட்டார்கள்) அவள், "இப்பொழுது, நீ முன்னால் வேகமாக ஓட்டிக்கொண்டு போ, நான் உனக்குச் சொன்னாலொழிய, நீ நிறுத்தவோ, அல்லது முடிவு செய்யவும் கூட செய்யாதே” என்று கூறினாள்.
அவள் தொடர்ந்து மேலே சென்றாள். அவள் சுற்றிலும் போய்க் கொண்டிருந்து, அப்படியே இந்தச் சிறு கழுதையின் மேல் இடைவிடாமல் விரைந்து சென்று கொண்டே, தேவனைக் குறித்த துதிகளைப் பாடிக் கொண்டிருந்தாள். ஓ, என்னே.
127. எலிசா அங்கே பின்னால் உட்கார்ந்து கொண்டு, அந்தப் புஸ்தகச்சுருளை வாசித்துக் கொண்டிருந்தான், உங்களுக்குத் தெரியும், என்னவெல்லாமோ சம்பவித்திருந்தாலும், அவன் அங்கே பின்னால் உட்கார்ந்து கொண்டிருந்தான். கேயாசி கதவண்டை உட்கார்ந்திருந்து, தலையசைத்து வரவேற்பளித்துக் கொண்டிருந்தான். எலிசா தன்னுடைய கண்களைத் துடைத்தவாறு, வெளியே நோக்கிப் பார்ப்பதை என்னால் காண முடிகிறது. அவன், "கேயாசி” என்று கூறுகிறான்.
"ஆம், ஏஜமானே." அவன் உடனடியாக காலூன்றி எழுந்து நின்றான்.
"இதோ சூனியேமியாள் வருகிறாள். அவளுக்கு என்ன வேண்டுமென்று போய்ப் பார். அவளோடிருக்கும் எல்லாரும் சுகமாயிருக்கிறார்களா என்றும், அவளுடைய புருஷனும், அவள் பிள்ளையும் சுகமாயிருக்கிறார்களா என்றும் அவளிடம் கேள்” என்றான்.
எனவே கேயாசி சற்று வெளியே சென்று, "உம்மோடு இருக்கிற எல்லாரும் சுகமாய் இருக்கிறார்களா-? உம்முடைய கணவர் சுகமாயிருக்கிறாரா-? பிள்ளை சுகமாய் இருக்கிறானா-?" என்று கேட்டான்.
128. சகோதரனே, நீ என்ன சொல்லப் போகிறாய்-? நீ என்ன கூறப் போகிறாய்-? நல்லது இப்பொழுது, நான் அறிவாற்றல்களின் பேரில் சார்ந்திருந்தால், நான், "ஓ இரக்கமுள்ள தேவனே, ஓ, என்னுடைய குழந்தை போய்விட்டான்" என்று சொல்லி இருந்திருப்பேன். ஆனால் அங்கே எனக்குள்ளிருக்கும் ஏதோவொன்று, "வித்தியாசமான ஏதோவொன்றைக் கூறு” என்று கூறுகிறது.
129. அவள், "எல்லாரும் சுகமாயிருக்கிறார்கள்" என்றாள். ஆமென். ஆமென். “எல்லாமே சரியாக இருக்கிறது." ஓ, என்னே. அது நியாயவாதங்களை தரையில் எறிந்து போடாதிருக்குமானால். அதைத் தான் உலகம் முட்டாள்தனமாக அழைக்கிறது; அதைத்தான் விஞ்ஞானம் பைத்தியம் என்று அழைக்கிறது. எனவே அது என்ன வித்தியாசத்தை ஏற்படுத்தும்-? அவள், "எல்லாம் சரியாக உள்ளது. எல்லாமே பூரணமாக சரியாகவே இருக்கிறது” என்றாள்.
இந்நிலையில் அவள் மேலே அவனை நோக்கி ஓட்டிச்சென்று, அந்தச் சிறு பக்கவாட்டு சேணத்திலிருந்து கீழே குதித்தாள். அந்தச் சிறு ஆள் திரும்பிப் போவதற்காக அந்தச் சிறு கழுதையைத் திருப்பினான்.
130. எலிசா, “இப்பொழுது, அவளுடைய இருதயம் ஏதோவொன்றைக் குறித்து முழுவதும் உடைந்து போயிருக்கிறது, ஏனென்றால் அந்தக் கண்ணீர் அவளுடைய கண்ணில் இருப்பதை என்னால் காண முடிகிறது. ஆனால் உனக்குத் தெரியும், தேவன் நிறைய காரியங்களை எனக்குச் சொல்லுகிறார், ஆனால் அவர் என்னிடம் எல்லாவற்றையும் கூறுவதில்லை" என்று சொன்னான். தேவன் தம்முடைய தீர்க்கதரிசிகளிடம் எல்லாவற்றையும் கூறுவதில்லை. இல்லை, இல்லை, அவருக்குச் சித்தமானவற்றைத் தான் கூறுகிறார். இப்பொழுது, அவன், "இப்பொழுது, அவளுடைய இருதயம் உடைந்து போயிருக்கிறது. அவள் ஏதோவொன்றைக் குறித்து முழுவதுமாக நிலைகுலைந்து போயிருக்கிறாள். ஆனால் அது என்னவென்று எனக்கு - எனக்குத் தெரியவில்லை" என்றான்.
அவள் அதை அவனுக்கு வெளிப்படுத்தி, என்ன நடந்திருந்தது என்பதை அவனிடம் கூறத் தொடங்கினாள்.
131. நல்லது, எலிசா, "இப்பொழுது, ஒரு நிமிடம் பொறு. எந்தத் தரிசனமும் இல்லையே, நான் என்னச் செய்யப் போகிறேன். நான் எதையும் காணவில்லையே. என்ன சொல்லுவது என்றே தெரியவில்லையே. ஆனால் ஒரு காரியம் எனக்குத் தெரியும்: ஜீவிக்கிற ஒரு பரலோக தேவன் அங்கே இருக்கிறார். அது தான் ஒரு காரியம். நான் என் மேல் அபிஷேகத்தைக் கொண்டிருந்த அநேக நேரங்களில், நான் நடந்து சென்று கொண்டேயிருந்த போது, இந்தப் பழைய தடியும் அந்த வனாந்தரத்தினூடாக கூடவே மேலே வந்து கொண்டிருந்ததே, அந்த அபிஷேகம் என் மேல் இருக்க, அந்தக் தடியும் கூடவே வந்து கொண்டிருந்தது என்று எனக்குத் தெரியும். எனவே, கேயாசியே, நீ என்னுடைய ஊழியக்காரன். நீ மிகத் துரிதமாக உன் இடையைக் கட்டிக் கொள்ள, முழு சர்வாயுதவர்க்கத்தையும் தரித்துக்கொள்ள விரும்புகிறேன். நான் நடந்து கொண்டு வந்திருக்கிற, இந்தத் தடியை நீ எடுத்துக் கொண்டு போ; அது ஆசீர்வதிக்கப்பட்டது. நீ போய், அதை பிள்ளையின் மேல் வைக்க நான் விரும்புகிறேன். யாராவது உன்னை நிறுத்த முயன்றால், அவர்கள் பேரில் எந்தக் கவனத்தையும் செலுத்தாதே...” என்று சொன்னான்.
132. இன்று பிரசங்கிமார்களாகிய நம்மோடுள்ள தொல்லையும் அது தான். சபை அங்கத்தினர்களாகிய நம்மோடுள்ள தொல்லையும் அது தான். நித்திய ஜீவனுக்கு உயிர்த்து எழுந்ததின் நிமித்தமாக இழக்கப்பட்டவர்களுக்கும் மரித்துக் கொண்டிருக்கிறவர்களுக்கும் கொண்டு போகும்படியான ஒரு மிஷன் ஊழியத்தை தேவன் நமக்குக் கொடுத்திருக்கிறார், நாமோ அதை நிறுத்திவிட்டு, சமூகங்களையும், அரட்டையடிப்பதையும், விருந்துகளையும், தேநீர் விருந்துகளையும், இரவுச்சாப்பாடுகளையும், தையல் மற்றும் தைப்பதையும், மற்றும் இன்ன இன்ன காரியங்களையும் மற்ற எல்லாவற்றையுமே கொண்டிருக்கிறோம். மரித்தவர்கள் இடத்தில் நம்மால் வர முடியாததில் வியப்பொன்றுமில்லை.
"இந்தச் செய்தியைக் கொண்டு போவதைத் தவிர எதையும் கூறாதே” என்றான்.
133. எனவே எலிசா போகத் தொடங்கினான், அல்லது, அந்தப் பையன் அந்தத் தடியை எடுத்துக்கொண்டு அங்கிருந்து போகத் தொடங்கினான். ஆனால் உங்களுக்குத் தெரியும், அந்த ஸ்திரீயின் விசுவாசம்: தேவன் அந்தத் தடியில் இருக்கிறார் என்பதைப் பற்றி அவளுக்குத் தெரியாதிருந்தது, ஆனால் தேவன் அந்தத் தீர்க்கதரிசிக்குள் இருந்தார் என்பதை அவள் அறிந்திருந்தாள். அவள், "உம்முடைய தேவனாகிய கர்த்தருடைய ஜீவனைக் கொண்டு, தேவனுடைய பரிசுத்தவானாகிய உம்மை நான் விடப் போவதில்லை. நான் சரியாக உம்மோடு கூட தரித்திருந்து, நீர் என்ன செய்யப் போகிறீர் என்று காணப் போகிறேன்" என்றாள். ஓ, எனக்கு அது பிடிக்கும்.
134. உங்கள் நோக்கத்தோடு தரித்திருங்கள். திரும்பக் கொடுத்து விடாதீர்கள். அதனோடு தரித்திருங்கள். அவளுக்கு ஒரு - ஒரு வெளிப்பாடு இருந்தது. அவளுக்கு ஒரு தரிசனம் இருந்தது, அல்லது இருந்த வண்ணமாக, ஏதோவொன்று... பற்றிய ஒரு வெளிப்பாடு அவளுக்கு இருந்தது. அவளுக்காக எலிசா ஏதோவொன்றைக் கொண்டிருந்தான். அவளுக்கு அது கொடுக்கப்படுவது வரையில், அவள் தரிக்கப் போவதாக இருந்தாள், அவள், "தேவனாகிய கர்த்தருடைய ஜீவனைக் கொண்டு, நான் உம்மை விடவே மாட்டேன்" என்றாள்.
135. எலிசா, “நல்லது, என்னால் வேறெந்த விதத்திலும் உன்னை நிராகரிக்க முடியாது என்று நினைக்கிறேன், நான் என்னுடைய காலணிகளை அணிந்து, புறப்பட்டு வருகிறேன்" என்றான். எனவே அவன் தன்னுடைய காலணிகளை துரிதமாக அணிந்து கொண்டு, இதோ அவனும் அந்த ஸ்திரீயும் வருகிறார்கள்.
136. இந்தக் காட்சியைப் பாருங்கள். இதோ ஒரு சிறிய கறுத்த பையன் (dark boy) தன்னுடைய கரத்தில் ஒரு தடியை கொண்டவனாய் நெடுக ஓடிக் கொண்டிருக்கிறான். எல்லாரும், "ஹலோ, கேயாசி. இந்தக் காலையில் எலிசா எப்படியிருக்கிறார்-?" என்று கேட்கிறார்கள். (சகோதரன் பிரன்ஹாம் ஓடிக்கொடிருக்கும் சத்தத்தைக் கொடுக்கிறார் - ஆசிரியர்.) அவன் கர்த்தருடைய வேலையில் இருந்தான். ஆமென்.
அவர்களில் சிலர், “ஏய், நீ ஏன் அந்தத் தடியை உன் கையில் வைத்திருக்கிறாய்-?" என்று கேட்டார்கள்.
137. அவன் தன்னுடைய இருதயத்தில், "எப்படியும் பழைய அவிசுவாசிகளாகிய உங்களிடம் நான் சொல்லப் போவதில்லை" என்று கூறுவதை என்னால் அப்படியே கேட்க முடிகிறது. இப்படியாக அவன் தொடர்ந்து போய்க் கொண்டேயிருந்தான். "செய்ய வேண்டிய ஒரு வேலை எனக்கு உண்டு." அப்படியே தொடர்ந்து போய்க்கொண்டேயிருந்தான்.
138. நல்லது, சற்று கழிந்து, அந்த மலையின் குறுக்காக வந்து கொண்டிருப்பதைப் பாருங்கள், இதோ இந்த ஸ்திரீயோ எலியாவைப் பற்றியபடியே வந்து கொண்டிருக்கிறாள், இதோ அவர்கள் அந்த மலையின் குறுக்காக வருகிறார்கள். அந்த தகப்பனார் அங்கே வெளியே நின்று கொண்டு, "ஓ, இதோ அவள் வருகிறாள். இதோ அவள் வருகிறாள்" என்று கூறுவதை என்னால் பார்க்க முடிகிறது.
139. அந்த வாலிபனுக்கு அந்த இருவரைக் காட்டிலும் வேகமாக ஓட முடிந்தது. இப்படியாக அவன் உள்ளே போய், அந்தத் தடியை பிள்ளையின் மேல் வைத்து விட்டு, "இதோ, அது கிரியை செய்வதை நாம் காண்போம். இல்லை, இல்லை, நம்பவில்லை.... இது கிரியை செய்யப் போகிறது என்பதை நான் நம்ப மாட்டேன். இப்பொழுது, நாம் பார்க்கலாம். இப்பொழுது, நான் காணட்டும், ஒரு நிமிடம் பொறுங்கள் - ஒரு நிமிடம் பொறுங்கள். இப்பொழுது, அவர்.... செய்யப் போகிறார். ஓ, எப்படியும் அதோ எலிசா வருகிறாரே. இப்பொழுது, ஒரு நிமிடம் பொறுங்கள். இது கிரியை செய்யப் போகிறது என்று நான் நினைக்கவில்லை” என்று சொன்னான். அது தான் காரணம். நாம் - நாம் போதுமான காலம் அதை அங்கேயே இருக்கும்படி வைப்பதில்லை. பாருங்கள்-?
140. எனவே அவன் அந்தத் தடியை மறுபடியுமாக எடுத்துக் கொண்டு, அவனைச் சந்திக்க ஓடினான். அவன், “அது கிரியை செய்யவில்லை” என்றான். இன்று சபையோடும் காரியம் அது தான். அந்தக் காரணத்தினால் தான் அது கிரியை செய்வதில்லை. இதோ எலிசா வருகிறான்.
141. இப்பொழுது, என்னவொரு காட்சி என்று பாருங்கள். இதோ எலிசா உள்ளே நடந்து வருகிறான், அண்டை வீட்டார்கள் எல்லாரும் கூச்சலிட்டுக் கொண்டும், அழுது கொண்டும் இருக்கிறார்கள். இதோ தோல்வியடைந்த ஒரு ஊழியக்காரன் நின்று கொண்டு, “நல்லது, என்னுடைய எஜமானர் இதைச் செய்யும்படி என்னிடம் கூறினார். ஆனால் அவருடைய வார்த்தை நிச்சயமாக தோல்வியடைந்து விட்டது. அவர் ஒரு மனிதன் தான் என்று அது காண்பிக்கப் போகிறது. அங்கே அதற்கு இருப்பது எல்லாம் அவ்வளவு தான்" என்று கூறிக் கொண்டு இருக்கிறான்.
142. இதோ எலிசா மேலே வருகிறான், எந்தத் தரிசனமோ அதன் பேரில் கிரியை செய்ய வேறு எதுவுமில்லை. இங்கேயோ தன்னுடைய இருதயத்தில் விசுவாசத்தோடு கூட ஒரு ஸ்திரீ இருக்கிறாள். எலிசா அதை உற்று நோக்கிவிட்டு, "நல்லது, நான் அதிகம் பெற்றிருக்காமல் இருந்தாலும், என்னால் உன்னுடையதோடு கிரியை செய்ய முடியும், எனவே நான்..." என்றான். அது தான் வழியாகும். "நான் உன்னுடைய வெளிப்பாட்டின் பேரில் மேலே போவேன்" என்றான்.
143. எனவே அவன் அந்த வீட்டின் மேலே நடந்து போனான். அந்தத் தகப்பனார் ஓடிவந்து, "ஓ, தேவனுடைய பரிசுத்தவானே. ஓ, என்னுடைய பரிதாபமான சிறிய மகன் மரித்து இப்பொழுது பல மணி நேரங்கள் ஆகிவிட்டன. ஓ, தேவனுடைய பரிசுத்தவானே..." என்று சொன்னான்.
144. அவன், "உஷ்ஷ். தரித்து நில்" என்று கூறுவதை என்னால் கேட்க முடிகிறது. அவளிடம், "இப்பொழுது, நீ இங்கேயே தரித்து நின்று, ஜெபித்துக் கொண்டிரு” என்று கூறிவிட்டு, அவன் முன்பு நடந்து போவதைப் போன்று, அந்தக் கதவை நோக்கி மேலே நடந்து சென்று, கதவைத் திறந்து, கீழே நோக்கிப் பார்த்த போது, அந்த வரவேற்பு விரிப்பைப் பார்க்கிறான் (welcome mat). தொடர்ந்து கதவைத் திறந்து, அங்கே உள்ளே நோக்கிப் பார்த்த போது, நல்லது, அங்கே வேறொரு மருக்கொழுந்து பூக்கள் கொண்ட மலர்கொத்து இருந்தது.
145. பார்த்த போது, படுக்கையின் மேல் ஒரு படுக்கை விரிப்பின் கீழே, ஒரு சிறிய உருவம் கிடத்தப்பட்டிருந்தது. அவன் அதை இழுத்து, பார்த்து, "நல்லது, பரிதாபமான சிறுவன்" என்று கூறுவதை என்னால் காண முடிகிறது. அவனுடைய கண்கள் அமுங்கிப் (set) போயிருந்தது, அவனுடைய வாய் திறந்திருந்தது. அவன் விறைப்பாகவும் குளிர்ந்து போயும் இருந்தான். எலிசா, "கர்த்தாவே, என்ன செய்வது என்றே எனக்குத் தெரியவில்லை" என்று கூறிவிட்டு, போய், முழங்காலை முடக்கி, "இப்பொழுதும், பிதாவே, என்னால் என்ன செய்ய முடியும்-?" என்று கூறினான். வெண்கலம் போன்ற வானம், ஒரு காரியமும் இல்லை. பிறகு அவன் எழுந்து, அவன் முன்னும் பின்னுமாக நடந்தான். தொடர்ந்து அவன், போய், திடீரென்று அவன் ஏதோ ஓன்றைக் குறித்து சிந்தித்துப் பார்க்க நேர்ந்தது. இப்பொழுது, தேவன் மனிதனுக்குள் ஜவிக்கிறார். நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா-? [சபையோர், "ஆமென்” என்கின்றனர் - ஆசிரியர்.)
146. "அவர்கள் என்னுடைய கரங்களை வியாதிப்பட்டவர்கள் மேல் வைப்பார்களானால்", அது சரியாக ஒலிக்கவில்லை, அல்லவா-?'... விசுவாசிக்கிறவர்களை இந்த அடையாளங்கள் பின்தொடரும். அவர்கள் என் கரங்களை வியாதியஸ்தர் மேல் வைப்பார்களானால், அவர்கள் சொஸ்தமடைவார்கள்." அது சரியாக ஒலிக்கவில்லை, அப்படித்தானே-? "அவர்கள் தங்கள் கைகளை வியாதிப்பட்டவர்கள் மேல் வைப்பார்களானால், நான் அவர்களோடு இருப்பேன், அவர்களுக்குள் இருப்பேன். அவர்கள் வியாதியஸ்தர் மேல் தங்களுடைய கரங்களை வைத்தால், அவர்கள் சொஸ்தமடைவார்கள்."
147. தேவன் எலிசாவுக்குள் இருந்தார். அவன் கொண்டிருந்த அந்தத் தரிசனங்கள் தேவனாக இருந்தன என்பதை அவன் அறிந்திருந்தான். அவனுடைய இருதயத்திலுள்ள அந்த உள்ளூக்கம் தேவன் தான் என்று அவன் அறிந்திருந்தான். இவ்வாறாக அவன் ஒரு வெளிப்பாட்டைப் கொண்டிருந்து, போய், அந்தச் சிறு பையனுடைய கைகளை விரித்து, தன்னுடைய கரங்களை அவன் கைகளின் மேல் வைத்து, தன்னுடைய மூக்கை அவன் முக்கின் மேலும், தன்னுடைய நெற்றியை அவனுடைய நெற்றியின் மேலும் வைத்து, அப்படியே ஒரு நிமிடமாக அங்கேயே படுத்திருந்தான். பிறகு அவன் எழுந்து, "கர்த்தாவே, எனக்குத் தெரியவில்லை" என்று கூறினான். அவன் தன்னுடைய கரங்களை கீழே வைக்க, அந்தப் பிள்ளைக்கு அனல் கொண்டது. அவன், "நல்லது..." என்று கூறிவிட்டு, விலகி, மறுபடியுமாக முன்னும் பின்னும் நடந்து, "என்ன செய்வது என்று எனக்குத் தெரியவில்லை " (என்றான்.) சற்று கழிந்து, அந்த வெளிப்பாடானது, "மறுபடியுமாக அதே காரியத்தைச் செய்” என்று சொன்னது. எனவே அவன் சென்று, தன்னுடைய முகத்தை அந்தச் சிறு பையனின் முகத்தின் மேல் இருக்க படுத்தான், அவனுடைய உதடுகள் அந்தப் பையனின் உதடுகளின் மேல் இருக்க அவன் படுத்தான். அவன் அதைச் செய்த போது, அந்த மனிதனுக் கள்ளிருந்த தேவனுடைய ஆவியானவர் அந்தப் பிள்ளைக்குள் அனுப்பப்பட, பிள்ளை ஏழு தரம் தும்மி உயிர் பெற்றான். அல்லேலூயா!
148. சகோதரனே, தேவன் ஒருபோதும் மாறவேயில்லை. தேவன் அப்போது இருந்த அதே விதமாகவே, இன்றிரவும் இருக்கிறார். எலியாவின் தேவன், மோசேயின் தேவன், ஆபிரகாமின் தேவன், கர்த்தராகிய இயேசுவின் தேவன் இன்றிரவும், பரிசுத்த ஆவியின் ரூபத்தில் நம்மோடு கூட இங்கேயிருக்கிறார். ஜனங்களாகிய உங்களோடும் என்னோடும் உள்ள ஒரே காரியம் என்னவென்றால்: தேவனை செயலாற்றும்படியாக அழைக்க நம்மிடம் போதுமான விசுவாசம் இல்லை. அது சரியே. உங்கள் விசுவாசமானது உயிர்ப்பிக்கப்பட்டு, அசைந்து சென்று, அதிலிருந்து ஒவ்வொரு நிழலும் அகற்றிப் போடப்பட்டிருக்குமானால், அவர், கடந்து சென்ற நாட்களில் அற்புதங்களைச் செய்தது போன்றே அவர் செய்வார். அவர் இன்றிரவும், இங்கே உங்கள் மத்தியில் அதைச் செய்வார். நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா-?
149. நாம் ஜெபிப்போம். உங்கள் தலைகள் வணங்கி, உங்கள் இருதயங்கள் தேவனுக்கு முன்பாக திறந்திருக்கையில், சரியாக இப்பொழுதே, இங்கேயிருக்கும் உங்களில் சிலர், அந்தச் சிறு பையன் மரித்துப் போயிருந்ததைக் காட்டிலும் மோசமான விதத்தில் மரித்துப் போயிருக்கிறீர்களோ-? என்று வியப்படைகிறேன். அந்தச் சிறு பையன் சரீரபிரகாரமாக மரித்திருந்தான். இதற்கு முன்பு ஒருபோதும் இதை விசுவாசிக்காதவர்களாக, ஒருக்காலும் விசுவாசிக்காதவர்களாக, இக்காரியங்களுக்கு நீங்கள் ஆவிக்குரிய பிரகாரமாக மரித்துப் போயிருக்கிறீர்களோ என்று நான் வியப்படைகிறேன். ஆனால் இன்றிரவு, சூனேமிய ஸ்திரீயைப் போன்று, சரியாக இன்றிரவிலேயே, நீங்கள் செய்ய வேண்டும் என்பதைப் போல நீங்கள் உணருகிற வினோதமான ஏதோ காரியம் உள்ளது.
150. "இந்த வேதாகமம் சரியென்றும், இயேசு கிறிஸ்துவே தேவனுடைய குமாரன் என்றும், என்னுடைய இருதயத்திலுள்ள ஏதோவொன்று என்னிடம் கூறுகிறது. நான் அழிந்து போகக் கூடிய ஒரு மனிதனாகவோ அல்லது பெண்ணாகவோ, பையனாகவோ அல்லது சிறு பெண் பிள்ளையாகவோ இருக்கிறேன் என்றும் நான் அவருடைய பிரசன்னத்தில் நின்றாக வேண்டும் என்றும் உணருகிறேன். அவர் தமது கரங்களை என் கரங்களின் மேல் வைத்து, ஈட்டி பாய்ந்த அவருடைய இருதயத்தை என்னுடைய பாவமான இருதயத்தின் மேல் அழுத்தி, சகல பாவங்களையும் எடுத்துப் போடும்படியாகவும், என்னை மறுபடியும் ஜீவனுக்குக் கொண்டு வரும்படியாகவும் அவரிடம் விண்ணப்பம் பண்ணுகையில், நான் அவரை என்னுடைய சொந்த இரட்சகராக ஏற்றுக் கொண்டு, நித்திய ஜீவனைப் பெற்றுக் கொள்ளும்படி, என்னுடைய தீர்மானத்தை எடுக்கும்படியான எனது நேரம் சரியாக இப்பொழுதே."
151. உங்கள் கரத்தை மேலே உயர்த்துவீர்களா-? அதைச் செய்வதன் மூலமாக, "சகோதரன் பிரன்ஹாமே, நீங்கள் அழைக்கும் போது, என்னை ஜெபத்தில் நினைவு கூருங்கள்" என்று கூறுங்கள். அங்கே பின்னால், தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. உங்களையும், உங்களையும், உங்களையும் மற்றும் உங்களையும் தேவன் ஆசீர்வதிப்பாராக. தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. என்னே-! கரங்கள் அப்படியே எல்லாவிடங்களிலும் உயர்த்தப்பட்டுக் கொண்டிருக்கின்றன. "இயேசு என்னைப் பற்றிப் பிடித்து, அவருடைய மார்போடு என்னை அணைத்துக் கொள்ள இப்பொழுதே விரும்புகிறேன்." 
152. யோசேப்பினூடாகவும், ஆபிரகாமினூடாகவும், ஈசாக்கினூடாகவும், யாக்கோபு, யோசேப்பு, எலியா, மோசேயினூடாகவும், சகல தீர்க்கதரிசிகளினூடாகவும் கிரியை செய்த தேவனுடைய ஆவி எல்லாமே, அதன் பிறகு, இறுதியாக, முழு தேவத்துவமே சரீரபிரகாரமாக கர்த்தராகிய இயேசுவிடத்தில் முற்று பெற்றது. அவர் இன்றிரவு அதை வெளியே நீட்டுகிறார். அது தான் அவருடைய ஆவியானது உங்கள் இருதயக் கதவில் நிற்பதாகும். (சகோதரன் பிரன்ஹாம் தட்டுகிறார் - ஆசிரியர்) "மேலும் கர்த்தாவே, நீர் என் வழி பக்கமாகக் கடந்து செல்லும் போது, நான் என்னுடைய சிறு கதவில் ஒரு வரவேற்பு விரிப்பை (welcome mat) விரித்துப்போட விரும்புகிறேன். பள்ளத்தாக்கின் லீலி புஷ்பத்திலிருந்து கிடைக்கும் நறுமணத் தைலத்தைக் கொண்டு, என்னுடைய நினைவுகளை பக்திவிருத்தியடையச் செய்ய விரும்புகிறேன். நீர் உள்ளே வந்து, என்னோடு கூட தங்கியிருக்க விரும்புகிறேன். ஏதோவொரு நாளில், சரீரப் பிரகாரமாகப் போய்விடப் போகிறேன் என்பதினாலும், நீரும் உமது அரவணைப்பும் மாத்திரமே என்னை மறுபடியும் ஜீவனுக்குத் திரும்ப அழைக்க முடியும் என்பதினாலும், கர்த்தாவே, என்னோடு கூட தங்கியிரும். நான் இப்பொழுதே உம்மை உமது காரியத் திட்டத்திலே ஏற்றுக் கொள்கிறேன், மேலும், தேவனுடைய கிருபையினாலே, நான் உம்மை நேசித்து, உம்மோடு கூட தங்கியிருந்து, எனக்கு ஜீவனுள்ள நாள் மட்டும் உம்மைச் சேவிப்பேன்."
153. ஏறக்குறைய இரண்டு டஜன் பேரிடத்தில், சற்று நேரத்திற்கு முன்பு, தங்கள் கரங்களை மேலே உயர்த்தாத யாராவது அங்கே இருக்கிறீர்களா-? நீங்கள் உங்கள் கரங்களை உயர்த்தி, "சகோதரன் பிரன்ஹாம் அவர்களே, நான் அதைச் செய்ய வேண்டும் போன்று, என்னுடைய கரங்களை கிறிஸ்துவை நோக்கி உயர்த்தி, கிறிஸ்துவே, இதன் மூலமாக, நான் உம்மைச் சேவிப்பேன் என்று தெரிவிக்கிறேன்' என்று கூற வேண்டும் போல் சரியாக இப்பொழுதே உணருகிறேன்" என்று கூறுவீர்களா-? மாடி முகப்புகள் (balconies) எங்காவது, சுற்றிலும், அல்லது எந்த இடத்திலாவது இருக்கிறீர்களா-? அல்லது சற்று முன்பு, மேலே உயர்த்தப்படாத எந்தக் கரமாவது இருக்கிறதா-? சீமாட்டியே, தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. சீமாட்டியே, தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. அங்கேயிருக்கும் சீமாட்டியே, தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. அங்கே பின்னாலிருக்கும் சீமாட்டியே, தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. யாராவது.... எனது சகோதரனே, தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. அங்கே பின்னால் இருக்கும் வாலிபனே, தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக; நான் உன்னுடைய கரத்தைக் காண்கிறேன், நிச்சயமாக தேவனும் காண்கிறார். மேலே பால்கனியில், தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக.
154. வேறு யாராவது ஒருவர், “இதன் மூலமாக, என்னுடைய கரமும் உயர்த்தப்பட்டிருக்கிறது" என்று கூறுவீர்களா. வாலிபனே, தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக. நான் உன்னைக் காண்கிறேன், நிச்சயமாக தேவனும் சகலத்தையும் காண்கிற கண்ணினால் காண்கிறார். அங்கே உட்கார்ந்து கொண்டிருக்கும் இந்த கறுப்பின சகோதரனை தேவன் ஆசீர்வதிப்பாராக. எனது நண்பரே, தேவன் உம்மை ஆசீர்வதிப்பாராக. அங்கே பின்னால், அங்கே பின்னால் உட்கார்ந்து கொண்டிருக்கிற கறுப்பின சகோதரியாகிய உங்களையும் கூட தேவன் ஆசீர்வதிப்பாராக. மேலும் நான் இயேசுவை ஏற்றுக்கொள்ள விரும்புகிறேன் என்று தம்முடைய கரங்களை மேலே உயர்த்தியிருக்கிற வயதில் மூத்த, தலை நரைத்த கறுப்பின மனிதரே, உம்மையும் தேவன் ஆசீர்வதிப்பாராக. இரு கரங்களையும் மேலே உயர்த்தி, இருதயம் திறந்திருக்க, இங்கேயிருக்கும் இந்தச் சீமாட்டியை தேவன் ஆசீர்வதிப்பாராக. தன்னுடைய கரத்தை மேலே உயர்த்தியபடி, இங்கே உட்கார்ந்து கொண்டிருக்கும் இந்தச் சீமாட்டியை தேவன் ஆசீர்வதிப்பாராக.
155. (நீங்கள் இப்பொழுது ஜெபித்துக் கொண்டே, உங்கள் தலை வணங்கி இருக்கையில்), சமீபத்தில், அந்தக் காலையில் என்னுடைய அறை குளிர்ச்சியாயிருந்தது. பற்றவைக்க எனக்கு நெருப்பு கிடைக்கக்கூடாதிருந்தது. சகோதரி காடில் அவர்கள், “நான் இயேசுவைக் காண விரும்புகிறேன், நீங்கள் விரும்பவில்லையா-? மிகவும் நம்பிக்கைக்குரியவரும் உண்மை உள்ளவருமாகிய எனது இரட்சகர். அப்பால் தூரத்திலுள்ள கரையில் இருக்கும் அந்தத் தேசத்தை நான் அடையும் போது, நான் இயேசுவைக் காண விரும்புகிறேன், நீங்கள் விரும்பவில்லையா-?" என்று பாடுவது காற்றில் வந்து கொண்டிருந்தது.
156. எங்கள் பரலோகப் பிதாவே, இன்றிரவு இங்கேயிருக்கும் ஒவ்வொரு இருதயத்தின் வாஞ்சையும் அது தான். ஓ, இவர்களை கண்ணோக்கியருளும், கர்த்தாவே. ஒருக்கால் 15, 25 பேர் தங்கள் கரத்தை உயர்த்தியிருக்கலாம். சரியாக இப்பொழுதே இவர்கள் உம்மை ஏற்றுக் கொள்ள விரும்புகிறார்கள்.
157. பின்னால் ஆதி காலத்திலேயே துவங்கி, மனிதர்களில் ஜீவித்து, உமது தீர்க்கதரிசிகளின் இருதயங்களில் ஜீவித்து வந்த, ஓ மகத்துவமுள்ள ஆவியானவரே. அநேக நீண்ட காலங்களின் ஊடாகவே, நீர் வந்து, உம்மைத்தானே மெய்ப்பித்துக் காட்டி சரியென நிரூபித்து வந்து இருக்கிறீர். தாவீது அந்த மலையில் ஏறிக் கொண்டே, எருசலேமைத் திரும்பிப் பார்ப்பதை எங்களால் எப்படியாகக் காண முடிகிறது, அவன் தனக்கு சொந்தமானவர்களாலேயே புறக்கணிக்கப்பட்டான். அவன் மேலே அந்த மலையில் ஏறுகையில், அழுதான். அதற்குப் பிற்பாடு, ஒரு சில நூறு வருடங்கள் கழித்து, தாவீதின் குமாரன் புறக்கணிக்கப்பட்டு, அந்த அதே மலையின் மேல் அமர்ந்து, “எருசலேமே, எருசலேமே, கோழி தன் குஞ்சுகளை பக்கத்திலேயே வைத்துக் கொள்ளுமாப் (hovered) போல், நான் எப்படியாக உன்னை அருகிலேயே வைத்திருக்க அநேகந்தரம் மனதாயிருந்தேன், ஆனால் உனக்கோ மனதில்லாமற் போயிற்று. உன்னைச் சந்திக்கும் நாளை (day of visitation) நீ மாத்திரம் அறிந்திருப்பாயானால்" என்று கூறிக் கொண்டிருந்ததை நாங்கள் காண்கிறோம்.
158. மேலும் அன்புள்ள பிதாவே, இன்றிரவு பரிசுத்த ஆவியானவர் என்னுடைய இருதயத்தில்: "ஓ, அமெரிக்காவே, அமெரிக்காவே, பரிசுத்த ஆவியானவர் ஒரு எழுப்புதலின் ஒரு உண்மையான ஊற்றப்படுதலைத் தரும்படியாக அநேகந்தரம் எவ்வளவாய் விருப்பமுள்ளவராயிருந்தார். அவர் எவ்வளவாய் உன்னைக் கூட்டிச் சேர்த்து, உன்னை பாதுகாப்பிலே வைத்துக்கொள்ள விரும்பினார். ஆனால் உன்னைச் சந்திக்கும் நாளை (day of your visitation) நீ அறியாமல் போனாய் என்று நம்புகிறேன். நீ தீர்க்கதரிசிகளை வெறுத்தொதுக்கினாய் (scorned - தகாததெனத் தள்ளினாய், ஏளனஞ்செய்தாய், அவமதித்தாய், இகழ்ந்தாய், தூற்றினாய், வெறுத்தாய், நிந்தித்தாய், அலட்சியம் செய்தாய், புறக்கணித்தாய், பரிகாசம் செய்தாய் - தமிழாக்கியோன்). நீ அவர்களை மதவெறிப்பிடித்தவர்கள் என்று அழைத்தாய். நீ அவர்களைச் சிறைச்சாலையில் போட்டாய். நீ... ஓ, உன்னை ஏற்றுக்கொள்ள அவர் அநேகந்தரம் எவ்வளவாய் விரும்பினார்."
159. கர்த்தாவே, இன்றிரவிலோ, தனிப்பட்ட நபரிடம் இடைப்படுகிறீர், ஒரு தேசத்தோடு நீர் எப்போதாவது தான் இடைப்படுகிறீர், ஆனால் தனிப்பட்ட நபர்களோடு நீர் இடைபடுகிறீர். இன்றிரவில், கரங்கள் மேலே உயர்த்தப்பட்டு, கர்த்தாவே, உம்மைத் தழுவிக்கொள்ள விரும்புகின்றன. நீர் அந்த ஜனங்களை நேசிக்கிறீர் என்பதை பரிசுத்த ஆவியானவர் அவர்களுக்குக் காண்பிக்கும்படியாக நான் ஜெபிக்கிறேன். சரியாக இப்பொழுதே இவர்களை உமது மார்புக்குள் அணைத்துக் கொள்ளும். இந்த ஆராதனை தீர்க்கதரிசியாகிய எலிசா முடியும் போது, பிதாவே, அங்கே சிகாகோவிலேயே மிகவும் சந்தோஷமுடைய ஜனங்களாக இவர்கள் இங்கிருந்து வெளியே போக வேண்டுமென்று ஜெபிக்கிறேன். இதை அருளும், பிதாவே.
160. இப்பொழுது நான் உமது வார்த்தையை உமக்கு மேற்கோள் காட்டுகிறேன். இது உம்முடைய வார்த்தையாக, ஜீவனுள்ள வார்த்தையாக இருக்கிறது. வேதாகமத்தின்படியாக, நீர், "என் வசனங்களைக் கேட்டு, என்னை அனுப்பின வரை விசுவாசிக்கிறவனுக்கு நித்திய ஜீவனுண்டு, அவன் நியாயத்தீர்ப்புக்கு வராமல், மரணத்தை விட்டு நீங்கி ஜீவனுக்குட்பட்டு இருக்கிறான்" என்று நீர் சொல்லியிருக்கிறீர். இந்த ஜனங்கள், தாங்கள் உம்மை விசுவாசிக்கிறார்கள் என்று உம்முடைய பிரசன்னத்தில் தங்கள் கரங்களை உயர்த்தி இருக்கிறார்கள். அப்படியானால், பிதாவே, "இவர்கள் மரணத்தை விட்டு நீங்கி, ஜீவனுக்கு  உட்பட்டிருக்கிறார்கள் என்றும், இவர்கள் இங்கே இன்றிரவில், ஜீவனுக்கு உயிர்த்து எழுந்திது இருக்கிறார்கள்" என்றும் கூறும்படியான வேதப்பூர்வமான உரிமையை உடையவனாய் இருக்கிறேன். இதற்காக நான் உமக்கு நன்றி கூறுகிறேன்.
161. போர் மேகங்கள் அமைதலாகி (settled), ஆயுதங்கள் குவியலாக வைக்கப்பட்டு, சாமாதானமானது ஒவ்வொரு இருதயத்தையும் ஆளுகை செய்து, வரப்போகிற அந்த உலகத்தில், அங்கே கொஞ்ச தூரத்திலுள்ள தேவனுடைய இராஜ்யத்தில், நாங்கள் ஜீவ விருட்சத்தினண்டையில் உட்கார்ந்து, சந்தோஷமாயிருக்கும் படியாக, நீர் எங்களை இங்கே அவ்வளவான ஒரு ஜீவியங்களை ஜீவிக்கச் செய்ய வேண்டுமென்று நான் ஜெபிக்கிறேன், தேவனே, இந்த இரவிலே இவர்கள் உம்மை ஏற்றுக் கொண்டு இருக்கிறார்களே, கர்த்தாவே. அந்த நேரம் வரையில், நீர் இவர்களைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டுமென்று, கிறிஸ்துவின் நாமத்தில், நாங்கள் இதை வேண்டிக் கொள்கிறோம். ஆமென்.
நான்... நீங்கள் அப்படியே... (இருப்பது) போன்று, எத்தனை பேர் மிகவும் நலமாக உணருகிறீர்கள். வார்த்தையானது நம்மை தேய்த்துக் கழுவி சுத்தம் செய்கிறது, இல்லையா-? அது நம்மை வித்தியாசமாக உணரச் செய்கிறது.
162. இப்பொழுது, நான் குறித்த நேரத்திற்கு முன்பே இருந்ததாகச் சொன்னேன்; இதோ பிந்திவிட்டேன். நான் வழக்கமாக அவ்விதமாகவே இருக்கிறேன். ஆனால் இன்றிரவில்... நான் வியப்படைகிறேன். இப்பொழுது, எங்கே.... என்று நாம் பார்க்கலாம். எந்த ஜெப அட்டைகள்-? V-ஆ-?. எதில் - எதிலிருந்து-? அவருக்கு மறந்துவிட்டது. சரி. நான் V, ஐம்பதிலிருந்து நூறு வரை கூறுகிறேன். சரி. ஜெப அட்டை V, எண் ஒன்று யாரிடம் உள்ளது-? உங்கள் கரத்தை உயர்த்துங்கள். உங்கள் ஜெப அட்டையின் மேல் பாருங்கள், அது V- ஆக உள்ளது. சகோதரன் உட் அவர்களையும், உதவிக்காரர்களையும் (ushers), மற்றும் அவர்களையும், அவர்கள் சற்று நேரத்தில், இங்கு கீழே தங்கள் இடத்திற்குப் போவார்களா என்று நான் கேட்டுக் கொள்ள விரும்புகிறேன். நாம் ஜனங்களை ஒரு பெரிய வரிசையில் கொண்டுவரப் போகிறோம். சரி. V, ஐம்பது. V, ஐம்பது யாரிடம் உள்ளது-? உங்கள் கரத்தை உயர்த்துங்கள். V, ஐம்பத்து ஒன்று, ஐம்பத்து இரண்டு, சரி, ஐம்பத்து மூன்று. அப்படியே இங்கே வரிசையில் நிற்கத் தொடங்குங்கள். ஐம்பத்து நான்கு, ஐம்பத்து ஐந்து, ஐம்பத்து ஆறு, ஐம்பத்து ஏழு, ஐம்பத்து எட்டு, ஐம்பத்து ஒன்பது, அறுபது. இப்பொழுது, நீங்கள் நாற்காலிகளிலும், அதைப்போன்ற மற்றவைகளிலும் இருந்து, உங்கள் எண் அழைக்கப்படும் போது, உங்களால் அசைய முடியாவிட்டால், நீங்கள்... என்று நாங்கள் காண்போம். யாரோ ஒருவர் உங்களைக் கீழே கொண்டு வருகிறார், நானும் கீழே இறங்கி வந்து, அங்கே உங்களோடு கூட ஜெபிப்பேன். சரி. இப்பொழுது, v. அறுபது தான் கடைசி என்று நம்புகிறேன்.
163. இப்பொழுது, எல்லாரும், இன்றிரவு, எத்தனை பேர் உங்கள் முழு இருதயத்தோடும், இப்பொழுது, அப்படியே உங்கள் முழு இருதயத்தோடும் ஜெபித்துக் கொண்டிருக்கப் போகிறீர்கள்-? நான் வியாதியஸ்தர்களுக்காக ஜெபிக்கும்படி அவர் விரும்புகிற வழி இது தானா என்று பார்க்கும்படியாக, இப்பொழுது, நான் தேவனுக்கு முன்பாக ஒரு fleece-ஐ பெற்றிருக்கிறேன்.
164. சரி. V ஒன்று முதல் V, அல்லது, V ஐம்பது முதல் அறுபது வரை. சரி. அறுபத்து ஒன்று, அறுபத்து இரண்டு, அறுபத்து மூன்று, அறுபத்து நான்கு, அறுபத்து ஐந்து, அறுபத்து ஆறு, அறுபத்து ஏழு, அறுபத்து எட்டு, அறுபத்து ஒன்பது, எழுபது. அது நல்லது. சரி. அவர்கள் வரிசையில் வந்த உடனே....
165. இப்பொழுது, எல்லா.... எல்லாரும் உங்கள் சிந்தையை தேவன் மேல் வைத்திருங்கள். ஏதோவொன்று சம்பவிக்க வேண்டுமென்று எத்தனை பேர் எதிர்பார்க்கிறீர்கள்-? உங்கள் கரங்களைப் பார்ப்போம். நானும் எதிர்பார்க்கிறேன். இப்பொழுது, வார்த்தையானது ஒவ்வொரு இருதயத்திலும் வைக்கப்பட்டு விட்டது, அதற்கு அவசியமான ஒரே காரியம் என்னவென்றால், கொஞ்சம் தண்ணீர் ஊற்றப்படுதல் தான். இப்பொழுது, அது என்னவாக இருந்தது-?
166. இப்பொழுது, என்னைக் குறித்து நன்மையான ஏதாகிலும் ஒன்றுமே கிடையாது. உங்களைக் குறித்தும் அங்கே நன்மையான எதுவும் ஒன்றுமே இல்லை, ஆனால் இது என்னவென்றால், பரிசுத்த ஆவியானவர் இங்கே இருக்கிறார். நாங்கள் இதைச் செய்யும்படி, எங்களை நியமித்த ஒருவர் அவர் தான். அங்கே எலிசாவைக் குறித்தும், அப்படியே எலிசாவாகிய அவனையே குறித்தும் நன்மையான ஒன்றுமே இல்லாதிருந்தது. உங்களுக்கு அது தெரியும், இல்லையா-? அவன்.... இல்லாதிருந்தான். அவன் வெறுமனே ஒரு மனிதனாகத்தான் இருந்தான். அவனுக்கும் தொல்லைகளும், நல்ல சமயங்களும், மோசமான நேரங்களும், கோபங்களும், மற்ற எல்லாமே இருக்கத்தான் செய்தது; ஆனால் அது தேவன் அந்த மனிதனில் இருந்ததாகும். அது சரிதானா-? இயேசு, "உங்களால் என்னை விசுவாசிக்க முடியாவிட்டால், நான் செய்கிற கிரியைகளை விசுவாசியுங்கள்" என்றார். பாருங்கள்-? கிரியையை விசுவாசியுங்கள்.
167. சரி. எழுபது வரை என்று நம்புகிறேன். சரி. எழுபத்து ஒன்று, எழுபத்து இரண்டு, எழுபத்து மூன்று, எழுபத்து நான்கு, எழுபத்து ஐந்து, எழுபத்து ஆறு, எழுபத்து ஏழு, எழுபத்து எட்டு, எழுபத்து ஒன்பது, எண்பது. V. எழுபது முதல் எண்பது வரையில், அவர்கள் வரிசையில் நிற்கட்டும். இப்பொழுது, நம்மால் கூடுமானால், ஒரு சில நிமிடங்களில், கட்டிடத்தைச் சுற்றிலும் ஒரு வளையத்தை எடுத்துக்கொண்டு, யாவரையும் உள்ளே வரும்படிச் செய்யப் போகிறோம். ஆனால் நீங்கள் அப்படியே உங்கள் எண்களின்படியே வரிசையில் நிற்கும்படி விரும்புகிறோம், தேவன் நமக்கு மகத்தான ஏதோவொன்றைச் செய்ய நாம் எதிர்பார்த்துக் கொண்டி ருக்கிறோம்.
168. இப்பொழுது என்னோடு கூட ஜெபம் பண்ணும்படியாக, ஒவ்வொரு - கிறிஸ்துவின் சரீரத்தின் ஒவ்வொரு அங்கத்தினனையும் என்னால் பெற்றுக் கொள்ளக் கூடுமானால். இப்பொழுது, இது அப்படியே நானல்ல என்றும், இது நீங்கள் தான் என்பதும் நினைவிருக்கட்டும். மேலும் இப்பொழுது, இப்பொழுது நீங்கள் - நீங்கள் அழைக்கப்படும் வரையில், ஒவ்வொரு நபரும் அப்படியே தொடர்ந்து உங்கள் இருக்கையிலேயே இருங்கள். அதன் பிறகு அவர்கள் வரிசையில் வந்த உடனே, நாங்கள் வியாதியஸ்தருக்காக ஜெபிக்கத் தொடங்குவோம். தேவன் காட்சியில் அசைவாடப் போகிறார் என்று நான் அப்படியே உணருகிறேன். நீங்கள் அவ்வாறு உணரவில்லையா-?
169. சரி. சகோதரர்கள் அவர்களை அங்கே உள்ளே அமரவைத்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள்... இருவர்... சகோதரன் போஸ் அவர்களே, நீர் அங்கே இறங்கிச் சென்று, அவர்களுக்கு உதவி செய்வீரா என்று வியப்படைகிறேன். சகோதரன் ராஸ்முஸ்ஸன் அல்லது உங்களில் சிலர், அங்கே அவர்களுக்கு உதவி செய்யுங்கள், அப்பொழுது நம்மால் உடனடியாக வரிசையைத் துவங்கி, ... வரச் செய்ய முடியும்....
170. இப்பொழுது, கர்த்தர் இங்கே மேடையின் மேல் ஏதோவொன்றை நடப்பிக்கும் போது, நீங்கள்... நீங்கள் ஒவ்வொருவரும் கவனிக்க விரும்புகிறேன், அவர் அங்கே வெளியிலும் அதே காரியத்தைச் செய்வார். பாருங்கள். அவர் அதே காரியத்தைச் செய்வார். இப்பொழுது, ஒரு தரிசனத்தை தேவனிடம் கேட்காமலேயே நான் வியாதியஸ்தருக்காக ஜெபிக்க முயற்சிக்கப் போகிறேன். கொஞ்ச காலமாக, அதைச் செய்ய என்னால் கூடாதிருந்தது. நான் அதை முயற்சித்துப் பார்த்தது கிடையாது. ஆனால், நான் இன்றிரவு, அதை முயற்சிக்கிறேன். இந்தப் பிற்பகலில் நான் பிரசங்கம் பண்ணி, இன்றிரவில் இரவு ஆகாரத்தைப் புசிக்கவும் மற்ற காரியங்களைச் செய்யவும் காரணம் என்னவென்றால், நான் வெறுமனே ஜெபிக்கவும், வியாதியஸ்தர்கள் மேல் கரங்களை வைக்கவும், கர்த்தரைக் குறித்த ஒரு - ஒரு நிருபணத்தைக் கொடுக்கவும் வந்திருக்கிறேன். இப்பொழுது, நாம் காத்துக் கொண்டிருக்கையில், இந்தக் கைக்குட்டைகளுக்காக ஜெபித்து, இவைகளை பத்திரமான ஒரு இடத்தில் வைத்து விடுவோம். இப்பொழுது உங்களில் அநேகர் கைக்குட்டைகளை அனுப்புகிறீர்கள், இங்கே சிறிய பொட்டலங்களும் உள்ளன. நாம் ஜெபிக்கையில், நாமெல்லாரும் நமது தலைகளைத் தாழ்த்துவோம்.
171. எங்கள் அன்புள்ள பரலோகப் பிதாவே, வியாதிப்பட்டவர்களையும் தேவை உள்ளவர்களையும் பிரதிநிதித்துவப்படுத்துகிற இந்தக் கைக்குட்டைகளையும், இந்தப் பெட்டியிலுள்ள இச்சிறு பொட்டலங்களையும் நாங்கள் இன்றிரவு, பிரதிநிதித்துவ வழியில் உம்மிடம் கொண்டு வருகிறோம். இந்தக் கடிதங்களை ஜனங்கள் எழுதின போது, நீர் அவர்களைக் கண்டீர். நீர் இந்தக் கைக்குட்டைகளையும் கண்டீர். உமக்கு எல்லாமே தெரியும். நீர் முடிவில்லாதவராய் இருக்கிறீர். அவ்விதமான ஒரு தேவனை நாங்கள் சேவிக்கிறோம் என்பதற்காக நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். நீர் மாத்திரமே தேவனாயிருக்கிறீர். அநேக ஜனங்கள் விக்கிரகத்தை வைத்திருக்கிறார்கள், ஆனால் நீர் மாத்திரமே இயேசு கிறிஸ்துவிலே உண்மையான, ஜீவனுள்ள தேவனாயிருக்கிறீர்.
172. நாங்கள் இவைகளின் மேல் கைகளை வைத்து, வேண்டிக் கொள்கையில், இந்தக் கைக் குட்டைகளையும் பார்சல்களையும் நீர் ஆசீர்வதிக்க வேண்டுமென்று நான் ஜெபிக்கிறேன், பிதாவே. அப்படியே எலிசாவைப் போன்று, "அவர்கள் பவுலின் சரீரத்திலிருந்து எடுத்தார்கள்" என்று அவர்கள் கூறினார்கள். சபையை உபத்திரவப்படுத்தின அதிக கோபக்காரனாகிய ஒரு மனிதனாயிருந்த பவுலின் சரீரத்திலிருந்து, நீர் அம்மனிதனை மறுபக்கம் திருப்பி, அவனை மேலே பாதையில் திரும்பி வரும்படி செய்யத் துவங்கினீர். ஜனங்கள் வந்து, கைக் குட்டைகளை அவனிடம் கொண்டு வந்து, அவைகளை அவனுடைய சரீரத்தின் மேல் போடும் அளவுக்கு நீர் அவனைப் பரிசுத்தாவியால் நிரப்பினீர். அவன் தேவனுடைய ஒரு பரிசுத்தவான் என்று அவர்கள் அறிந்திருந்தார்கள், அது அந்த மனிதனல்ல, ஆனால் அங்கே வாசம் பண்ணிக் கொண்டிருந்த பரிசுத்த ஆவியாக இருந்தது. அது பரிசுத்த ஆவியானவர் வாசம் பண்ணின ஒரு கூடாரமாயிருந்தது. அவன் அதை வியாதியஸ்தரிடத்திற்கும் அல்லல்படுகிறவர்களிடத்திற்கும் அனுப்பின போது, அசுத்த ஆவிகள் ஜனங்களை விட்டுப் வெளியேறி, அவர்கள் சுகம் அடைந்தார்கள்.
173. மேலும் இப்பொழுது, கர்த்தாவே, பரிசுத்த பவுல் உம்மோடு கூட மகிமையில் இருந்து நீண்ட காலமாகி விட்டது, ஆனால் எலியாவிடமிருந்த ஆவி எலிசாவிடத்திற்கும், கீழே தொடர்ந்து யோவானிடத்திற்கும், தொடர்ந்து வருவது போன்று பரிசுத்த ஆவியானவர் இன்னுமாக சரியாக தொடர்ந்து போய்க் கொண்டே இருக்கிறார். உமது ஆவி நித்தியமாயுள்ளது, மேலும் உமது ஆவி இன்றிரவு இங்கேயும் இருக்கிறது. இவைகள் மேல் கரங்களை வைப்பதன் மூலமாக, இவைகள் யார் மேல் வைக்கப்படுகிறதோ, அந்த வியாதியஸ்தரை சுகமாக்கும்படியாக, இதைச் செய்யும்படி நாங்கள் தயவாக கேட்டுக் கொள்கையில், நாங்கள் இயேசுவின் நாமத்தில் வேண்டிக்கொள்கிறோம். ஆமென்.
174. சரி. கடைசியாக எங்கிருந்தது-? ஆறு... எழுபதா-? எழுபத்தொன்பதா-? எண்பது, எண்பத்தொன்று, எண்பத்திரண்டு, எண்பத்து மூன்று, எண்பத்து நான்கு, எண்பத்து ஐந்து, எண்பத்து ஆறு, எண்பத்து ஏழு, எண்பத்து எட்டு, எண்பத்து ஒன்பது, தொண்ணூறு, சரியாக - சரியாக தொடர்ந்து வரிசையைச் சுற்றிலும் வாருங்கள்.) அவர்கள் வரத்தொடங்கலாம். எலியாவின் தேவன் ஜீவனோடிருக்கிறார் என்று நீங்கள் இன்றிரவில் விசுவாசிக்கப் போகிறீர்களா-? சரி.
175. இப்பொழுது, அப்படியே பயபக்தியோடிருங்கள். பொறுமையோடிருங்கள். இவர்கள் மரித்துக்கொண்டிருக்கும் நிலையிலுள்ள நோயாளிகளாயிருக்கிறார்கள். தேவன் இவர்களைத் தொடாவிட்டால், இவர்கள் நிச்சயமாகவே இப்பூமியை விட்டு போய்விடுவார்கள் (God doesn't touch them, they're certainly gone from this earth); இவர்களில் அநேகர் இருதயப் பிரச்சனையையும், புற்றுநோயையும் உடையவர்களாய் வாழ்க்கையின் கடைசி கட்டத்தில் இருக்கிறார்கள். இப்பொழுது, சரி, ஐயா. இப்பொழுது, தொண்ணூற்றொன்று, தொண்ணூற்று இரண்டு, தொண்ணூற்று மூன்று, தொண்ணூற்று நான்கு , தொண்ணூற்று ஐந்து. ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு, மற்றொன்று எங்கேயுள்ளது-? தொண்ணூற்று ஐந்து, ஜெப அட்டை தொண்ணூற்று ஐந்து யாரிடம் உள்ளது-? தொண்ணூற்று ஆறு, தொண்ணூற்று ஏழு, தொண்ணூற்று எட்டு, தொண்ணூற்று ஒன்பது, நூறு. அவர்கள் வரட்டும்.
176. இப்பொழுது, அவர்கள் வரிசையில் நிற்கத் தொடங்குகையில்... இவர்கள் அவர்களை வரிசையில் நிற்க வைத்துக் கொண்டிருக்கையில், இந்தச் சிறு சீமாட்டியிடம் நாம் பேசுவோம். சரி. இப்பொழுது யாவரும் ஜெபத்தில் இருங்கள். இப்பொழுது, யாவரும், நீங்கள் என்னோடும் தேவனோடும் சற்று நேரம் தரித்திருப்பீர்களா-? சுவிசேஷத்தின் நிமித்தமாக நீங்கள் அதைச் செய்வீர்களா-?
177. இப்பொழுது, இது எனக்குப் புதிதான ஏதோவொன்றாயுள்ளது. நீண்ட காலமாக, நான் இம்மாதிரியான ஒரு ஜெப வரிசையைக் கொண்டிருந்ததில்லை. இது எனக்கு ஏறக்குறைய பதினைந்து நிமிடங்களைத் தவிர வேறு நேரத்தை எடுத்துக் கொள்ளாது, தேவனுக்குச் சித்தமானால், நாம் வரிசையினூடாக இருப்போம். பாருங்கள். நாம் இவர்கள் ஒவ்வொருவருக்காகவும் ஜெபித்து, ஒருக்கால் அந்த நேரத்தின் போது, வேறொரு வரிசையைத் துவங்கலாம். பாருங்கள்-? மேலும் நாம் தொடர்ந்து செய்யலாம். இப்பொழுது, அதேவிதமாக ஜெபிக்கிற சகோதரன் கோ, ma-... அல்லது, சகோதரன் ஹிக்ஸ் அவர்களும் அவர்களில் அநேகரும் வந்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் நான் இவ்விதமாக வியாதியஸ்தருக்காக ஜெபித்துக் கொண்டிருப்பதில், தேவன் என்னை ஆசீர்வதிப்பாரா என்று பார்க்க நான் விரும்புகிறேன். இன்னும் கூடுதலாக, அநேக, அநேகருக்காக என்னால் ஜெபிக்க முடியும். என்னால் ஜனங்களை அப்படியே விசுவாசிக்க வைக்கக் கூடுமானால், அவ்வளவு தான்... என்னவென்று உங்களுக்குத் தெரியுமா-?
செய்தியில் தூதனானவர் என்ன கூறினார் என்று எத்தனை பேருக்குத் தெரியும்-? "உன்னால் ஜனங்களை விசுவாசிக்கும்படி செய்து, நீ ஜெபிக்கும் போது, உத்தமமாக இருக்கக் கூடுமானால்." அது சரியே.
178. அதற்கு நான், "அவர்கள் என்னை நம்ப மாட்டார்கள், ஏனென்றால் நான்.... அவர்கள்..." என்றேன். நான் அப்போது பாப்டிஸ்டுகளைக் குறித்தும், மற்றவர்களைக் குறித்தும், நான் இருந்த சபையைக் குறித்தும் பேசிக் கொண்டிருந்தேன். அவர் சொன்னார்... நான், "நான் படிப்பறிவில்லாதவன். என்னால் அவர்களிடம் சரியாகப் பேச முடியாது" என்றேன்.
179. அவர், "மோசேக்கு இரண்டு அடையாளங்கள் கொடுக்கப்பட்டது போல, உனக்கும் கொடுக்கப்படும்" என்று கூறினார். மேலும் என்ன செய்ய வேண்டுமென்று அவர் என்னிடம் கூறினார். தொடர்ந்து அவர், அதன் பிறகு நீ அவர்களுடைய இருதயங்களின் உண்மையான இரகசியங்களை அறிந்து கொள்வாய். உன்னால் (அதை) அவர்களிடம் சொல்ல முடியும்" என்றார். மேலும் ஆவியானவர் எப்படிப்பட்டவர் என்பதை என்னிடம் விளக்கிக் கூறினார்.
மேலும் நான், “நல்லது, அதற்காகத் தான் நான் இங்கே ஜெபித்துக் கொண்டிருக்கிறேன்" என்றேன்.
180. அவர், "அப்போது அந்நாட்களில் இருந்தது போலவே, இப்பொழுதும் இருக்கிறது" என்று கூறினார். மதகுருமார்கள்கூட புரிந்துகொள்ளவில்லையே. புரிகிறதா-? அங்கே தான் அது இருந்தது. தேவனுடைய ஆவி அசைவாடிக் கொண்டிருத்தல், அது என்னவென்று எனக்குத் தெரியாதிருந்தது, அது பிசாசு என்று பிரசங்கிமார்கள் என்னிடம் சொல்லிக் கொண்டு இருந்தார்கள். அது - ஜனங்கள் எவ்வளவு குருடாக இருக்க முடியும்.
மேலும் எனவே, நான்.... அவர், "அதன் மூலமாக” என்றார். 
181. நல்லது, நான் அப்படியே ஜனங்கள் முன்பாக இந்த அடையாளங்களை செய்யத் தொடங்கினேன், அவர்கள் வழக்கமாகவே அதைப் பெற்றுக் கொண்டார்கள், மற்ற மனிதர்களும் எழும்பி, அகத்தூண்டுதலை (உத்வேகத்தைப் - inspiration) பெற்றுக் கொண்டு, அவர்கள் வியாதியஸ்தருக்காக ஜெபிக்கத் தொடங்கி, அவர்கள் தேவனை விசுவாசித்தார்கள், எனவே முழு ஊழியமும், எல்லாரும் ஒன்றாக இருந்து, அது தேவனுடைய பிரசன்னத்தை கீழே கொண்டுவந்து, யாவற்றையும் நன்றாக நடப்பிக்கிறது. தேவன் எல்லாவற்றையும் முற்றிலும் சரியாகச் செய்வார். பாருங்கள்-? அதைச் செய்யும்படியாக அவர் மனிதர்களை உடையவராய் இருக்கிறார்.
182. நான் அமெரிக்காவில் இருக்கையில்.... நாம் அப்படியே பகுத்தறிதலை, அதை மிக நன்றாகப் புரிந்துகொள்ளும்படி தோன்றும் மற்ற நாடுகளில் பயன்படுத்த வேண்டியிருந்தால், ஏன், என்னால் கூடுமானால், அதுவே அருமையாக இருக்கும்.
தேனே, உனக்கு என்ன தொல்லை உள்ளது-? இருதயப் பிரச்சனை. சற்று நேரம் இங்கு வா. நீ இங்கே வருவதற்கு முன்பு, நான் உன்னிடம் கேட்கிறேன், ஏனென்றால் என்னைவிட்டு.... தவிர்க்கும்படிக்கே, அதைச் செய்ய விரும்பினேன்.
183. இப்பொழுது, நீ மிகவும் இனிமையான ஒரு சிறு பெண் பிள்ளையாக, ஒரு அழகான சிறுமியாக இருக்கிறாய் என்று நினைக்கிறேன். இவ்விதமாக, வெளிர் பழுப்பு நிற தலை மயிரையும், பழுப்பு நிற கண்களையும் உடைய எந்தச் சிறுமியும் ஒரு அழகான சிறுமியாகத் தான் இருக்கிறாள். ஆம், ஐயா. ஆனால் இப்பொழுது, இயேசு, தாம் இங்கே பூமியின் மேல் இருந்து, நீ இங்கே இருதயப் பிரச்சனையோடு நின்று கொண்டிருப்பாயானால், அவர் என்ன செய்திருப்பார் என்று உனக்குத் தெரியுமா-? நீ இயேசுவை விசுவாசிக்கிறாயா-? மேலும் இப்பொழுது, அந்தச் சாபம் உன்னை விட்டு விலகி, நீ சுகத்தைப் பெற்றுக்கொள்ளும்படியாக, உனக்காக ஜெபிக்கும்படி சகோதரன் பிரன்ஹாமை இயேசு அனுப்பினார் என்று விசுவாசிக்கிறாயா-? நீ எப்போதும் அவரைச் சேவித்து, அவரை நேசிப்பாய், நீ அவ்வாறு செய்ய மாட்டாயா-?
184. எனக்கும் வீட்டில், ரெபேக்கா என்ற ஒரு சிறு மகள் இருக்கிறாள் என்று உனக்குத் தெரியும். அவளும் சற்று ஏறக்குறைய உன் அளவில் இருக்கிறாள், ஒருக்கால் கொஞ்சம் சிறியவளாய்  இருக்கிறாள். தேனே, உனக்கு என்ன வயதாகிறது-? பதினொரு வயது. அவளுக்கு இப்போது பத்து வயதாகிறது என்று நினைக்கிறேன். எனவே அவள்... அவளும் கூட கர்த்தராகிய இயேசுவை நேசிக்கிறாள். மேலும் நான்... என்ன... உனக்குத் தெரியும், நான் அன்றொரு நாளில், புறப்பட்டு வந்தபோது, சிறு ரெபேக்கா அழுதாள். நான் வீட்டை விட்டு வெளியில் வருவதைக் காண அவளுக்குப் பிடிக்காது. ஆனால், உனக்குத் தெரியும், நீ இங்கு மேலே இருந்தாய் என்பதை தேவன் அறிந்திருந்தார், மேலும் நான் உனக்காக ஜெபிக்க வரும்படியாகவும், அப்பொழுது நீ ஆரோக்கியமாகவும், பலமாகவும் இருக்க முடியும் என்றும் அவர் விரும்பினார். நீ அதை விசுவாசிக்கவில்லையா-? கவனித்துக் கொண்டிருக்கும் சபையார் அதை விசுவாசிக்கவில்லையா-? (சபையார் "ஆமென்" என்று கூறுகிறார்கள் - ஆசிரியர்.) இனிய இருதயமே, இங்கு வா.
185. இப்பொழுது, எங்கள் பரலோகப் பிதாவே, நாட்கள் போய், வருடங்கள் கடந்து சென்றிருந்தாலும், நீர் இன்னும் அதே மகத்தான யேகோவா தேவனாயிருக்கிறீர். இருதயப் பிரச்சனையோடு இந்த வயதிலிருக்கும், இச்சிறு பிள்ளை, மருத்துவரின் பராமரிப்புக்கும் அப்பால் இருக்கிறாள். ஆனால் கர்த்தாவே, உம்மால் சுகப்படுத்த முடியும்.
186. இப்பொழுது, என்னுடைய சொந்த அன்பு சகோதரனுடைய இருதயத்தை அவர்கள் வெளியே எடுத்து, அந்த வால்வு வழியாக தங்கள் விரல்களை இட்டு, அவைகளைத் திறக்க முயற்சித்தும், அது அதைச் செய்யாதிருந்த போது, நான் அவனைக் குறித்து சிந்தித்துப் பார்க்கிறேன். வணங்கின தலையோடு அங்கே நின்று கொண்டிருக்க, அவனுடைய முகம் கறுத்திருக்க, அவனுடைய கண்கள் விறைப்பாக நிற்க, நீர் அவனைத் திரும்ப பழைய நிலைக்குக் கொண்டு வந்து, அவன் இன்றும் ஜீவனோடிருக்கிறான். ஓ கிறிஸ்துவே, நான் இந்தப் பிள்ளையை நெஞ்சோடு அணைத்துக் கொள்கிறேன். இது யாரோ ஒரு மனிதனுடைய அன்புக்குரியவள். கர்த்தாவே, இது உம்முடைய பிள்ளையாகவும் கூட இருக்கிறதே. இருதயப் பிரச்சனையாகிய இந்த சாபத்தை இவளை விட்டு எடுத்துப்போடும், இந்த மணிவேளை முதல் இவள் பழைய நிலைக்கு வரத் தொடங்கி, ஒரு நல்ல ஆரோக்கியமுடைய பிள்ளையாக இருப்பாளாக. கிறிஸ்துவின் நாமத்தில் நான் ஜெபிக்கிறேன். ஆமென்.
187. தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக, தேனே. நீ எனக்கு ஒரு தயவு பண்ண நான் விரும்புகிறேன், இப்பொழுது, நீ இதைச் செய்வாயா. ஏறக்குறைய மூன்று நாட்கள் கழித்து புரிகிறதா-?), 72 மணி நேரம் கழித்து, நான் ஜெபிக்கும்படி வந்த சிறுமி நீ தான் என்றும், நீ எவ்வளவு முன்னேற்றமடைந்திருக்கிறாய் என்றும் எனக்கு ஒரு கடிதம் எழுதி தெரிவிப்பாயா-? நீ அதைச் செய்வாயா-? அதன் பிறகு மருத்துவர் உன்னைப் பரிசோதித்துப் பார்த்து, "நீ ஏறக்குறைய அதிக அளவில் நன்றாகவே முன்னேற்றம் அடைந்து கொண்டிருக்கிறாய்” என்று கூறுவாரானால், அப்போது நீ எனக்கு எழுதி, அதைத் தெரிவி. நீ அதைச் செய்வாயா-? உன்னை ஆசீர்வதிக்கிறேன், தேனே.
188. சகோதரனே, உங்களுடைய பிரச்சனை (என்ன-? சகோதரன் பிரன்ஹாமிடம் அந்தச் சகோதரன் பேசுகிறார் - ஆசிரியர்) சரி. நீர் யாரோ ஒருவருக்குப் பதிலாக நிற்கும் ஒரு விதத்தில் (பிரதிநிதித்துவ விதத்தில் - representative way) வருகிறீர். தேவன் ஜெபத்திற்குப் பதிலளிப்பார் என்று விசுவாசிக்கிறீரா-? )
189. எங்கள் பரலோகப் பிதாவே, இவர் ஒரு நண்பருக்காக நிற்கையில், உமது பரிசுத்த ஆவியானவர் அந்த நண்பரிடம் போய், அவருடைய சரியான நிலைமைக்கு அவரைத் திரும்பக் கொண்டு வரும்படி வேண்டிக்கொள்கிறேன. இயேசுவின் நாமத்தில், நான் ஜெபிக்கிறேன். ஆமென்.
(அந்தச் சகோதரன் மீண்டும் சகோதரன் பிரன்ஹாம் அவர்களிடம் பேசுகிறார்.) ஓ, சகோதரனே, தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. அருமை.
சகோதரனே, உங்கள் பிரச்சனை-? (சகோதரன் பிரன்ஹாமிடம் அந்தச் சகோதரன் பேசுகிறார் - ஆசிரியர்.) நரம்பு சம்பந்தமான பிரச்சனை. உங்கள் மகனைக் கொண்டு வாருங்கள், வாருங்கள்.
அன்புள்ள தேவனே, என்னுடைய சகோதரன் மேல் கரங்களை வைக்கிறேன். நான் இந்தப் பொல்லாங்கை கண்டனம் செய்து, அவருடைய சுகத்திற்காக, இயேசுவின் நாமத்தில் வேண்டிக் கொள்கிறேன். மற்ற சகோதரனைப் போலவே, அவர் களிகூருவாராக. ஆமென்.
சகோதரனே, தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக.
எப்படியிருக்கிறீர்கள்; உங்கள் பிரச்சனை, சகோதரனே-? (சகோதரன் பிரன்ஹாமிடம் அந்தச் சகோதரன் பேசுகிறார் - ஆசிரியர்) சரி. ஓ, சகோதரனே, தேவன் உம்மை ஆசீர்வதிப்பாராக.
190. பிதாவாகிய தேவனே, நீர் எப்போதுமே உண்மையுள்ளவராயிருக்கிறீர், நான் இந்தச் சகோதரனை ஆசீர்வதிக்கிறேன். என்னுடைய சரீரம் இவருடையதைத் தொட்டிருக்க, இயேசுவின் நாமத்தில் நான் ஜெபிக்கையில், பரிசுத்த ஆவியாகிய வல்லமை தாமே, இவரைத் தொட்டு, இவருடைய வாஞ்சையை இவருக்குக் கொடுப்பதாக. ஆமென்.
சகோதரனே, தேவன் உம்மை ஆசீர்வதிப்பாராக. நீர் கூறுவதை நான் கேட்கட்டும்.
சகோதரியாகிய நீங்களா. (அந்தச் சகோதரி பேசுகிறார்கள் - ஆசிரியர்.) சர்க்கரை நோய்.
191. "வியாதியஸ்தர் மேல் கைகளை வைப்பார்கள், அப்பொழுது அவர்கள் சொஸ்தமடைவார்கள்" என்று உமது வார்த்தை கூறியிருக்கையில், என்னுடைய கரத்தின் மூலமாக, என்னுடைய சரீரம் இவர்களுடைய சரீரத்தைத் தொடுகையில், இந்தப் பெண்மணியின் ஆரோக்கியத்தைத் திரும்ப அளித்தருளும், கர்த்தாவே. இயேசுவின் நாமத்தில், நான் இதை வேண்டிக் கொள்கிறேன். ஆமென்.
இப்பொழுது நீங்கள் இதைப் பரிசோதனை செய்து பார்த்து, எனக்குக் கடிதம் எழுத விரும்புகிறேன், என்ன சம்பவிக்கிறது என்பதை நான் கண்டுகொள்ள விரும்புகிறேன்.
192. இப்பொழுது, உம்முடைய பிரச்சனை என்ன, சகோதரனே-? சீக்கிரமாக. (அந்தச் சகோதரன் பேசுகிறார் - ஆசிரியர்.) எனவே, அப்படியானால், ஆரோக்கியத்திற்குத் திரும்புதல் தான். (ஓ, சகோதரன் ஜோசப் அவர்களே, என்னை மன்னியுங்கள்.) வாருங்கள் சகோதரனே. உங்கள் கைக்குட்டையை என்னிடம் தாருங்கள்.
193. இப்பொழுது, பரலோகப் பிதாவே, இவருடைய அன்பு துணைவியார் வியாதியாய் இருக்கிறார்கள், நான் இந்தக் கைக்குட்டையை ஆசீர்வதிக்கிறேன். இஸ்ரவேலர்கள் சிவந்த சமுத்திரத்தில் தடுக்கப்பட்டு, கடந்து செல்ல முடியாமல் இருக்கையில், சத்துரு அவர்களை அடைத்துப் போட்டிருந்தனர் (cornered), ஆனால் அவர்களுக்கு ஒரு வாக்குத்தத்தம் உண்டாயிருந்தது. தேவனுடைய ஆவி இறங்கி வந்து, அந்தத் தண்ணீர்களை நோக்கிப் பார்த்த போது, அது பயந்து, பின்னிட்டுத் திரும்பினது (moved back), அப்போது இஸ்ரவேலர் வாக்குத்தத்தத்தை நோக்கிச் சென்றார்கள்: தேவனே, இது உம்முடைய வாக்குத்தத்தம் அன்றோ. நான் இந்தக் கைக்குட்டையை இவருடைய மனைவியிடம் அனுப்புகிறேன், இது அவர்களைத் தொடும்போது, அது தேவனுடைய ஒரு வாக்குத்தத்தம் என்று சத்துரு காண்பானாக. அவன் தாமே பயந்து போய், அப்பாலே போவானாக, அவர்கள் தாமே நல்ல ஆரோக்கியத்தின் வாக்குத்தத்தத்திற்குச் செல்வார்களாக, கிறிஸ்துவின் நாமத்தில். ஆமென்.
இப்பொழுது, இவள் சொல்வதை நான் கேட்கட்டும், நீங்களும் அவ்வாறு கேட்க மாட்டீர்களா-? தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக. சரி.
194. குழந்தையா-? இதற்கு என்ன பிரச்சனை-? (அந்தச் சகோதரி பேசுகிறாள் - ஆசிரியர்.) ஓ, இது செவிடும் ஊமையுமாக இருக்கிறது. ஓ, இவளுடைய சிறு இருதயம் ஆசீர்வதிக்கப் படுவதாக. இப்பொழுது, இதனுடைய கேட்கும் திறனையும் பேசும் திறனையும் இயேசு திரும்பக் கொடுப்பார் என்று விசுவாசிக்கிறாயா-? நீ விசுவாசிக்கிறாயா-? சரி. நான் இதற்காக ஜெபிக்கப் போகிறேன். இதற்கு என்ன சம்பவிக்கிறது என்பதை நீ காண விரும்புகிறேன்.
195. இப்பொழுது, அன்புள்ள பிரலோகப் பிதாவே, இந்தச் செவிடும் ஊமையுமாயிருக்கிற பிள்ளைக்கு, நீர் இந்த ஆவியை இந்தப் பிள்ளையை விட்டு அகற்றி, இது கேட்கவும் பேசவும் செய்ய வேண்டுமென்று நான் ஜெபிக்கிறேன். கர்த்தாவே, இதை அருளும், ஏனென்றால் இந்தப் பிள்ளையானது வெறுமனே ஒரு குழந்தையாக உள்ளது, ஆனால் நீர் தேவனாயிருக்கிறீர். இயேசுவின் நாமத்தில், நீர் இதை அருளும்படி நான் ஜெபிக்கிறேன். ஆமென்.
196. இப்பொழுது, அப்படியே... ஒரு நிமிடம் உங்கள் தலைகளை தாழ்த்தி வைத்துக் கொள்ளுங்கள். இப்பொழுது, இது துரத்துதல் அல்ல. உங்களுக்குப் புரிகிறதா-? இது ஒரு தரிசனம் அல்ல. இது எதற்காக என்று எனக்குத் தெரியாது. ஆனால் சற்று நேரம், தேவன் இந்தப் பிள்ளையைச் சுகப்படுத்தினாரா என்று காண விரும்புகிறேன். இப்பொழுது, உங்கள் தலையைத் தாழ்த்தி வைத்துக் கொள்ளுங்கள். தேவன்... (சகோதரன் பிரன்ஹாம் அவர்கள் ஒரு முறை தம்முடைய கரங்களைத் தட்டுகிறார் - ஆசிரியர்.) இது உனக்குக் கேட்கிறதா-? (சகோதரன் பிரன்ஹாம் தமது விரல்களைச் சொடுக்குகிறார்.) இவளால் கேட்க முடிகிறது. அம்மா. அம்மா. அம்மா. அம்மா. இதை உன்னால் சொல்ல முடியுமா-? அம்மா. இதைக் கவனியுங்கள். (சகோதரன் பிரன்ஹாம் தம்முடைய விரல்களைச் சொடுக்குகிறார்.) இவளுடைய சிறு கண்கள் சுற்றிலும் திரும்பி அது எங்கிருந்து வருகிறது என்பதை நோக்கிப் பார்ப்பதைக் காண்கிறீர்களா-? (சகோதரன் பிரன்ஹாம் தம்முடைய விரல்களைச் சொடுக்குகிறார்.) இப்பொழுது, இவள் ஒரு போதும் பேசினதே கிடையாது, நீங்கள் பாருங்கள், எனவே இவளால் முடியாது. பாருங்கள், இவ்விதமாக. அம்மா. அம்மா. அம்மா. அம்மா. கவனியுங்கள். அம்மா. அம்மா. "அம்மா" என்று சொல்லு. சகோதரியே, நீ என்ன செய்ய வேண்டுமென்று நான் உனக்குச் சொல்லுகிறேன். இவளைச் சரியாக இங்கு எங்காவது எடுத்துச் சென்று, அமரவைத்து, இவளுக்குப் புரியவைக்க அப்படியே முயற்சி செய். புரிகிறதா-? இவள்.... இவளால் பேச முடியும் என்று நான் விசுவாசிக்கிறேன். என்னால் - என்னால் கூற இயலாது, ஏனென்றால் இது, இது வெறுமனே நானாக இருக்கிறது. ஆனால் இவள் சுகமடைந்து விட்டதாக என்னுடைய விசுவாசம் கூறுகிறது. புரிகிறதா-? நான் அதை விசுவாசிக்கிறேன். என்னால்..... முடியாது. நீ இவளைப் பேச வைப்பாயானால்.... இவளால் கேட்க முடிகிறது. எனக்கு அது தெரியும். இவளால் இதைக் கேட்க முடிகிறது. இவளால் கேட்க முடிகிறது. ஆனால் இவளால் பேசவும் முடியும் என்று நான் விசுவாசிக்கிறேன்.இது இரண்டுமே ஒரே நரம்பிலேயே வேலை செய்கிறது. நீ அங்கு சென்று, இவள், "அம்மா" என்று கூறுகிறாளா என்று பார். இவள் "அம்மா" அல்லது அவ்விதமான ஏதோவொன்றை கூறும்படி செய். சரி. இப்பொழுது தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக. ஒரு சில நிமிடங்களில் நீ கூறுவதை நான் கேட்கட்டும். சரி.
ஐயா, உங்கள் பிரச்சனை-? (அந்தச் சகோதரன் பேசுகிறார் - ஆசிரியர்) நரம்புக் கோளாறு. கிறிஸ்துவால் அதைச் சுகப்படுத்த முடியும். நீ அதை விசுவாசிக்கவில்லையா-? சரி.
197. எங்கள் பரலோகப் பிதாவே, நான் இந்த மனிதரை ஆசீர்வதித்து, இவர்மேல் கரங்களை வைத்து, இந்த நரம்புக் கோளாறு இவரை விட்டுப் போகும்படி வேண்டிக்கொள்கிறேன். இயேசுவின் நாமத்தில், நான் இந்த ஆசீர்வாதத்தைக் கேட்கிறேன் ஆமென்.
198. இப்பொழுது, பார் மகனே, நரம்புக் கோளாறு (nervousness - பதட்டப்படுதல்) என்பது அங்கே போராடுவதற்குள்ள காரியங்களிலேயே மிகக்கடினமான காரியமாக இருக்கிறது, அது புற்று நோயைக் காட்டிலும் மோசமானது, ஏனென்றால் நீயாகவே உன்னால் மனரீதியாக சரியான விதமாக சமன் செய்ய முடியாது. உனக்குப் புரிகிறதா-? உன்னால் உனது மனத்தை சரியாக வேலை செய்யும்படி வைக்க முடியாது. ஆனால் இப்பொழுது, சரியாக இப்பொழுதிலிருந்தே நீ துவங்குகிறாய், நீ தேவனுடைய பிரசன்னத்தில் நின்று கொண்டிருக்கிறாய் என்பதை அறிந்து, "சரியாக இப்பொழுதே, இந்த மணி நேரத்திலேயே, நான் சுகமடைந்து விட்டேன்" என்று கூறி, வெளியே சென்றும், அதே காரியத்தையே கூறிக்கொண்டிருந்து, நீ உண்மையாகவே அதை விசுவாசிக்கும் மட்டுமாக (புரிகிறதா-?), நீ அதை உண்மையாகவே விசுவாசிக்கும் மட்டுமாக, அதைச் சொல்லிக் கொண்டிரு. அப்போது நீ சுகத்தைப் பெற்றுக் கொள்வாய். நீ அதை விசுவாசிக்கிறாயா-? இப்பொழுது, களிகூர்ந்தபடியே செல், உனக்கு என்ன சம்பவிக்கிறது என்பதை நான் அறிந்து கொள்ளட்டும்.
199. உங்கள் பிரச்சனை, ஐயா-? (அந்தச் சகோதரன் பேசுகிறார் - ஆசிரியர்) ஐயா, சற்று நேரம் இங்கே வாருங்கள் (Come right here). ஓ, ஆமாம், உமது காதில் ரீங்கார சத்தம், மற்றும் வலது இடுப்பு பலவீனம் அடைந்துள்ளது. நீர்... கால். தேவன் உம்மைச் சுகப்படுத்துவார் என்று விசுவாசிக்கிறீரா, ஐயா-?
200. எங்கள் பரலோகப் பிதாவே, நீர் வயதுக்கு பட்சபாதம் காட்டுவதில்லை. நான், உமது ஊழியக்காரனாக, இப்பொழுது, நான் நியாயத்தீர்ப்பின் நாளில் கூடவே நிற்பேன் என்பதைக் குறித்து மிகவும் உணர்வுள்ளவனாக, எனது சகோதரனாகிய இதன் மேல் (இவர் மேல்) கரங்களை வைக்கிறேன். நீர் இவரைச் சுகப்படுத்தி, இவரைக் குணப்படுத்தி, இவருடைய சுகமளித்தலுக்கு இதுவே நேரம் என்பதை அறிந்து கொள்ளச் செய்யும்படியாக வேண்டிக் கொள்கிறேன், நன்மை பயக்கும் ஊக்கமான ஜெபமாக, நான் ஜெபம் பண்ணுகிறேன். கிறிஸ்துவின் நாமத்தில் கேட்கிறேன். ஆமென்.
201. இப்பொழுது, நீர் சுகமடைந்து விட்டீர் என்று நீர் இப்பொழுதே விசுவாசிக்கும்படி விரும்புகிறேன். இப்பொழுது, நான் உமது காதை அப்படியே தொட்டு, அதை கேட்கும்படி செய்ய விரும்புகிறேன், எல்லாமே சரியாக உள்ளது. உமது கால் நன்றாக உள்ளது என்று நீர் விசுவாசிக்க விரும்புகிறேன். உமது காலை தொட்டுப்பாரும், நீர் அதை ஏதாவது நன்றாக (ஆன) விதத்தை உணருகிறீரா என்று பாரும். புரிகிறதா-? அது நன்றாக இருக்கிறது என்று விசுவாசிக்கிறீர், அப்படித்தானே-? அது நன்றாக இருக்கிறதா-? அது மிகவும் நல்லது. காது எப்படியிருக்கிறது-? அது நன்றாக உள்ளதா-? (அந்தச் சகோதரன் பேசுகிறார் - ஆசிரியர்.) ஓ, உம்முடைய கேட்கும் திறன் மோசமாக இருந்ததாக நினைத்தேன். சரி. இப்பொழுது, நீர் சென்று, காலுக்கும் காதுக்கும் என்ன சம்பவிக்கிறது என்று எனக்குத் தெரியப்படுத்தும். நீர் எனக்குக் கடிதம் எழுதி தெரியப்படுத்துவீரா-?  அப்படியே ஜெபர்ஸன்வில்லுக்கு. தேவன் உம்மை ஆசீர்வதிப்பாராக. சரி.
202. இப்பொழுது, அந்தப் பெண்ணைக் கொண்டு வாருங்கள். ஓ, அவளால் மிக நன்றாக நடக்க முடியவில்லை, நன்றாகக் கொண்டு வாருங்கள், அல்லது அவளைச் சுமந்து (pack) கொண்டு வாருங்கள். அது நல்லது. இப்பொழுது, சகோதரியே, உனக்கு என்ன பிரச்சனை இருக்கிறது-? (அந்தச் சகோதரி பேசுகிறார்கள் - ஆசிரியர்.) முடக்குவாதம்; ஆஸ்துமா, பக்கவாதம். இப்பொழுது, அன்பு சகோதரியே, உனக்கு உதவி செய்யக்கூடிய ஒரே ஒரு காரியம் தான் உண்டு; அது கர்த்தராகிய இயேசுவே. நீ ஒரு அழகான இளம்பெண்ணாக இருக்கிறாய், இந்நிலையில் உன்னைக் காண்பது என்பது அவ்வளவு ஒரு அவமானமாக உள்ளது. இதைச் செய்ய எனக்கு வல்லமை இருந்திருக்க விரும்பினேன். (அப்படியானால்), நான் அதைச் செய்திருப்பேன், சகோதரியே. நான் அதைச் செய்திருப்பேன். தேவன் என்னுடைய இருதயத்தை அறிவார். எனக்கு அதைச் செய்ய வல்லமை கிடையாது. நான் - நான் - நான் - நான் அந்த ஒருவர் அல்ல. பார், அது ஏற்கனவே செய்யப்பட்டு விட்டது. புரிகிறதா-? கிறிஸ்து அதைச் செய்து விட்டார். மேலும் இப்பொழுது, என்னால் செய்ய முடிந்த ஒரே காரியம் என்னவென்றால், உனக்காக ஜெபித்து, இது செய்யப்பட்டு விட்டது என்பதை விசுவாசிக்கும்படி உன்னைக் கேட்பது தான், கிறிஸ்து உன்னுடைய சரீரத்தை உனது விசுவாசத்திற்கு கீழ்ப்படியும்படி செய்வார். நீ இப்பொழுது அதை விசுவாசிக்கிறாயா-?
203. அந்த.... நீங்கள்... இது உங்கள் மகளா-? நீ அதை விசுவாசிக்கிறாயா-? இது எவ்வாறு புறப்பட்டுப் போகிறது என்பதையும் என்ன சம்பவிக்கிறது என்பதையும் நீங்கள் எனக்குத் தெரியப்படுத்துவீர்களா-? இவள் எவ்வளவு காலமாக இவ்விதம் இருக்கிறாள்-? ஒரு பிள்ளையாக இருந்தது முதற் கொண்டு. அதன் பிறகு, உடனடியாக எதாவது முன்னேற்றம் காணப்பட்டது, இல்லையா-? நீங்கள் இங்கே இந்தப் பட்டணத்தில் தான் இருக்கிறீர்களா-? நீங்கள்... நீங்கள் இங்கே ஒரு சில நாட்கள் இருக்கப் போகிறீர்களா-? முன்னேற்றம் ஏதாகிலும் இருக்கிறதா என்று அடுத்த, ஏறக்குறைய நாளை இரவில் எனக்குத் தெரியப்படுத்துவீர்களா-?
உங்களில் யாராவது, நீங்கள் அதைச் செய்ய நான் விரும்புகிறேன். விசுவாச ஜெபத்தை நாங்கள் ஏறெடுக்க முயற்சிக்கையில், இப்பொழுது என்னோடு கூட நீங்கள் விசுவாசிப்பீர்களா-?
204. எங்கள் பரலோகப் பிதாவே, யாரோ ஒருவரின் அன்புக்குரியவளான அழகான, இளமையான, கறுத்த தலைமயிரையும், கறுத்தக் கண்களையும் உடைய இந்த வாலிப் பெண் இங்கே நின்று கொண்டிருக்கையில், நான் இவளுக்காக ஜெபிக்கிறேன், பிதாவே. பிசாசு தான் இதைச் செய்திருக்கிறான் என்று நான் நிச்சயம் உடையவனாய் இருக்கிறேன். இது ஏனென்று எனக்குத் தெரியாது. இந்த இரவானது இதற்காக நியமிக்கப்பட்டிருக்கையில், நான் உம்மிடம் வேண்டிக் கொள்கிறேன், கர்த்தாவே, முடக்கு வாதத்தால் தாக்கப்பட்டு, அல்லல்படும், இந்த வாலிப பெண்ணின் மேல் நான் என் கரங்களை வைத்து, என்னுடைய இருதயத்தின் உத்தமத்தோடு கூட கேட்கிறேன், தேவனே, இந்தத் தாயாரும் இவளும் துதியையும் மகிமையையும் செலுத்தியபடி இந்த மேடைக்கும் திரும்பவரக் காரணமாகும் ஏதோவொன்று அங்கே சம்பவிக்கும் மட்டுமாக, கடிகாரம் மறுபடியும் திரும்ப சுற்றிவர வேண்டாம். கர்த்தாவே, நீர் அதைச் செய்வீரானால், நான் இந்த விதத்திலேயே ஜனங்களுக்காக ஜெபிக்கத் தொடங்கி, உமது ஜனங்களுக்காக என்னால் முடிந்த யாவற்றையும் செய்வேன் என்று உமக்கு வாக்குப் பண்ணுகிறேன். இது ஒரு உதாரணமாக இருக்கட்டும், பிதாவே. இயேசுவின் நாமத்தில், இவளுடைய சுகத்திற்காக நான் ஜெபிக்கிறேன். ஆமென்.
205. தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக. இப்பொழுது, நீ நன்றாக உணருகிறாய், அப்படித் தானே-? நீ நன்றாக உணருகிறாய். நல்லது, அது மிகவும் அருமையானது. சரியாக இப்பொழுதே, நீ நன்றாக இருக்கிறாய் என்று நம்புகிறேன். அடுத்த 24 மணி நேரத்திற்குள் நீ மிக அதிகம் நன்றாக ஆகப்போகிறாய் என்று நான் விசுவாசிக்கிறேன், உன்னுடைய தாயார் இங்கே வந்து, அதைக் குறித்து சொல்லப் போகிறார்கள். நீங்கள் சொல்ல மாட்டீர்களா-? மேலும் நீங்களும் கூட... சரி, ஐயா. இப்பொழுது, கர்த்தர் உன்னை ஆசீர்வதிப்பாராக. சரி. தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. (அந்தப் பெண் பேசுகிறாள் - ஆசிரியர்.)
தேவனே, கிறிஸ்துவின் நாமத்தில், அந்த ஸ்திரீக்காக இந்த கைக்குட்டையை நீர் ஆசீர்வதிக்க வேண்டுமென்று ஜெபிக்கிறேன். ஆமென்.
தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக, சகோதரியே. இப்பொழுது, நான் கேட்கட்டும். (அந்தப் பெண் மறுபடியும் பேசுகிறாள்.)
206. பிதாவே, இந்தப் பெண்ணிற்கு இவளுடைய வாஞ்சையை அருளும். தேவனே, இவளுக்காக நீர் வைத்திருக்கிற எல்லாவற்றையுமே இவளுக்காக அருளும் வரையில், இவளுடைய இருதயமானது இவள் மகள் பேரில் மிகவும் குதூகலமாக இருக்க வேண்டுமென்று ஜெபிக்கிறேன், இயேசுவின் நாமத்தில். ஆமென்.
தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக.
இப்பொழுது, சகோதரியே, நீ எதற்காக ஜெபிக்கப்பட விரும்புகிறாய்-? ஓ, தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக.
207. பரலோகப் பிதாவே, இந்தச் சிறு பெண்ணின் சுற்றுக்காக இவள் இங்கே நின்றுகொண்டு காத்துக் கொண்டிருக்கையில், இவளை ஆசீர்வதித்தருளும். நான் இவள் மேல் கரங்களை வைத்து, உம்முடைய ஆசீர்வாதங்கள் இவள் மேல் தங்கும் படியாக, இயேசுவின் நாமத்தில் வேண்டிக் கொள்கிறேன். ஆமென்.
சகோதரியே, இப்பொழுது தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக. நீ இப்பொழுது விசுவாசிக்கிறாயா-? ஆமென். சரி. அருமை.
உங்கள் பிரச்சனை, ஐயா-? (அந்தச் சகோதரன் பேசுகிறார் - ஆசிரியர்.) வயிற்றுக் கோளாறு.
208. ஓ பிதாவாகிய தேவனே, நான் இந்த மனிதருடைய வயிற்றுக் கோளாறுக்காக ஜெபித்து, இவர் சுகமடையும்படியாகவும், ஒருக்கால் நாளை இவர் உள்ளே வந்து, "அது முதற்கொண்டு என்னுடைய வயிறு என்னை ஒரு போதும் தொல்லைப்படுத்தவேயில்லை" என்று ஒரு கடிதத்தைக் கொண்டு வரும்படியாகவும் நான் வேண்டிக்கொள்கிறேன். இயேசுவின் நாமத்தில், நான் இதைக் கேட்கிறேன். ஆமென்.
சகோதரனே, நீர் சொல்லுவதை நான் கேட்கட்டும். இப்பொழுது விசுவாசிக்கிறீரா-? சரி. அது நல்லது.
உங்கள் கோளாறு என்ன, சகோதரியே-? (அந்தச் சகோதரி பேசுகிறார்கள் - ஆசிரியர்) என்ன-? தாங்கொணா துன்பம் (Oppression). இங்கே வா. அது நிச்சயமாக பிசாசு தான்.
209. எங்கள் பரலோகப் பிதாவே, இந்த அழகான வாலிப பெண் நோக்கிப் பார்த்து, "தாங்கொணா துன்பம் (Oppression)" என்று கூறுகையில், இங்கே நின்று கொண்டிருக்கும் இவளை ஆசீர்வதியும். இவள் இந்தக் கைக்குட்டையைப் பிடித்துக்கொண்டு, தன்னுடைய கரங்களை உரசிக்கொண்டும் இருப்பதைப் பாரும், இது அதைச் செய்து கொண்டிருக்கும் ஒரு பிசாசு என்று அறிவீர். தேவனே, மேலும் தேவனே, நீர் அவனைக் கடிந்து கொண்டு, இந்தப் பெண்ணை விட்டு அவன் புறப்பட்டுப்போகச் செய்யும்படி ஜெபிக்கிறேன். கர்த்தாவே, நாளை இரவிலே, இந்த ஜனங்கள் இவ்விடத்தில் திரளாக இருந்து, நீர் இவர்களுக்காக என்ன செய்துள்ளீர் என்பதைக் கூறுவார்களாக. இவள் தாமே வந்து, தேவனைக் குறித்து மகத்தான துதிகளைக் கூறுவாளாக. ஆமென்.
தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக, சகோதரியே. இப்பொழுது நீ விசுவாசி. களிகூர்ந்தபடியே சென்று, தேவனுக்கு நன்றி செலுத்திக் கொண்டிரு.
210. (அந்தச் சகோதரி பேசுகிறார்கள் - ஆசிரியர்.) கையின் கீழ் கஷ்டமான பிரச்சனையும், வயிற்றில் புற்றுநோயும் உள்ளது. சகோதரியே, தேவன் உன்னைச் சுகப்படுத்தாவிட்டால், மரணம் தான் என்று நீ தெளிவாக அறிந்திருக்கிறாயா-? இப்பொழுது நீ கட்டாயம் விசுவாசித்தாக வேண்டும்.
211. ஓ பரலோகப் பிதாவே, உத்தமமாக தோற்றமளிக்கிற இந்தப் பெண்மணியின் முகத்தில் நான் பார்க்கையில், தேவனே, நீர் இவளை ஆசீர்வதித்து, இந்தப் புற்றுநோய் எல்லாவற்றையும் நீர் இவளை விட்டு எடுத்துப்போட வேண்டுமென்று கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறேன். இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், இது தாமே மரித்து இனிமேல் இது இவளைத் தொல்லை செய்யாதிருப்பதாக. ஆமென்.
இப்பொழுதும் நாளைக்கும் இடையில் என்ன நடக்கிறது என்று கூறுவதைக் கேட்க விரும்புகிறேன். சரி.
இப்பொழுது, நீ... சகோதரியே, நீ எதற்காக ஜெபிக்க விரும்புகிறாய்-? (அந்தச் சகோதரி பேசுகிறாள் - ஆசிரியர்) ஆமாம். சரி. இயேசு உன்னைச் சுகப்படுத்துவார் என்று விசுவாசிக்கிறாயா-?
212. பரலோகப் பிதாவே, நீர் இந்த இடைவெளியை அடைக்க வேண்டுமென்று ஜெபிக்கிறேன். சிவந்த சமுத்திரத்தை திறக்கக் கூடியவரும், அந்த சிவந்த சமுத்திரத்தை அடைக்கக் கூடியவருமாய் இருந்த ஒருவர் நீரே. தேவனே, உமது குமாரனாகிய இயேசுவின் நாமத்தில், நீர் இந்தப் பெண்மணியைச் சுகப்படுத்த வேண்டுமென்று ஜெபிக்கிறேன். ஆமென்.
இப்பொழுது, சகோதரியே, உனது முழு இருதயத்தோடும் இதை விசுவாசி.
இப்பொழுது, வாருங்கள் சகோதரியே. உனது கோளாறு என்ன-? (அந்தச் சகோதரி பேசுகிறாள் - ஆசிரியர்.) கீல்வாதம் (Arthritis).
213. பரலோகப் பிதாவே, மருத்துவர்கள் இதற்காக எதையுமே செய்ய முடியாத ஏதோ ஓன்றாக இது உள்ளது. ஆனால் நீர் ஒரு பரிகாரமாக (remedy) இல்லை; நீர் குணப்படுத்துகிறவராகவே (Cure) இருக்கிறீர். நீர் இந்தப் பெண்மணியைச் சுகப்படுத்த வேண்டுமென்று ஜெபிக்கிறேன், இவர்கள் தன்னுடைய மீதமுள்ள ஜீவியத்தில் நலமாக இருப்பார்களாக, கிறிஸ்துவின் நாமத்தில். ஆமென்.
இப்பொழுது, நீங்கள் விசுவாசிக்கிறீர்களா-? சரி. களிகூர்ந்தபடியே போங்கள். என்ன நடக்கிறது என்பதை நாளை இரவில் எனக்கு அறியப்படுத்துங்கள்.
சகோதரியே, உங்களுடைய கோளாறு என்ன-? (அந்தச் சகோதரி பேசுகிறார்கள் - ஆசிரியர்) ஓ.
214. தேவனே, நீர் இந்தப் பெண்மணியைச் சுகப்படுத்தி, இவளைக் குணப்படுத்த வேண்டுமென்று கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறேன். நாளை இரவில் தேவன் இவளைச் சுகப்படுத்தியிருக்கிற இவளுடைய சாட்சி இங்கே இருப்பதாக. இயேசுவின் நாமத்தில், நான் ஜெபிக்கிறேன். ஆமென்.
இப்பொழுது, என்னைப் பார்க்க வேண்டாம். ஆனால் இந்த எலியாவின் தேவன் இங்கே இருக்கிறார் என்பதை நினைவில் கொள்ளுங்கள். அவர் இங்கேயிருக்கிறார் என்பதை அவர் நிரூபித்துக் காட்டவில்லையா என்று கவனித்துப் பாருங்கள்.
215. உங்களுடைய கோளாறு..... எனக்கு உங்களைத் தெரிந்திருக்க வேண்டுமென்பது போன்று தோன்றுகிறது. நீங்கள் திருமதி. டொமிகோ இல்லையா-? திருமதி. டொமிகோவின் சிநேகிதி, அது சரியே. (அந்தப் பெண்மணி பேசுகிறார்கள் - ஆசிரியர்) ஓ-? ஓ, நல்லது இப்பொழுது, அது... நிச்சயம். இப்பொழுது, அவர் சுகமளிப்பவராக இருக்கிறார், அவர் அவ்வாறு இல்லையா, சகோதரியே-?
216. எங்கள் பரலோகப் பிதாவே, இந்த அன்பான ஸ்திரீயை நீர் சுகப்படுத்த வேண்டுமென்று இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், என்னுடைய முழு இருதயத்தோடும் ஜெபிக்கிறேன். இந்த வளர்ச்சி இவர்கள் மேல் உள்ளது. நீர் மாத்திரமே இதை எடுத்துப் போட முடியும். இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், நான் இவர்கள் மேல் கரங்களை வைக்கிறேன். ஆமென்.
இப்பொழுது என்ன சம்பவிக்கிறது என்பதை நாளைக்கு நான் கேட்கும்படி செய்யுங்கள்.
உங்கள் கோளாறு, சகோதரியே-? (அந்தச் சகோதரி பேசுகிறார்கள் - ஆசிரியர்.) சர்க்கரை நோய். சகோதரியே, தேவன் உங்களிடத்தில் இரக்கமாயிருப்பாராக. நீங்கள் இப்பொழுது விசுவாசிக்கிறீர்களா-?
217. எங்கள் பரலோகப் பிதாவே, இதோ உமது ஊழியக்காரன் இருக்கையில், கோடிக் கணக்கான வருடங்கள் கடந்த பிறகும், நீர் இன்னும் தேவனாகவே இருக்கிறீர். நீர் எப்போதுமே தேவனாகவே இருப்பீர். ஜனங்கள் இன்னும் தேவையுள்ளவர்களாக இருக்கிறார்கள், அங்கே ஒரு தேவை இருக்கும் காலம் வரையில், அந்தத் தேவையை சந்திக்க ஒரு தேவனும் அங்கே இருக்கத்தான் செய்கிறார். எலிசா தன்னுடைய சரீரத்தை அந்தப் பிள்ளையின் மேல் வைத்தது போல, நான் இவர்கள் மேல் எனது கரங்களை வைக்கையில், நான் ஜெபித்து, இயேசுவின் நாமத்தின் மூலமாக, இவர்களுடைய சுகத்திற்காக வேண்டிக்கொள்கிறேன். ஆமென்.
சகோதரியே, தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. இப்பொழுது விசுவாசியுங்கள்.
சகோதரி உட் அவர்களே, உம்முடைய கோளாறு என்னவென்று நிச்சயமாகவே எனக்குத் தெரியும், அது உம்முடைய பக்கவாட்டில் உள்ளது.
218. பரலோகப் பிதாவே, என்னுடைய இருதயத்தின் உத்தமத்தோடு கூட என்னுடைய சகோதரிக்காக ஜெபிக்கிறேன். இவர்களுடைய பக்கவாட்டிலுள்ள கோளாறிலிருந்து இவர்களைச் சுகப்படுத்தும் நேரம் இதுவாக இருப்பதாக. இப்பொழுதே அது இவர்களை விட்டு நீங்கி, இவர்களை மறுபடியுமாக ஒருபோதும் தொல்லை செய்யாது இருக்கும்படியாக, இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறேன். ஆமென்.
சகோதரியே, தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக.
உங்களுடைய கோளாறு-? (அந்தச் சகோதரன் பேசுகிறார் - ஆசிரியர்) வேறொரு சகோதரனுக்காக. சற்று அருகில் வருவீர்களா-?
219. பரலோகப் பிதாவே, இந்த உலகத்தில் எங்கோவுள்ள வேறு யாரோ ஒருவருக்காக இவர் நிற்கிறார் (represents). அந்த வேறு யாரோ ஒருவரை நீர் சுகப்படுத்தி, இவருடைய பிரயாசத்திற்காக, இம்மனிதரை ஆசீர்வதிக்க வேண்டுமென்று, இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன். ஆமென்.
வாருங்கள், ஐயா. என் சகோதரனே, உமது கோளாறு-? (அந்தச் சகோதரன் பேசுகிறார் - ஆசிரியர்.) உம்முடைய ஒரே மகன் மனநிலை பாதிக்கப்பட்டவனாயிருக்கிறான் (mentally ill). வாரும்.
220. பரலோகப் பிதாவே, இவன் தாமே, ஓ தேவனே, என்னுடைய இருதயம் இவனுக்காக இரத்தம் சிந்துகையில், இந்த அசுத்த ஆவி தாமே இந்தப் பையனை விட்டு விலகுவதாக. இவன் வீட்டிற்குத் திரும்பிச் செல்லும் போது, அது போய் விட்டதையும் கூட கண்டு, வந்து, தேவனுடைய மகிமைக்காக சாட்சி சொல்வானாக. பிதாவே, இயேசுவின் நாமத்தில், நான் தாழ்மையோடு வேண்டிக் கொள்கிறேன். ஆமென்.
சகோதரனே, தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக, நீங்கள் வேண்டிக் கொண்டதை பெற்றுக் கொள்வீர்களாக.
சகோதரியே, உன்னுடைய கோளாறு-? (அந்தச் சகோதரி பேசுகிறார்கள் - ஆசிரியர்.) ஆன போதிலும் அவர் செய்கிறார், அவர் செய்யமாட்டாரா-?
221. எங்கள் பரலோகப் பிதாவே, இந்தச் சிறு பெண்ணிற்கு நிச்சயமில்லாது இருக்கையில், ஆனால் இது ஏதோவொரு இடத்தில் வயிற்றிலுள்ள வியாதியாக உள்ளது. பிதாவே, நான் இவர்கள் மேல் எனது கரங்களை வைக்கையில், இந்த பொல்லாங்கு இவர்களை விட்டு விலகிப் போகும்படி நீர் செய்ய வேண்டுமென்று ஜெபிக்கிறேன், இயேசு கிறிஸ்துவின் நாமத்தில். ஆமென்.
தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. இப்பொழுது, நாளை என்ன நடக்கிறது என்று நான் கேட்கும்படி செய்யுங்கள். புரிகிறதா-? சரி.
சகோதரியே, உங்கள் கோளாறு என்ன-? (அந்தச் சகோதரி பேசுகிறார்கள் - ஆசிரியர்.) உங்களுடைய மகள் ஒரு மருத்துவமனையில் இருக்கிறாளா-? சரி. நீங்கள் இந்த கைக்குட்டையை அவளிடம் கொண்டு போக விரும்புகிறீர்கள்.
222. இப்பொழுது, பிதாவாகிய தேவனே, தகுதியற்ற என்னுடைய கரங்களிலே இந்தக் கைக் குட்டையை உமக்கு முன்பாக வைக்கிறேன். ஆனால் இதை உலகம் முழுவதும் அனுப்பும் படியாக இருக்கிற தேவையை நீர் மிகவுமாக கண்டிருக்கிறீர். பரலோகப் பிதாவே, நீர் இந்தக் கைக்குட்டையை ஆசீர்வதித்து, இவர்களுடைய மகள் மேல் இது வைக்கப்படும் போது, அவள் தாமே ஒரு நல்ல ஆரோக்கியமுடைய நபராக மருத்துவமனையை விட்டு போகவிடப்பட்டு (dismissed), வீட்டிற்கு அனுப்பப்படும்படியாக இயேசுவின் நாமத்தின் மூலமாக ஜெபிக்கிறேன், ஆமென்.
இப்பொழுது, சகோதரியே, தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக, அது அவ்வண்ணமாகவே நடப்பதாக. என்ன நடக்கிறது என்பதை நான் கேட்கும்படி செய்யுங்கள்.
223. உங்களுடைய கோளாறு, சகோதரியே-? (அந்தச் சகோதரி பேசுகிறார்கள் - ஆசிரியர்) கீல்வாதம் (Arthritis), சரி. ஓ, நான் காண்கிறேன். எல்லா நேரமும் மோசமாகிறது. ஊ-? ஆமாம். சரி. இப்பொழுது, சகோதரியே, அங்கே ஒரே ஒரு நம்பிக்கை தான் உண்டு; அது கிறிஸ்து இடத்தில் தான் இருக்கிறது. வார்த்தையைப் பிரசங்கம் பண்ணுவது.... கூட இப்பொழுது உணர்வு உள்ளவர்களாய் இருக்கிறீர்களா. நீங்கள் எப்பொழுதாவது கூட்டங்களை, மற்ற கூட்டங்களைக் கண்டிருக்கிறீர்களா-? நீங்கள் கடந்த இரவில் இங்கே இருந்தீர்களா-? இருந்தீர்களா.... நீங்கள் இங்கே ஞாயிற்றுக்கிழமை இருந்தீர்களா-? பரிசுத்த ஆவியானவர் ஜனங்கள் மத்தியில் எவ்வாறு கிரியை செய்தார் என்பதைக் கண்டீர்களா-? இப்பொழுது, பாருங்கள், அவர் இங்கேயும் அப்படியே அதே விதமாகவே இருக்கிறார். அவர் சரியாக இங்கே இருக்கிறார். புரிகிறதா-? நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா-?
224. இப்பொழுது, பரலோகப் பிதாவே, நான் இயேசுவின் நாமத்தில், எங்கள் சகோதரியின் மேல் கரங்களை வைத்து, இவர்களை ஆசீர்வதிக்கிறேன், இப்பொழுதும் நாளை இரவுக்கும் இடையில், இன்றிரவு ஓட்டல் அறையில் நான் உம்மிடம் கேட்ட அந்த அடையாளம், இந்தப் பெண் திரும்பி வந்து, கீல்வாதமானது போய் விட்டது என்று கூறும்படியாக நீர் இவர்களை உடையவராயிருக்க வேண்டுமென்று ஜெபிக்கிறேன். இயேசுவின் நாமத்தில், நான் இதைக் கேட்கிறேன். ஆமென்.
இப்பொழுது, சந்தேகப்படாதீர்கள். ஆனால் வந்து, என்ன நடக்கிறது என்பதை எங்களுக்குத் தெரியப்படுத்துங்கள். நீங்கள் அதைச் செய்வீர்களா-? தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. சரி, ஐயா
இப்பொழுது... (சபையார் தொடர்ந்து ஜெபத்தில் இருக்கும்படியாக சகோதரன் போஸ் அவர்கள் சபையாரைக் கேட்டுக்கொள்கிறார் - ஆசிரியர்.)
அப்படியே இன்னும் ஒரு சில நிமிடங்கள் தான், நாம் முடித்துவிடலாம். சரி. நிற்காமல் வாருங்கள்.
225. சகோதரியே, உங்கள் கோளாறு-? (அந்தச் சகோதரி பேசுகிறார்கள் - ஆசிரியர்.) ஓ தேவனே, மூட்டுவாதமுடைய இந்தப் பெண்மணியை நீர் சுகப்படுத்த வேண்டுமென்று கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறேன். நாளை இரவிலே இவர்களுடைய சாட்சி மகத்தானதாக இருப்பதாக, இயேசுவின் நாமத்தில். ஆமென். தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக, சகோதரியே.
226. சகோதரியே, உங்களுடைய கோளாறு-? (அந்தச் சகோதரி பேசுகிறார்கள் - ஆசிரியர்.) கண்கள். பரலோகப் பிதாவே, நான் இந்த வாலிப பெண்ணின் கரங்களைப் பிடிக்கையில், இவளுடைய பார்வையை திரும்பவும் இவளுக்குக் கொடுக்க வேண்டுமென்று கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறேன். இவள் தாமே சுகமடைந்து, நாளை இரவில் உமது மகிமைக்கு சாட்சி கூறுவாளாக, இயேசுவின் நாமத்தில். ஆமென். வாலிப் பெண்ணே, தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக.
227. சகோதரியே, உன்னுடைய கோளாறு-? (அந்தச் சகோதரி பேசுகிறார்கள் - ஆசிரியர்) நரம்புத்தளர்ச்சி மற்றும், தலைவலிகள். பரலோகப் பிதாவே, நீர் இந்த வாலிப பெண்ணை ஆசீர்வதித்து, நரம்புத்தளர்ச்சியிலிருந்தும் தலைவலிகளிலிருந்தும் இவளைச் சுகப்படுத்த வேண்டுமென்று நான் ஜெபிக்கிறேன். அது முதற்கொண்டு, அது ஒரு போதும் தொல்லைப் படுத்தவேயில்லை" என்று நாளை இரவிலே இவளுடைய சாட்சி இருப்பதாக இயேசுவின் நாமத்தில், இந்த ஆசீர்வாதத்திற்காக ஜெபிக்கிறேன். ஆமென். தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக, சகோதரியே.
228. உங்களுடைய கோளாறு-? (அந்தச் சகோதரி பேசுகிறார்கள் - ஆசிரியர்) சைனஸ் பிரச்சனை (Sinus). ஓ தேவனே, நீர் சகலத்தையும் அறிந்திருக்கிறீர். நீர் அன்பான இந்தப் பெண்மணியை இந்தக் கோளாறிலிருந்து சுகப்படுத்த வேண்டுமென்று இவர்களுக்காக ஜெபிக்கிறேன். இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், "நான் சுகமடைந்து விட்டேன்" என்று இவளுடைய சாட்சியானது நாளை இரவிலே இருப்பதாக. ஆமென்.
229. தேவன் உம்மை ஆசீர்வதிப்பாராக, ஐயா. (அந்தச் சகோதரன் பேசுகிறார் - ஆசிரியர்.) அன்புள்ள தேவனே, இந்த அன்பு மனிதர் இருமடங்கு முறிவை (double rupture) உடையவராயிருந்து, உமது ஆவியின் இரட்டிப்பான பங்கை வாஞ்சிக்கிறார், தேவனே, உமது ஊழியக்காரனாக நான் இவர்மேல் கரங்களை வைத்து, இந்நாளின் தேவையை அறிந்து, இவர் கேட்கிற காரியங்களை நீர் அருள வேண்டுமென்று ஜெபிக்கிறேன். இயேசுவின் நாமத்தில், நான் உத்தமத்தோடு வேண்டிக்கொள்கிறேன். ஆமென். தேவன் உம்மை ஆசீர்வதிப்பாராக.
230. (அந்தச் சகோதரி பேசுகிறார்கள் - ஆசிரியர்) ஓ, முதுகிலுள்ள காயத்திற்காக, மேலும் ஒரு... நீங்கள் நாளை இரவில் இங்கே மேலே வந்து, சாட்சி கூறி... சொல்லுவீர்கள் என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்கள். மேலும் உங்கள் வயிறு, உங்களால் மறுபடியும் சாப்பிட முடியுமா-? என்று. பரலோகப் பிதாவே, நான் இந்தப் பெண்மணியை ஆசீர்வதிக்கிறேன், கர்த்தராகிய இயேசுவைக் குறித்து இவர்களுடைய சுற்றுப்புறத்தார் இடத்தில் ஒரு சாட்சிக்காக, இவர்களுடைய சுகமளித்தலுக்கு நான் வேண்டுதல் செய்கிறேன். இயேசுவின் நாமத்தில், இதைக் கேட்கிறேன். ஆமென். இப்பொழுது, நாளை நாங்கள் கேட்கும்படி செய்யுங்கள்.
231. இப்பொழுது, ஆமாம். (அந்தச் சகோதரி பேசுகிறார்கள் - ஆசிரியர்.) ஆமாம், காது கேட்பதில் குறைபாடு மற்றும் விறைப்பான விரல். சரி. நீங்கள்.... பூரண கேட்கும் திறனைப் பெறப் போகிறீர்கள் என்று விசுவாசிக்கிறீர்களா, நீங்கள் பூரண கேட்கும் திறனை பெற்று, உங்கள் விரலும் சுகமடையப் போகிறது என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா-? எங்கள் பரலோகப் பிதாவே, இந்தப் பெண்மணியை நீர் ஆசீர்வதித்து, இவர்களுடைய கேட்கும் திறனை பரிபூரணமாக்கி, இவர்களுடைய வளையாத விரலையும் சுகப்படுத்தியருளும். நாளை இரவிலே தேவனுடைய மகிமைக்கு சாட்சி இருக்க வேண்டுமென்று, இதற்காக ஜெபிக்கிறேன், இயேசுவின் நாமத்தில். ஆமென். தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக, சகோதரியே.
நாங்கள் அதைக் கேட்போம் என்று விசுவாசிக்கிறேன், நீயும் அவ்வாறு விசுவாசிக்க-வில்லையா-? (சபையார், "ஆமென்” என்று கூறுகிறார்கள் - ஆசிரியர்.) நான் விசுவாசித்துக் கொண்டிருக்கிறேன்.
இங்கே வாருங்கள். (அந்தச் சகோதரி பேசுகிறார்கள் - ஆசிரியர்.)
232. எங்கள் பரலோகப் பிதாவே, இந்தப் பிள்ளை இங்கே நின்று கொண்டு, வேண்டிக் கொள்கையில், வெறுமனே ஒரு வாலிப பெண் ஜீவியத்தின் இக்கட்டான சூழ்நிலையில் இங்கேயிருக்க, இந்த நரம்புத் தளர்ச்சியில் இருந்தும், இவளுடைய கழுத்திலுள்ள இந்த வளர்ச்சியில் இருந்தும் நீர் இவளைச் சுகப்படுத்த வேண்டுமென்று ஜெபிக்கிறேன், கர்த்தாவே. நாளை இரவில், இவள் திரும்பி வந்து, இந்த வளர்ச்சி போய் விட்டது என்றும், இவளுடைய நரம்புத் தளர்ச்சியும் போய் விட்டது என்றும் கூறி, இவள் சுகமாயிருப்பாளாக, அப்பொழுது இவள் உம்மைச் சேவிக்க முடியுமே. தேவனே, அப்படியானால் நீர் இதைச் செய்தால், நான் இதைப்போன்ற ஒரு ஜெபவரிசையை தொடர்ந்து நடத்துவேன். இதை அருளும், இயேசுவின் நாமத்தில். ஆமென். சகோதரியே, தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக.
233. உங்கள் கோளாறு, சகோதரியே-? (அந்தச் சகோதரி பேசுகிறார்கள் - ஆசிரியர்.) உயர் இரத்தம் மற்றும் மூட்டுவாதம். பரலோகப் பிதாவே, நான் இந்த அன்பான ஸ்திரீயை ஆசீர்வதிக்கிறேன். நான் இந்த கரங்களைப் பிடிக்கையில், அநேகமாக இது ஒரு சிறு குழந்தையின் கன்னத்தை அநேக தடவைகள் அன்பாகத் தட்டிக் கொடுத்தும், அந்தக் குழந்தையானது வியாதிப்பட்டிருந்த போது, தொட்டிலை ஆட்டியும் இருந்திருக்கும். ஓ பிதாவே, நீர் இந்த மூட்டுவாதத்தையும், கோளாறையும் இவர்களை விட்டு அகற்றிப்போட்டு, இவர்கள் தாமே நாளை இரவில் களிகூர்ந்தபடியே திரும்பி வந்து, "அது என்னை விட்டுப் போய்விட்டது, நான் சுகமாயிருக்கிறேன்" என்று கூற வேண்டுமென்று ஜெபிக்கிறேன். இயேசுவின் நாமத்தில். ஆமென்.
234. (யாரோ ஒருவர் சகோதரன் பிரன்ஹாம் அவர்களிடம் பேசுகிறார்கள் - ஆசிரியர்) அந்தச் சிறு குழந்தை, செவிடும் ஊமையுமான அந்தச் சிறு குழந்தை "அம்மா" என்று கூறுகிறது மற்றும் கேட்கவும் முடிகிறது. (சபையார் களிகூருகின்றனர்.) Let... இப்பொழுது அவர்களை திரும்ப மேலே மேடைக்கு அனுப்புங்கள்.
உங்களுடைய கோளாறு-? (அந்தச் சகோதரி பேசுகிறார்கள் - ஆசிரியர்.) ஓ தேவனே, கிறிஸ்துவின் நாமத்தில், இந்தப் பெண்ணைச் சுகப்படுத்தி, இவர்களைக் குணமாக்கும். இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன். ஆமென்.
235. அவள் என்ன சொல்லுகிறாள்-? (குழந்தையை வைத்திருக்கும் அந்தப் பெண் சகோதரன் பிரன்ஹாமிடம் பேசுகிறார்கள் - ஆசிரியர்.) அம்மா, மா. நல்லது, அது மிகவும் அருமையானது. இப்பொழுது, நீ என்னுடைய குட்டி பெண் சிநேகிதி. நீ அதை விசுவாசிக்கிறாயா...-? உன்னால், "அம்மா" என்று எனக்காக சொல்ல முடியுமா-? அம்மா. அம்மா. (சகோதரன் பிரன்ஹாம் அந்தப் பெண்ணிடம் கேட்கிறார்.) சொல்லு, உன்னால் அதைச் (சொல்ல) முடிகிறதா என்று பார், அப்படியானால்.... மா. மா. மா. இப்பொழுது அதைச் சொல்லு. மா. இவள் கடினமாக முயற்சி செய்கிறாள். மா. மா. மா. மா. மா. இவள் தன்னுடைய வாயைச் சப்பும்படி வைக்க நான் முயல்வதாக இவள் நினைத்துக் கொள்கிறாள், உங்களுக்குப் புரிகிறதா-? பார். (சகோதரன் பிரன்ஹாம் தம்முடைய கரங்களைத் தட்டுகிறார்.) எங்கிருந்தாலும் ஒரு விதத்தில் இசையை எழுப்புங்கள் (ஆர்கன் இசைக்கருவி இசைப்பவர் ஒரு சில இசைத்தந்திகளை இசைக்கிறார்.) ம்ம்ம். ம்ம்ம். மா. அம்மா.
236. அங்கே கீழே இவள் அதைச் சொன்னாள், இவள் சொன்னாளா-? (அந்தப் பெண் சகோதரன் பிரன்ஹாமிடம் பேசுகிறாள் - ஆசிரியர்.) இவர்கள் இவளை இங்கே வெளியே கொண்டு போனார்கள்... நீங்கள் தான் தாயா-? இவளைக் கொண்டு சென்ற பக்கத்தில் இருந்தவர், அவள் இவளை வெளியே கதவுக்குக் கொண்டு போன (போது), இவள், "மா" என்றாளாம். மேலும் இப்பொழுது, அந்த ஆவி இவளை விட்டுப் போய்விட்டது என்பதைத் தான் அது காண்பிக்கிறது. இவள் தனது ஜீவியத்தில் ஒருபோதும் பேசினதோ, அல்லது கேட்டதோ கிடையாது. இவள் ஒரு குழந்தையாக இருக்கிறாள். இப்பொழுது, இவள் எவ்வாறு பேசுகிறாள் என்று இவளை நாளைக்கு நீ சற்றே பழக்குவித்து, இவளைத் திரும்பக் கொண்டுவர முடிந்தால், நாளை இரவில் நீ இவளைத் திரும்பக் கொண்டுவர முடியுமா, அது சாத்தியப்படுமா-? என்ன நடந்தது என்று, கவனித்துக் கொண்டிருக்கிறவர்கள் (audience) காணும்படி விரும்புகிறேன். நீ அதைச் செய்வாயா-?
237. நீங்கள் யார், நார்வே நாட்டைச் சேர்ந்தவர்களா, அல்லது ஏதோவொன்றா-? ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்தவர். நல்லது, அது மிகவும் அருமை. ஆயினும் இவள் ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்தவளல்ல, அப்படித்தானே-? நான் அவ்வாறு நினைக்கவில்லை. இவள் ஐயர்லாந்தைச் சேர்ந்த ஒரு பெண் பிள்ளை போன்று காணப்படுகிறாள். ஆம், ஐயா. ஊ-? ஓ, ஆமாம். இவளுடைய தகப்பனார் வேலை செய்கிறார், மேலும் இவளுடைய தாயாருக்கு இரண்டு சிறு பிள்ளைகள் இருக்கிறார்கள், ஆனால் இன்றிரவு இந்தப் பிள்ளை கேட்கவும் பேசவும் செய்திருக்கிறது. பாருங்கள்-? இப்பொழுது, அது அப்படியே – அது அப்படியே உண்மையான விசுவாசமாயிருக்கிறது. அப்படியே போய் அதை விசுவாசி; அவ்வளவு தான். நான் என்ன செய்து கொண்டிருக்கிறேன் என்றால், என்னால் சிறந்த முறையில் நான் என்னைத் தானே அங்கே சேர்த்து, அப்படியே ஜனங்களுக்காக விசுவாசிக்க முயற்சித்து, அதன் பிறகு என்ன சம்பவிக்கிறது என்று பார்க்கிறேன். இது கிரியை செய்யுமானால், ஒவ்வொரு இரவும் இதைப் போன்றே ஒரு ஜெபவரிசையை நடத்துவேன். சரி. தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக.
238. இப்பொழுது, நான் நாளை இரவு நீங்கள் கூறுவதைக் கேட்க விரும்புகிறேன். நீங்கள் இவளைப் பழக்குவியுங்கள். இப்பொழுது, எவ்வாறு.... கூறுவது என்று இவளுக்குத் தெரியவில்லை . பார், நாம், “உன்னுடைய காதை இழுத்துக் காட்டு" என்று கூறினால், இவள் - இவள் அதைச் செய்ய ஆரம்பித்தாள். இவள் "உன்னுடைய விரலை அசைத்துக் காட்டு" என்று கூறினாலோ, அல்லது அதைச் செய்யும்படி அவளை வைத்தாலோ, இவள் அதை நடித்துக் காட்டினாளே. இப்பொழுது, நாம் இவளை... போகும்படி செய்ய முயற்சிக்கிறோம் என்று நினைத்துக் கொள்கிறாள். (சகோதரன் பிரன்ஹாம் வாயினால் சப்பும் போது உண்டாகும் ஒலியை எழுப்புகிறார் - ஆசிரியர்) பார்-? ஆனால் நீ ஒரு ஒலியை எழுப்பியாக வேண்டும். உனக்குப் புரிகிறதா-? நீ திரும்ப நாளை இரவில் இவளைக் கொண்டு வா. அல்லது உனக்கு முடியாவிட்டால், எப்படியும், அடுத்த இரவில், எனவே கவனித்துக் கொண்டிருக்கும்.... நான் இவளை நாளை இரவில் காண விரும்புகிறேன். நாளை இரவில் இவள் பேசுவாள் என்று நான் விசுவாசிக்கிறேன். இவள், "அம்மா" என்றும் மற்றவற்றையும் கூறிக் கொண்டிருந்தாள். நீ கூறுவதில்லையா-? இப்பொழுது அதை என்னோடு கூட விசுவாசிக்கிறாயா-? சரி, தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக, சகோதரியே. சரி.
239. உங்கள் கோளாறு, சகோதரியே-? (அந்தச் சகோதரி பேசுகிறார்கள் - ஆசிரியர்.) ஓ அன்புள்ள தேவனே, இந்தப் பரிதாபமான சீமாட்டி, ஒரு நல்ல பெண்மணி, இங்கே நின்று கொண்டிருக்கையில், இவர்களைச் சுகப்படுத்தும். இயேசு கிறிஸ்துவின் நாமத்தின் மூலமாக, நீர் இவர்களைச் சுகப்படுத்த வேண்டுமென்று ஜெபிக்கிறேன். ஆமென். தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. இப்பொழுது, நாளை இரவில் உங்களிடமிருந்து நான் கேட்க விரும்புகிறேன்.
240. உங்கள் கோளாறு-? (அந்தச் சகோதரி பேசுகிறார்கள் - ஆசிரியர்.) ஓ தேவனே, இந்த வயிற்றுக் கோளாறிலிருந்தும், சிறுநீரகக் கோளாறிலிருந்தும் எங்கள் சகோதரியை சுகப்படுத்தி அருளும். இவர்கள் தாமே நாளை இரவில் திரும்பி வந்து, "நல்லது, அதெல்லாம் போய் விட்டது" என்று கூறுவார்களாக. இயேசுவின் நாமத்தில், நாங்கள் ஜெபிக்கிறோம். ஆமென். நீங்கள் இப்பொழுது அதை விசுவாசிக்கிறீர்களா-? சரி. அது சரி.
241. சகோதரியே, உங்கள் பிரச்சனை-? (அந்தச் சகோதரி பேசுகிறார்கள் - ஆசிரியர்.) இடது கண்ணில் உள்ள குருடு மற்றும் வலது கண்ணில் உள்ள பார்வையானது இழக்கப்பட்டு வருவது. ஓ என்னே, அது மிகவும் மோசமாக உள்ளது. அப்படியே அழகான சிறு பெண். இப்பொழுது, இந்த இடது கண் மூலமாக பார்க்க முடிகிறது என்றும், வலது கண்ணும் மீண்டும் நன்றாக இருக்கிறது என்றும் நாளை இரவில், நீ மேலே வந்து, எங்களிடம் காட்டவும், எங்களை நோக்கிச் சுட்டிக்காட்டவும், எங்களிடம் சொல்லவும் கூட செய்ய உன்னால் முடியும் என்று நீ இப்பொழுது, விசுவாசிக்கிறாயா-? நீ அதை விசுவாசிக்க மாட்டாயா-? நீ அதைச் செய்ய மாட்டாயா-? நீ அதை விசுவாசிப்பாயா-? நான்..... (அந்தச் சகோதரி பேசுகிறார்கள்.) ஆமென். அது அருமையானது, தேனே.
242. எங்கள் பரலோகப் பிதாவே, குருடாகிக் கொண்டு, இங்கே நின்று கொண்டிருக்கும் இந்தப் பிள்ளையை நான் ஆசீர்வதிக்கிறேன். இப்பொழுதும், கர்த்தாவே, நீர் சகலத்தையும் அறிந்து இருக்கிறீர், நாளை இரவில் திரளான சாட்சிகளில் இதுவும் ஒன்றாக இருக்கும் என்று நான் உம்மை நம்பி, நிச்சயம் உடையவனாய் இருக்கிறேன். இதை அருளும், கர்த்தாவே. இந்தக் குருடான கண்ணிலிருந்து இந்தப் பிள்ளையால் காண இயலும்படி இருப்பதாக, செவிடும் ஊமையுமான அந்தச் சிறுமியும் பேசவும் கேட்கவும் இயலுவதாக. இதை அருளும், கர்த்தாவே. இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன். ஆமென். இப்பொழுது, சகோதரியே, உன்னிடமிருந்து நாங்கள் கேட்கட்டும். நான் அதை விசுவாசிக்கிறேன். நீங்கள் அதை விசுவாசிக்கவில்லையா-? சரி. சரி.
243. (அந்தச் சகோதரி பேசுகிறார்கள் - ஆசிரியர்.) ஓ இயேசுவே, இந்தப் பரிதாபமான பெண்மணி, மூட்டுவாதம், இவர்களுடைய காதுகளில் சத்தம் ஒலிக்கிறது, சைனஸ் தொற்று, உம்மால் இவைகளைச் சுகப்படுத்த முடியும். கர்த்தாவே, விசுவாசமுள்ள ஒரு ஜெபமாக, நான் இவர்களை ஆசீர்வதிக்கிறேன். விசுவாசமுள்ள ஜெபம் பிணியாளியை இரட்சிக்கும் என்று நீர் சொல்லி இருக்கிறீர். என்னுடைய முழு இருதயத்தோடும், நான் என்னைத் தானே உமது ஆவிக்கு விட்டுக் கொடுக்க முயற்சித்து, நீர் இங்கே மேடையில் நின்று கொண்டிருக்கிறீர் என்று அறிகிறேன். இவர்களுடைய சுகத்திற்காக, கிறிஸ்துவின் நாமத்தின் மூலமாக, நான் வேண்டிக்கொள்கிறேன். ஆமென்.
244. (அந்தச் சகோதரன் பேசுகிறார் - ஆசிரியர்.) காது கேட்பது கஷ்டமாக - கடினமாக இருக்கிறதா-? நாளை இரவில், உங்களுக்கு காது கேட்கும் குறைபாடு இருக்காது என்று விசுவாசிக்கிறீரா-? பரலோகப் பிதாவே, இவரைச் செவிடாக்கியிருக்கிற அந்த அசுத்த ஆவி, அந்தச் செவிட்டு ஆவி இவரை விட்டு விலகி, நாளை இரவில், இவர் களிகூர்ந்தபடியே திரும்பி வந்து, தேவனைத் துதித்து, பூரணமாகக் காது கேட்கக் கூடும்படியாக, நான் இன்றிரவு இவருடைய சுகத்திற்காக வேண்டிக் கொள்கிறேன். கிறிஸ்துவின் நாமத்தில், நான் இதை வேண்டிக் கொள்கிறேன். ஆமென். இப்பொழுது, நாளை இரவில், நான் உம்மிடமிருந்து கேட்க விரும்புகிறேன். உ-ஊ.
245. சகோதரியே, உங்கள் கோளாறு-? (அந்தச் சகோதரி பேசுகிறார்கள் - ஆசிரியர்.) உங்கள் குழந்தை. பரலோகப் பிதாவே, இவர்களுடைய பிள்ளையாகிய, இவர்கள் குழந்தைக்காக இந்தத் தாயாரை ஆசீர்வதிக்கிறேன். சூனேமிய ஸ்திரீ தன்னுடைய பிள்ளைக்காக வந்தது போல, பரலோகத்தின் தேவன் தாமே இவர்கள் பிள்ளையை ஆசீர்வதித்து, இதைச் சுகப்படுத்துவாராக, இயேசுவின் நாமத்தில். ஆமென். சகோதரியே, தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. சரி.
246. தேவனே, ஒரு சிறுமியாக, இவள் கூட விளையாடின அந்தச் சகோதரிக்காக இவள் நின்று கொண்டிருக்கிறாள். அவளுக்கு புற்றுநோய் உள்ளது. நீர் மாத்திரமே அவளைச் சுகப்படுத்த முடியும். ஒரு சில வாரங்களுக்கு முன்பு, கீழே கென்டக்கியிலிருந்த அந்தச் சீமாட்டியைப் போன்று, செய்தி வருவதாக. அவள் சுகமடைவாளாக, இயேசுவின் நாமத்தில். ஆமென். சகோதரியே, தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக. இப்பொழுது, இப்பொழுது விசுவாசி. அவரை அனுபவத்தின் மூலமாகக் கண்டு கொள். சரி.
எத்தனை பேர் கர்த்தரை நேசிக்கிறீர்கள்-? (சபையார், "ஆமென்" என்று கூறுகிறார்கள் - ஆசிரியர்) |
247. நான் கர்த்தராகிய இயேசுவை என்னுடைய முழு இருதயத்தோடும் நேசிக்கிறேன். அவர் அற்புதமானவர் இல்லையா-? நான் - நான் அவரை நேசிக்கிறேன். கர்த்தருக்கு துதி உண்டாவதாக. தேவன் உண்மையாகவே இருக்கிறார், இல்லையா-? அவர்கள், "தேவன் உண்மையாகவே இருக்கிறார் (God Is Real). என்னுடைய ஆத்துமாவில் என்னால் அவரை உணர முடிகிறது" என்று பாடும் அந்தப் பாடல் உங்களுக்குத் தெரியுமா-? இயேசு அற்புதமாய் இருக்கிறார். நாம் அப்படியே ஒரு நிமிடம் ஜெபிப்போம்.
248. பரலோகப் பிதாவே, நீர் தாமே உம்மை மகிமைப்படுத்தும்படி ஜெபிக்கிறேன். நீர் இங்கே இருக்கிறீர் என்றும், நீர் தேவனாயிருக்கிறீர் என்றும், நீர் உண்மையாகவே இருக்கிறீர் (You're real) என்றும் இந்த ஜனங்கள் அறிந்து கொள்ளட்டும். நான் கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறேன். தேவனே, சரியாக இப்பொழுதே, எனக்கு உதவி செய்யும், இயேசுவின் நாமத்தில். ஆமென்.
249. எனக்குத் தெரியவில்லை. பில்லி, இன்னும் எத்தனை பேர் அங்கே கீழே நமக்கு இருக்கிறார்கள்-? இன்னும் ஏறக்குறைய ஐந்து பேரா-? நாம் கூட்டத்தின் ஒழுங்கையே மாற்றி விட்டோம் என்று நினைக்கிறேன். தேவன் இங்கே இருக்கிறார் என்று நீங்கள் விசுவாசிக்கவில்லையா-? (சபையார் "ஆமென்" என்று கூறுகிறார்கள் - ஆசிரியர்.)
சரியாக அங்கே உட்கார்ந்து கொண்டிருக்கும் சகோதரியே, உங்களுக்கு மூச்சுவிடுவது மோசமாய் உள்ளது, இல்லையா-? தேவன் உங்களைச் சுகப்படுத்துவார் என்று விசுவாசிக்கிறீர்களா-? ஆமென். இப்பொழுது அது போய்விட்டது. கர்த்தருக்கு நன்றி.
அவர் அற்புதமானவர் இல்லையா-? தேவன் இங்கேயிருக்கிறார். என்னால் இனியும் இதைப் பிடித்துக் கொண்டிருக்க முடியாது. அது அப்படியே என்னைக் கடினமாக உள் இழுத்துக் கொண்டு இருக்கிறது. தரிசனங்கள் எல்லாவிடங்களிலும் பளிச்சிட்டுக் கொண்டி ருக்கின்றன (flashing). ஓ, எவ்வளவு அற்புதமாயுள்ளது.
250. அதோ தேவனுடைய தூதனானவர் நின்று கொண்டிருக்கிறார், சைனஸ் பிரச்சனையோடு அங்கே உட்கார்ந்து கொண்டிருக்கும் அந்த சீமாட்டியின் மேல் சரியாக அங்கே அவர் நின்று கொண்டிருக்கிறார். மற்ற பக்கத்தில் அந்த வரிசையிலிருந்து ஏறக்குறைய மூன்று பேருக்குப் பின்னால் இருக்கும் சீமாட்டியே, நீங்கள் விசுவாசிப்பீர்களானால், நீங்கள் உங்கள் முழு இருதயத்தோடும் விசுவாசிப்பீர்களானால், உங்களால் சுகமடைய முடியும். நீங்கள் அதை விசுவாசிப்பீர்களானால், உங்களால் அதைக் கொண்டிருக்க முடியும். ஆமென்.
அங்கே வெளியிலுள்ள நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்-? கேட்டுக் கொண்டிருக்கும் கூட்டத்தினரில் இருக்கும் நீங்கள், நீங்கள் விசுவாசிக்கிறீர்களா-? (சபையார், "ஆமென்” என்று கூறுகிறார்கள் - ஆசிரியர்.)
251. சீமாட்டியே, நீங்கள் விசுவாசிக்கிறீர்களா-? நீங்கள் நினைத்துக் கொண்டிருக்கும் அந்த நரம்புச் சம்பந்தமான கோளாறு எல்லாம் உங்களை விட்டு விலகி விடும், அப்படித்தானே-? ஆமென். அந்த தொண்டையிலுள்ள கோளாறும் கூட உங்களை விட்டுப் போய் விடும், இல்லையா-? அந்தப் புற்றுநோய் உங்கள் தொண்டையை விட்டு போய்விடும் என்று விசுவாசிக்கிறீர்களா-? நீங்கள் விசுவாசிக்கிறீர்களா-? நீங்கள் விசுவாசிப்பீர்களானால், கர்த்தரைத் துதித்து, “நான் அவரை என்னுடைய முழு இருதயத்தோடும் விசுவாசிக்கிறேன்” என்று கூறுங்கள். ஆமென்.
அப்படியானால், இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், நான் இந்த சத்துரு இந்தப் பெண்மணியை விட்டு விலகும்படி கண்டனம் செய்கிறேன். ஆமென்.
தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. களி கூர்ந்து கொண்டே போங்கள். ஆமென். அவர் அற்புதமானவர் இல்லையா-?
252. கிறிஸ்து உங்களைச் சுகப்படுத்துவார் என்று விசுவாசிக்கிறீர்களா-? ஆமாம், உங்கள் மகன் மனநிலை சரியில்லாமல் இருக்கிறான், இல்லையா-? அது வினோதமாக இருக்கவில்லையா-? ஆனால் உங்களுக்கு சைனஸ் பிரச்சனையும் கூட இருக்கிறது, அதோடு கூட நரம்புக் கோளாறிலிருந்தும் நீங்கள் விடுவிக்கப்பட விரும்புகிறீர்கள். இயேசு உங்களைச் சுகப்படுத்துவார் என்று விசுவாசிக்கிறீர்களா-? ஆமென்.
பாருங்கள், இங்கே கடந்து போகையில், எல்லா நேரமும், தரிசனங்கள் வந்து கொண்டிருந்தன என்பதை நீங்கள் அறிய விரும்புகிறேன். நான் அப்படியே எதையும் சொல்லவில்லை. ஆமென். சகோதரியே, போய் அதைப் பெற்றுக்கொள்ளுங்கள். கர்த்தராகிய இயேசுவின் நாமத்தில், அதைப் பெற்றுக் கொள்ளுங்கள். அல்லேலூயா
அவர் இங்கேயிருக்கிறார். அங்கே வெளியிலும் விசுவாசம் கொண்டிருந்து, அவர் உங்களை அழைக்க மாட்டாரா என்று பாருங்கள்.
253. எப்படியிருக்கிறீர்கள்-? சீமாட்டியே, உங்களைத் தெரியாது. தேவனுக்கு உங்களைத் தெரியும், இல்லையா-? நான் அவருடைய தீர்க்கதரிசி என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா-? இங்கே நடந்து போன இந்த ஜனங்கள் உண்மையில் ஆசீர்வதிக்கப்பட்டவர்களாக இருந்தார்கள் என்பதை விசுவாசிக்கிறீர்களா-? அப்படியானால் அவர்களைச் சுகமடையாமல் தடுத்தது எது-? அவர்களுடைய விசுவாசம் தான், அது சரி தானா-? தேவன் இங்கே மேடையின் மேல் நின்று கொண்டிருக்கிறார் என்று அவர் உங்களுக்கு நிரூபித்துக் காட்டுவாரானால்.... நான் உங்களை ஒரு போதும் கண்டதேயில்லை. நீங்கள் வெறுமனே ஒரு பெண்மணியாக, இங்கே மேடையின் மேல் வருகிறீர்கள். நீங்கள் எதற்காக இங்கே இருக்கிறீர்கள் என்று தேவன் என்னிடம் சொல்லுவாரானால், நான் அவருடைய தீர்க்கதரிசி என்று விசுவாசிப்பீர்களா-? உங்களில் மீதியான (மற்றவர்களும் அதை உங்கள் முழு இருதயத்தோடும் விசுவாசிப்பீர்களா-? நீங்கள் ஏதோவொன்றைக் குறித்து முழுவதும் பதட்டமாகவும், வருத்தமடைந்தும் இருக்கிறீர்கள். ஆமாம், அது மரணத்தினாலே தான் ஏற்பட்டது. அது உங்கள் மருமகன், சமீபத்தில் தான் அவர் கொல்லப்பட்டார். அது சரியே. நீங்கள் ஒரு நபரின் இரட்சிப்புக்காக ஜெபித்துக் கொண்டிருக்கும், அந்த நபருக்காகவே இங்கேயிருக்கிறீர்கள். அது உங்கள் மகள், ஆமாம், மேலும் வேறு இரண்டு பேருக்காகவும் இங்கேயிருக்கிறீர்கள். ஜனங்களுக்காக ஜெபிக்கப்படும்படியாக, நீங்கள் மூன்று கைக்குட்டைகளை வைத்திருக்கிறீர்கள். அது சரி தானே-? அது கர்த்தர் உரைக்கிறதாவது. இப்பொழுது, விசுவாசிக்கிறீர்களா-?
ஓ பரலோகத்தின் தேவனே, உமது இரக்கங்கள் இவர்கள் மேல் தங்கியிருந்து, இவைகளை ஆசீர்வதிப்பதாக, இயேசுவின் நாமத்தில். ஆமென்.
ஊ-? ஆமாம். ஆமென்.
விசுவாசம் கொண்டிருங்கள். நீங்கள் விசுவாசிக்கிறீர்களா-? (சபையார், "ஆமென்" என்று கூறுகிறார்கள் - ஆசிரியர்)
254. சிறு பெண்ணே, நீ முழுவதும் குதூகலமடைந்தவளாக, அங்கே இருக்கையின் கடைசியில் உட்கார்ந்து கொண்டிருப்பதாகத் தோன்றுகிறது. நான் கர்த்தருடைய ஊழியக்காரன் என்று விசுவாசிக்கிறாயா-? உன்னுடைய மனதிலே ஒரு சந்தேகமும் உனக்குக் கிடையாது தானே-? அந்த சிறுநீரகப் பிரச்சனையிலிருந்து, தேவன் உன்னைச் சுகப்படுத்தி, உன்னைக் குணப்படுத்துவார் என்று விசுவாசிக்கிறாயா-? புரிகிறதா-? புரிகிறதா-?
255. சிவப்புநிற உடையை அணிந்துகொண்டு, அவளுக்கு அடுத்ததாக உட்கார்ந்து கொண்டு இருப்பவளே, நீ எதற்காக அழுது கொண்டிருக்கிறாய்-? சிறு பெண்ணே, நான் தேவனுடைய தீர்க்கதரிசி என்று விசுவாசிக்கிறாயா-? உன்னுடைய கோளாறு என்னவென்று தேவன் என்னிடம் கூறுவாரானால், உன்னுடைய சுகத்தை ஏற்றுக்கொள்வாயா-? நீ விசுவாசிக்-கிறாயா-? காசநோய். இயேசு உன்னைச் சுகப்படுத்துவார் என்று விசுவாசிக்கிறாயா-?
256. உன்னுடைய கரத்தை மேலே உயர்த்தியிருக்கிற அந்த மற்ற சிறு பெண். நீ அதைக் குறித்து என்ன நினைக்கிறாய்-? ஒரு நிமிடம் இங்கே என்னை நோக்கிப் பார். நான் தேவனுடைய தீர்க்கதரிசி என்று விசுவாசிக்கிறாயா-? உன்னுடைய கோளாறு என்னவென்று தேவன் எனக்கு வெளிப்படுத்துவாரானால், அதை ஏற்றுக் கொள்வாயா-? உனக்கும் கூட சிறுநீரகப் பிரச்சனை உள்ளது. அது சரியே.
257. அங்கே உட்கார்ந்து கொண்டிருக்கும் சிறுவனே, சின்னஞ்சிறு பையனே, நீ என்ன நினைக்கிறாய்-? நீ அதைக் குறித்து என்ன நினைக்கிறாய்-? நான் தேவனுடைய ஊழியக்காரன் என்று விசுவாசிக்கிறாயா-? நீ என்ன விரும்புகிறாய் என்றோ, அல்லது உன்னைக் குறித்து வேறு ஏதோவொன்றை தேவன் எனக்கு வெளிப்படுத்துவாரானால், அதை ஏற்றுக் கொள்வாயா-? நீ அதைச் செய்வாயா-? (உனக்கு) வயிற்றுக்கோளாறு உள்ளது. அது சரி தான், இல்லையா-? நீ சுகமடைய விரும்புகிறாய். மேரிலேண்டுக்குத் திரும்பிச் சென்று, சுகமடைய விரும்புகிறாய், அது சரிதானா-? உ - ஊ.
258. உனக்கு அடுத்திருக்கும் அந்தப் பெண்மணியும் கூட மேரிலேண்டிலிருந்து வந்து இருக்கிறாள். சிவப்பு ஆடை அணிந்திருக்கும் அந்தச் சிறு பெண் பென்சில்வேனியாவிலிருந்து வந்திருக்கிறாள். அது சரியே. இந்த மற்ற பெண் மேரிலேண்டிலிருந்து வருகிறாள். அதுவும் கூட சரியே. நீங்கள் எல்லாருமே பட்டணத்திற்கு வெளியிலிருந்து வருகிறீர்கள். அது சரியே, இல்லையா-? அது சரியென்றால், உங்கள் கரங்களை உயர்த்துங்கள்.
259. சீமாட்டியே, நீ என்ன நினைக்கிறாய்-? நான் தேவனுடைய ஊழியக்காரன் ஊழியக்காரன் என்று விசுவாசிக்கிறாயா-? தேவனுடைய வல்லமை இங்கே இருக்கிறது என்று விசுவாசிக் கிறீர்களா-? தேவன் உங்களுக்கு உங்களுடைய வாஞ்சையை அருளுவார் என்று விசுவாசிக்கிறீர்களா-? அவர் செய்வார் என்று வேதாகமத்தில் தாம் வாக்குத்தத்தம் பண்ணினபடி, சகலத்தையும், உங்கள் இருதயத்தின் இரகசியங்களையும் வெளிப்படுத்தக் கூடிய கிறிஸ்துவாகிய தேவன் இங்கேயிருக்கிறார் என்று விசுவாசிக்கிறீர்களா-? நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா-? சரி. நீங்கள் மிகவும் மோசமான விதத்தில் பதட்டத்தோடு இருக்கிறீர்கள், இல்லையா-? நீங்கள் பதட்டமாயிருக்கும் காரணத்தினால், ஆகையால் அதில் இருந்து ஒரு வயிற்றுக்கோளாறையும் பெற்றிருக்கிறீர்கள். அது சரியே, காரணம் நீங்கள் பதட்டமாயிருக்கிறீர்கள். ஏறக்குறைய, அதோடுகூட சேர்த்து, நான் உங்களைப் பார்க்கையில், ஏராளமான தண்ணீர் உள்ளே பாய்ந்து கொண்டு வருவதைக் காண்கிறேன். வெளி நாட்டிலுள்ள யாரோ ஒருவரைக் குறித்து நீங்கள் கவலைப்படுகிறீர்கள். அது ஒரு மலைநாட்டில் உள்ளது அல்லது மேலே சுற்றி சுற்றி சுழன்று செல்லும்படியாக உள்ள ஒரு தேசத்தில் அது இருக்கிறது. அது ஒரு ஸ்கான்டிநேவியன் (நாடாக) (Scandinavian) உள்ளது; அது நார்வே தேசம். அது ஒரு மனிதனாக உள்ளது; அது உங்கள் மகன், அவன் ஒரு மருத்துவமனையில் இருக்கிறான் மேலும் அவன் முகத்திலும் கண்ணிலும் முழுவதும் விளங்காத விதமாக (funny - வழக்கத்திற்கு மாறாக) இருக்கிறான். அவனுக்கு மஞ்சள் காமாலை (yellow jaundice) ஏற்பட்டு உள்ளது, அவன் ஒரு மருத்துவமனையில் இருக்கிறான். அது சரியே, இல்லையா-? அது சரி என்றால், உன்னுடைய கரத்தை உயர்த்து. கர்த்தர் உரைக்கிறதாவது.
ஓ பரலோகத்தின் தேவனே, உமது ஆசீர்வாதங்களை அனுப்பி, ஆசீர்வதிக்க வேண்டுமென்று இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன்.
260. இங்கேயிருக்கும் ஜனங்களே, நீங்கள் விசுவாசிக்கிறீர்களா-? நீங்கள் ஆயத்தமாய் இருக்கிறீர்களா-? கிறிஸ்து ஆயத்தமாக இருக்கிறார். நீங்கள் ஆயத்தமாயிருந்தால், உங்களால் சுகமடைய முடியும். எழுந்து அவருக்கு துதியைச் செலுத்துங்கள். எழுந்து நின்று அவருக்கு மகிமையைச் செலுத்துங்கள்.
261. எங்கள் பரலோகப் பிதாவே, சரியாக இப்பொழுதே, பரிசுத்த ஆவியானவர் இந்தக் கட்டிடத்தினூடாக அசைவாடுகையில், ஒவ்வொரு சந்தேகத்தின் ஆவியையும், பிசாசையும் துரத்தி, தேவனுடைய வல்லமை தாமே ஆளுகையும் ஆட்சியும் செய்து, சுகப்படுத்தி, உயிரடையச் செய்ய வேண்டுமென்று ஜெபிக்கிறோம். 
இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், நான் ஜெபிக்கிறேன்.

*******